COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, November 15, 2013

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி நவம்பர் 10 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி கோரப்பட்டது.

பெரியநாயக்கன்பாளையம் காவல்துறை ஆர்ஒய்ஏ நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுப்பது, அல்லது திட்டமிட்ட நாளில் நடத்தவிடாமல் வேறு நாளில் அனுமதி வழங்குவது என தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த முறையும் நவம்பர் 10 அன்று ஆர்ப்பாட்டத்திற்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. எனவே தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் தோழர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ரதீஷ்குமார், தேசியக்குழு உறுப்பினர் தோழர் வெங்கடாசலம், மாலெ கட்சி உள்ளூர் கமிட்டி செயலாளர் தோழர் சக்திவேல் மற்றும் வழக்குரைஞர் லூயிஸ் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.

நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் மாலெ கட்சி ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது.

Search