13.10.2013 அன்று சாந்தி கியர்ஸ் ஆலையின் 4 யூனிட்களில் கொடியேற்று விழா நடைபெற்றது. சின்னியம்பாளையம் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, பிரிக்கால் தொழிலாளர்களுடன் 500க்கும் மேற்பட்டவர்கள் அறிவிக்கப்படாத பேரணியாய் நீண்ட தூரம் பயணித்து கொடியேற்றினர். நிகழ்ச்சிகளுக்கு ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் என்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். தேசியத் தலைவர் தோழர் குமாரசாமி கொடியேற்றி வைத்தார்.
கோவை மாவட்ட சாந்தி கியர்ஸ் தொழிலாளர்கள் நல சங்கத்தின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்களான தோழர்கள் கோபால்சாமி, பாலமுருகன் வரவேற்பு மற்றும் நன்றி உரையாற்றினர். கொடியேற்று விழா இறுதியில் சாந்தி கியர்ஸ் மற்றும் பிரிக்கால் தொழிலாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.
தோழர் குமாரசாமி உரையாற்றினார். எல்எம்டபுள்யூ தொழிலாளர் சங்கத்தில், துணைத் தலைவராக, பொருளாளராக இருந்த தோழர் சந்திரன் மாவட்ட ஏஅய்சிசிடியுவின் சிறப்பு தலைவராக அறிமுகப்படுத்தப்பட்டார். ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் என்.கே.நடராஜன், மாலெ கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிர மணியன், ஏஅய்சிசிடியு மாவட்டத் துணைத்தலைவர் தோழர் ஜானகிராமன் உரையாற்றினர்.