மத்திய அரசு அறிவித்துள்ள புதிய மாதிரி பள்ளித் திட்டம் காசுள்ளவர்க்கு கல்வி என்று எந்த ஒளிவு மறைவுமின்றி சொல்கிறது. மட்டுமின்றி கல்வியை வணிகமயமாக்குவதுதான் அய்முகூ அரசாங்கத்தின் அடிப்படை கொள்கை என்பதை மறு உறுதி செய்கிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் தாங்களே உள்கட்டுமான வசதிகள் அனைத்துக்கும் செலவு செய்து பின் லாபம் பார்க்க வேண்டியிருக்கிற நிலை அய்முகூ ஆட்சியாளர்களை ஆழ்ந்த கவலையில் தள்ளியிருக்கிறது. அதனால் நிலம் உட்பட உள்கட்டுமான வசதிகளை அரசே பாதுகாப்பாக செய்துவிடத்தான் இந்தப் புதிய திட்டம்.
மாதிரி பள்ளிகள் எப்படி இருக்கும் என்று அரசாங்கம் சில விசயங்கள் சொல்கிறது.
இங்கு ஆங்கில வழிக் கல்வி மட்டுமே தரப்படும். இந்தப் பள்ளிகள் அரசு - தனியார் கூட்டில் இயங்கும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையிலான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் தரத்தில் இருக்கும். இந்தியா முழுவதும் வட்டாரத்திற்கு (பிளாக் லெவல்) ஒன்று என்று முதலில் 2,500 பள்ளிகள் துவங்கப்படும். இதில் 356 பள்ளிகள் தமிழகத்தில் இருக்கும். இந்தப் பள்ளிகளில் உள் விளையாட்டரங்கம், வெளி மைதானம், நூலகம், மனமகிழ் மன்றம், பூந்தோட்டம் உட்பட அனைத்து உள் கட்டுமான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். கணினி பயிற்சிக்கென முழுநேர ஆசிரியர்கள் இருப்பார்கள்.
பலவீனமான குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் இருக்கும். ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் 1:25 என்றிருக்கும். வகுப்பறையில் 40 மாணவர்களுக்குள் தான் இருப்பார்கள். கல்வித் திட்டத்தில், தலைமைப் பண்புகள், கூட்டு உணர்வு, மென்பொருள் திறன், எதையும் எதிர்கொள்ளும் திறமைகள் ஆகியவை இடம் பெறும். சுகாதார கல்வியும், மாணவர் உடல் பரிசோதனையும் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும். மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கென சிறப்பு ஆசிரியர்கள் பணிக்கமர்த்தப்படுவர்.
கல்விச் சுற்றுலா செல்வது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்கப்படும். மாணவர்கள் சுதந்திரமான தேர்வுமுறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பள்ளி முதல்வரும், ஆசிரியர்களும் மாநில அரசாங்கத்தோடு கலந்தாலோசித்து சுதந்திர நெறிமுறை வழியாக தேர்வு செய்யப்படுவர்.
மாணவர்களுக்கு தேச உணர்வு ஊட்ட தேசிய பாதுகாப்பு படை இருக்கும். ஒழுக்க நெறி வாழ்க்கையை மாணவர்கள் ஏற்றுக் கொள்ள வைக்கப்படுவர்.
அனைத்து அம்சங்களும் அடங்கிய மாதிரி பள்ளி ஒன்று ஒரு வட்டாரத்திற்கு இருக்க வேண்டும் என்றும், மாணவர்களின் அனைத்தும் தழுவிய வளர்ச்சி அரசாங்கத்தின் நோக்கம் என்றும் சொல்லப்படுகிறது.
அரசு - தனியார் கூட்டின் நலன்களாக தனியார் போடும் மூலதனமிருப்பதால் அதிகமான பள்ளிகளை திறக்க வாய்ப்பு இருப்பதாகவும், தனியாரின் திறன் தரமான கல்வியை கொடுக்க உதவும் என்றும் அரசாங்கம் சொல்கிறது.
பள்ளிகளை தனியார் நடத்த வேண்டும். லாப நோக்கமில்லாத நிறுவனம், அறக்கட்டளை போன்ற எதுவாகவும் இருக்கலாம். அரசு, அரசாங்க ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கான தொகையை அளிக்கும்; பள்ளி தனியார் நிர்வாகத்தில் நடக்கும்.
குறைந்தபட்சம் 3 ஏக்கர் நிலப்பரப்பில் பள்ளி அமைய வேண்டும். தனியார் நிலத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். மாநில அரசு அதற்கு உதவ வேண்டும்.
7ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரையான வகுப்புகள் இருக்கும். மத்திய பாடத் திட்ட அடிப்படையான (சிபிஎஸ்இ) பள்ளிகளுக்கு தேவையான உள் கட்டமைப்புகள், ஆசிரியருக்கான வளங்கள் இருக்க வேண்டும்.
ஒரு வகுப்புக்கு 140 மாணவர்கள் அரசாங்க ஒதுக்கீட்டில் அனுப்பப்படுவார்கள். இதன் அதிகபட்ச எண்ணிக்கை 980 ஆக இருக்கும். ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டொன்றுக்கு ரூ.22,000 கல்விச் செலவு நிறுவனத்துக்கு தரப்படும். தனியார் 1,500 மாணவர்கள் வரை, அவர்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தில் பள்ளியில் சேர்த்துக் கொள்ளலாம்.
வட்டாரத்தில் 5ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் மட்டுமே அரசாங்க ஒதுக்கீட்டில் இடம் பெறுவர். நிர்வாக ஒதுக்கீட்டுக்கான அடிப்படைகள் எல்லாவற்றையும் அவர்களே தீர்மானித்துக் கொள்ளலாம். மாநில இட ஒதுக்கீட்டுக் கொள்கையோடு பெண் மாணவர்க ளுக்கு 33 சத இட ஒதுக்கீடும் பின்பற்றப்படும்.
8ஆம் வகுப்பு வரை அரசாங்க ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு கல்வி கட்டணம் இல்லை. அதற்குப் பிறகு இட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு 25 ரூபாயும் மற்றவர்களுக்கு 50 ரூபாயும் வசூலிக்கப்படும். நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கட்டணத்தை நிர்வாகம் பொருத்தமான முறையில் தீர்மானித்துக் கொள்ளலாம். ஒரே நிறுவனம் இந்தியா முழுவதும் 50 பள்ளிகளை நடத்தலாம். ஒரு மாநிலத்தில் மட்டும் 20 பள்ளிகளை நடத்தலாம்.
இந்தப் பள்ளி மாணவர்களுக்கும், மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை, பேருந்து கட்டண சலுகை இன்னபிற சலுகைகள் எல்லாம் வழங்கப்பட வேண்டும். ஆனால் மாநில அரசாங்கத்தோடு தனியாக எதுவும் ஒப்பந்தம் செய்து கொள்ளத் தேவையில்லை. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இந்தக் கல்வி நிலையத்தில் வருடத்தில் 75 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். கார்ப்பரேட் சமூக பொறுப்பின் அடிப்படையில் பள்ளி இயங்கி வரும் இடங்களில் இந்தப் பள்ளிகள் அனுமதிக்கப்பட மாட்டாது. இது பற்றி மாநில அரசுகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அமெரிக்கப் பள்ளிகள் அமைத்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா. அவருக்கு இந்தத் திட்டத்தில் வரவேற்பு தவிர வேறேதும் இருக்க இடமில்லை. தனியார் கல்வி மீதான அவரது அசைக்க முடியாத நம்பிக்கையை அவரது ஆட்சிக் காலத்தின் முதல் ஆண்டிலேயே தமிழக மக்கள் பார்த்துவிட்டார்கள்.
இப்போது, 2009 ஜூலையில், கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான் மாதிரிப் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்றும், மாதிரி பள்ளிகள் அமைக்கும் ஒப்பந்தத்துக்கு விண்ணப்பிப் பதற்கான கடைசி தேதி 15.11.2013 என்றும் இதுவரை தமிழ்நாட்டில் இருந்து யாரும் விண்ணப்பிக்கவில்லை என்றும், எப்படியென்றாலும் பள்ளிகளை அடுத்த கல்வியாண்டில் தான் துவக்க முடியும், அதற்குள் தேர்தல் முடிந்து மத்தியில் புதிய ஆட்சி வந்துவிடும், பின், காவிரி, கச்சத்தீவு, முல்லைப் பெரியாறு, என்எல்சி போன்ற பிரச்சனைகளில் தமிழ்நாட்டின் நலன் காக்க நடவடிக்கைகள் மேற்கொண்டதுபோல், தமிழக மக்களின் நலனுக்கேற்றவாறு மாதிரிப் பள்ளிகள் பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்.
தாய்மொழிக் கல்வி பற்றி பேசும் கருணாநிதி ஆங்கில வழிக் கல்வி மட்டுமே இருக்கும் மாதிரிப் பள்ளிகளுக்கு அன்று ஏன் அனுமதி கொடுத்தார் என்று கேள்வியும் எழுப்புகிறார்.
இந்திரா காந்தியின் அவசர நிலை காலத்தில்தான் கல்வி மாநில பட்டியலிலிருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இந்திய அரசு அறிவியல்பூர்வ கல்வி திட்டத்தை கல்வியாளர்கள், ஆசிரியர், மாணவர் அமைப்புகள் ஆகியோரைக் கொண்டு உருவாக்குவதற்குப் பதிலாக அதே மெக்காலே திட்டத்தின் அடிப்படையிலான கல்வியையே அளித்து வருவதோடு, கல்வியை கடைச் சரக்காக்கியும்விட்டது.
உலகின் பல முன்னேறிய நாடுகளிலும் கல்வியை அரசே ஏற்று நடத்திக் கொண்டிருக்கும்போது, அரசு கஜானாவின் பெரும்பகுதியை ராணுவத்துக்கு செலவு செய்துவிட்டு கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசியத் துறைகள் தனியார் கொள்ளை லாபம் அடிக்க திறந்து விடப்படுகின்றன. இந்த மாதிரி பள்ளிகளும் அரசு பின்பற்றுகிற நவதாராளவாதக் கொள்கைகளின் அங்கமாகவே உள்ளன.
இதையே மாநில அரசாங்கங்களும் போட்டி போட்டு ‘மூலதன ஈர்ப்பு’ என்று கூறி அமல்படுத்தி வரும்போது, மாநில உரிமை பறிப்பு என்ற முகாந்திரத்திலிருந்து மட்டுமே இதை எதிர்க்கின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)ன் இந்திய மாணவர் சங்கமும் (எஸ்எஃப்அய்) இதே முகாந்திரத்தில் இருந்து எதிர்ப்பதோடு அதிமுக போன்ற மாநில அரசாங்கங்களுக்கு முற்போக்கு சாயம் பூசுகிற வேலையையும் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
இதை தடுத்து நிறுத்த புது அவதாரம் எடுத்திருக்கிறார் கருணாநிதி. மாதிரிப் பள்ளிகளை மத்திய அரசுத் திட்டத்தில் மாநில அரசே நடத்த வேண்டும் என்கிறார். மக்கள் நம்பமாட் டார்கள். மத்திய அமைச்சரவையில் திமுக இருந்தபோது, அமைச்சரவை கூட்டங்களில் திமுக அமைச்சர்கள் கலந்து கொண்டு பெட்ரோல் விலை உயர்வு உட்பட எல்லா கொள்கை முடிவுகளிலும் உடன்பட்டுவிட்டு தமிழகத்திற்கு வந்து எதிர் அறிக்கை விடுவதைப் பார்த்து மக்கள் சலித்துப் போயிருக்கிறார்கள்.
சாதிய கழிசடை அரசியல் நடத்திவரும் பாமக உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருக்கிறது. இதைப் பாராட்டி மெச்சிப் புகழ்கிறார் கருணாநிதி. இவர்கள் இருவருக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தமில்லை என்பதை மக்கள் அறிவர்.
அரசாங்கத்தின் இந்த அரசு - தனியார் கூட்டு பிபிபி (பப்ளிக் - பிரைவேட் பார்ட்னர் ஷிப்) கொள்கை, எல்லா துறைகளிலும் அரசு முதலீட்டில் தனியார் கொள்ளை லாபம் அடிப் பது என்பதாகவே இருந்து வருகிறது. அது எண்ணெய் வளம் கண்டுபிடிப்பதாக இருந்தாலும், கனிம வளமாக இருந்தாலும், நெடுஞ்சாலையாக இருந்தாலும், கல்வியாக இருந்தாலும் இதுதான் நிலைமை.
உள்கட்டுமான வசதிகள் அனைத்தும் மக்கள் பணத்தில் இருந்து அரசு செய்து தர தனியார் லாபம் பார்ப்பார்கள். இன்று உலகம் முழுக்க காணப்படும் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் தனியாரின் லாப வெறி என்று அறியப்பட்ட நிலையிலும், இந்தியாவின் கல்வி நிறுவனங்களை தனியார்தான் சிறப்பாக நடத்துவர் என்பதாகவும், தனியாரால் தான் சிறந்த நிர்வாகம் தர முடியும் என்பதாகவும், இந்த ‘மாதிரி’யை எல்லா நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் அரசின் புதிய கொள்கை முன்வைக்கிறது.
நிர்வாக தரப்பு ஒதுக்கீட்டுக்கான கல்விக் கட்டணம், ஆசிரியர் நியமனம், ஊழியர் நியம னம் மற்றும் அவர்களின் ஊதியத்தை தனியார் நிர்வாகமே முடிவு செய்வது ஆகியவை கல்வி வியாபாரிகளுக்கு கட்டற்ற சுதந்திரத்தை வழங்குவதாகும். இதை அனுமதிக்கவே கூடாது.
நாட்டில் தாய்மொழி வழிக் கல்விக்காக இயக்கங்கள் நடந்துவரும் வேளையில், அறிவி யலுக்கு புறம்பான ஆங்கில வழிக் கல்வியை திணிப்பதோடு, மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசும் திறன் முக்கிய அளவுகோலாக அரசு மான்யம் வழங்கப் பரிசீலிக்கப்படும் என்ற கொள்கை முடிவு கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியதாகும். காங்கிரஸ்காரர்கள் இன்னும் பிரிட்டிஷ் அடிமைத்தனத்தில் இருந்து மீளவே இல்லை. தமிழ் மட்டும், தாய்மொழி மட்டும் தெரிந்திருப்பது இழிவு, அந்நிய மொழி உயர்வு என்ற அடிமை எண்ணத்தை இளைய தலை முறையிடம் ஆழமாக்க இந்தப் பள்ளிகள் உதவும். மெல்ல தமிழை இனி சாகடிக்கப் பார்ப்பார்கள். அத்துடன் அறிவின் இயல்பான வளர்ச்சியையும் தடுத்துவிடப் பார்ப்பார்கள்.
ஏற்கனவே கல்வி முதலைகள் அறக்கட்டளை பெயரில்தான் நிலத்தைக் குவித்து வைத் துள்ளார்கள். மாநில அரசுகள் நிலம் கையகப்படுத்த உதவ வேண்டும், நிலம் குத்தகைக்கு கொடுக்கப்படலாம், அறக்கட்டளை பெயரில் நிறுவனங்கள் நடத்தலாம் என்ற அறிவிப்புகள் தொழிலுக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் என்றால், கல்விக்கு மாதிரி பள்ளிகள் என்ற வகையில் அமைந்துள்ளன.
இங்கு, அடிமைத்தனம் இருக்கும். ஜனநாயகம் இருக்காது. இங்கு, லாபம் மட்டுமே நோக்கமாக இருக்கும். சமூக பிரக்ஞையுள்ள மாணவர்கள் உருவாக மாட்டார்கள். கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கு வேலை செய்யும் எந்திரங்களாக உருவாக்கப்படுவார்கள். அருகமைப் பள்ளிகளில் கூட இவர்கள் சொல்லும் வறிய மாணவர் சேர்க்கை சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் நடைபெறவில்லை, அல்லது சேர்ந்த சில மாணவர்களும் இரண்டாம் தரமாக நடத்தப் பட்டார்கள் என்பதுதான் செய்தி என்கிறபோது ‘மாதிரிப் பள்ளிகளில் உள்ளூர் மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டில் சேரும்போது’ நடைபெறும் அவலத்தை ஒருவர் ஊகிக்க முடியும்.
வாழ வழியின்றி கிடைத்த வேலைகளுக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்படும் கோடானு கோடி இந்திய குழந்தைகளுக்கு அய்முகூ அரசாங்கம் எப்படி கல்வி தரப்போகிறது? அவர்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறது?
மத்திய அரசு சொல்கிற மாதிரிப் பள்ளித் திட்டத்தின் மறுபெயர் காசுள்ளவர்க்கே கல்வி என்பதே. முற்றிலும் புதிய தளத்தில், அனைத்தும் தழுவிய விதத்தில் இதை அம்பலப்படுத்தி முறியடிப்பது புரட்சிகர ஜனநாயக சக்திகளின் தோள்களின் மீது சுமத்தப்பட்டுள்ளது.
பின்செய்தி
எச்சிஎல் நிறுவனர் சிவ் நாடாரின் மனிதாபிமான நிறுவனமான சிவ் நாடார் ஃபவுண்டே சன் அடுத்த அய்ந்து ஆண்டுகளில் வெவ்வேறு கல்வித் திட்டங்களில் ரூ.3,000 கோடி செலவிட இருக்கிறது. எச்சிஎல் நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நடவடிக்கைகள் வேறு, இது வேறு என்கிறார் சிவ் நாடார். (டெக்கான் கிரானிக்கிள், நவம்பர் 6, 2013). இதுபோன்ற மனிதாபிமான நடவடிக்கைகளுக்கும் மாதிரிப் பள்ளித் திட்டத்துக்கும் தொடர்பு இருக்கிறது என்று யாராவது கருதினால்....?