COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, November 15, 2013

சாராயக்கடை அகற்றப்பட்டது ஆர்ஒய்ஏ போராட்டம் வெற்றி

கோவை, பெரியநாயக்கன்பாளையம் எல்எம்டபிள்யூ பிரிவு எதிரில் உள்ள சாமையன் நகர், பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள இந்திரா வணிக வளாகம் மற்றும் கூடலூர் கவுண்டம்பாளையம் விஜயலட்சுமி நகர் பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், பல்வேறு கட்ட போராட்டங்களையும் ஆர்ஒய்ஏ நடத்தி வந்தது.

எல்எம்டபிள்யூ பிரிவு எதிரில் உள்ள சாமையன் நகர் டாஸ்மாக் கடை அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. இந்த போராட்டத்தின் வெற்றி செய்தியையும், மற்ற இரு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டுமெனவும், சாராயக்கடை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க ஆர்ஒய்ஏவின் அடுத்த கட்ட போராட்டத்திற்கு ஆதரவு கேட்டும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

Search