COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, November 1, 2013

விழுப்புரத்தில் சில தலையீடுகள்

விழுப்புரம் மாவட்டம், மாம்பலப்பட்டு ஊராட்சியில் குடிதண்ணீர், பொதுக் கழிப்பிட வசதி, விலையில்லா மிக்சி கிரைண்டர், பொது சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு உள்ளூர்மட்ட கோரிக்கைகள் மீது அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் மற்றும் அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் இணைந்து கையெழுத்து இயக்கம் நடத்தி, 21.10.2013 அன்று தர்ணா போராட்டம் கட்டமைத்தது. தோழர் கண்ணம்மாள் தலைமையில் நடந்த  போராட்டத்தில் 150 பேர் கலந்து கொண்டனர்.

இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன், முற்போக்கு பெண்கள் கழகத் தோழர் மாநிலச் செயலாளர் தோழர் செண்பகவள்ளி மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக சங்க தோழர் கணேசன் உரையாற்றினர்.

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட வலதுரெட்டி பகுதியில் இதே கோரிக்கைகள் மீது அக்டோபர் 18 முதல் 23 வரை கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு, தோழர்கள் செண்பகவள்ளி, கண்ணம் மாள், சுந்தரி, மாரிமுத்து மோகனவள்ளி ஆகியோர் தலைமையில் 30 பேர் கொண்ட பெண்கள் குழு மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தது. கோரிக்கைகள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார்.

Search