1997, டிசம்பர் 1. ரத்தம் தோய்ந்த அந்த இரவில் என்ன நடந்தது? உறங்கிக் கிடந்த அந்த 58 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். சமத்துவம், விடுதலை, கவுரவம் ஆகிவற்றுக்காக கனவு காணத் துணிந்த அந்த வறியவர்களில் வறியவர்களின், ஒடுக்கப்பட்டவர்களின் ரத்தம் அனாதை ரத்தமாக அப்படியே இருந்துவிடுமா? அல்லது அதை நாம் தழுவிக்கொண்டு, கையில் கொண்டு, நீதி கோரும் அதன் குரலுடன் இணைந்துகொள்வோமா?
அந்த 58 பேர் இயற்கைச் சீற்றத்தால் மடியவில்லை. விபத்திலும் மடியவில்லை. கூலியோ, நிலமோ கேட்ட தலித் தொழிலாளர்களை பழிவாங்கும் படுகொலை கூட இல்லை அது. நிலம், கூலி ஆகியவற்றுக்கான இன்னும் கூர்மையான போராட்டங்கள் இன்னும் பல கிராமங்களில் நடந்துகொண்டிருந்தன. அந்த நிலப்பிரபுக்கள் படைகள் தங்கள் முந்தைய அவதாரத்தில் இருந்து கூர்மையாக மாறியிருந்தார்கள். 1989ல் ஒரு தேர்தல் போட்டியாளராக மாலெ கட்சி எழுந்தது முதல், மாலெ கட்சியின் அரசியல் அடித்தளத்தை அச்சுறுத்தும் நோக்கத்துடன், அவர்களும் வெளிப்படையாக அரசியல்ரீதியாக செயல்பட்டனர். சாதிப் போர் என்று இதைச் சொல்வது, வர்க்கப் போராட்டம் எடுத்த இந்த சாரமான அரசியல் உருவை மறைப்பதாகும்.
ஆக, முழுக்கமுழுக்க அரசியல் கணக்குகளின் அடிப்படையில், பாதே, தேர்ந்தெடுக்கப் பட்டது.
மாலெ கட்சியின் அன்றைய பொதுச் செயலாளர் வினோத் மிஸ்ரா சொன்னார்: ‘இந்த முறை போஜ்பூர், பாட்னா மற்றும் அவுரங்கா பாத் மாவட்டங்களுக்கு அருகில் இருக்கிற ஜெகனாபாதில் ஒரு கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் சாரமான நோக்கம், மத்திய பீகார் முழுவதற்கும் செய்தி சொல்வதே. தேர்ந்தெடுக்கப்பட்ட நேரமும் முக்கியமானது; ஏனென்றால், மத்தியில் உள்ள அரசியல் நெருக்கடி முற்றி ஒரு காபந்து அரசாங்கம் பொறுப்பில் உள்ளது.
ஆக, பூமிஹார் மற்றும் ராஜ்புத் என்ற மேல்சாதிகளையும் அணிதிரட்டுவதன் மூலம், முதன்மையான பிற்போக்கு சக்திகளின் அரசியல் தாக்குதலின் துவக்கத்தை அது குறிக்கிறது. அறிக்கைகள் சொல்வதுபடி பார்த்தால், தேர்தலுக்கு முந்தைய முப்படுகொலைகளில் முதல் படுகொலை அது. மொத்த தாக்குதலும் கவனமாக திட்டமிடப்பட்டது.
ஜெகனாபாத் தவிர அண்டை மாவட்டங்களில் இருந்து, தொழில்முறை கொலைகாரர்கள் கொண்டு வரப்பட்டனர். ஒரு பதிவை உருவாக்க, சர்வதேச தலைப்புச் செய்திகளின் கவனத்தைப் பெற, பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிப்பான இலக்குகளாகக் கொண்டு, படுகொலை செய்யப்பட வேண்டியவர் எண்ணிக்கை, முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டது. ஓர் எளிதான தாக்குதலுக்கு, ஒரு மென்மையான இலக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது; இலக்குகள், எதைப் பற்றியும் சந்தேகிக்கவில்லை; எந்தத் தாக்குதலுக்கும் தயாராக இல்லை; எனவே எதிர்ப்புக்கான வாய்ப்பு பூஜ்ஜியமாக இருந்தது’.
பீகார் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், பாஜகவுக்கு மேல்சாதி ஆதரவை உறுதிப்படுத்துவது நோக்கமாக இருந்தது.
இந்திய நீதித்துறையின் வழிமுறைகள் விசித்திரமானவை. சில வழக்குகளில், போதுமான சாட்சிகள் இல்லையென்றபோதும், குற்றம் நிரூபிக்கப்படுவதும் தண்டனை தருவதும் முன்னரே முடிவாகிவிடுகிறது. நேரில் கண்ட சாட்சியோ, பிற சாட்சியங்களோ இல்லாத போதும், ஒரு அப்சல் குருவை தூக்கில் போட, தேசிய மனச்சாட்சி போதுமானதாக இருந்தது.
பாட்லா அவுஸ் வழக்கில் ஒரு ஷேசாத் கொலைக் குற்றவாளி என்று நிரூபிக்க, அரசு தரப்பு நிரப்பாமல் விட்ட ஓட்டைகளை, நீதிமன்றமே, தனது கற்பனை பயணத்தின் மூலம் நிரப்பியதே போதுமானதாக இருந்தது. ஆனால், பீகாரின் பாட்னா நீதிமன்றத்தில் உள்ள தொடர் படு கொலை வழக்குகள் போன்ற வேறு சில வழக்குகளில், நேரில் கண்ட சாட்சிகள் என்னதான் சொன்னாலும் அவற்றை அலட்சியமாக புறந்தள்ளி, குற்றவாளிகள் விடுவிக்கப்படுவது கல்லில் பொறித்துள்ளதாகத் தெரிகிறது.
பதானி மற்றும் பாதே வழக்குகளில் வழங்கப்பட்ட பாட்னா உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கள் முன்வைத்துள்ள விசயங்களைப் பார்த்தால், ஏதோ ஒரு காரணம் சொல்லி, நேரில் கண்ட சாட்சிகள் எப்படி நம்ப முடியாதவையாக ஆக்கப்பட்டன என்பது தெளிவாகும். பதானி வழக்கில், உயர்நீதிமன்றம் சாட்சிகள் அங்கே இருந்திருக்க முடியாது என்றது - அங்கே அவர் கள் இருந்திருந்தால் அவர்கள் பிணமாகியிருப்பார்கள்.
பாதே மற்றும் பதானி வழக்குகளில், மறைந்திருந்ததாக சொல்லப்படும் இடங்கள் இருந்திருக்க முடியாதவை என்று உயர்நீதி மன்றம் சொல்கிறது. பாதே படுகொலையின் சாட்சி ஒருவர் விசயத்தில், (படுகொலை நடந்த பிறகு, படுகொலை செய்யப்பட்டவர்களை, படுகாயத்துக்குள்ளானவர்களை கவனிக்க வேண்டியிருந்தபோது, எங்கும் களேபரமாக இருந்தபோது) அந்த சாட்சி சொல்வதுபடி, அவர் அந்த கூரையின் மேல்தான் உண்மையில் ஒளிந்திருந்தாரா என்று காவல்துறையினர் ஏன் சரிபார்க்கத் தவறினார்கள் என்று கேள்வி எழுப்பும் அளவுக்கு, நீதிமன்றம், சாட்சிகள் சொல்வது பொய் என்று சொல்லப் பார்த்தது.
படுகாயங்களுக்கு உள்ளானவர்கள் விசயம் என்ன? படுகாயத்துக்குள்ளான ஒருவர் பதானியில் உள்ளார். பாதேயில் அதுபோல் பலர் உள்ளனர். படுகாயத்துக்குள்ளானதே அவர்கள் அந்த இடத்தில் இருந்தார்கள் என்பதை நிரூபிக்கிறது. எனவே அவர்கள் சொல்வது உண்மையாக இருக்க வேண்டும்.
ஆனால், நீதிமன்றத்தைப் பொறுத்த வரை அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை. பதானி வழக்கில், உயர்நீதிமன்றம், அந்தக் காயங்கள் பற்றி கேலியாகக் கேட்கிறது - நெஞ்சில் துப்பாக்கியால் சுடப்பட்ட ராதிகா தேவி, தனது நசுங்கிய விரல் பற்றி ஏன் மருத் துவரிடம் சொல்லவில்லை?
பாதே வழக்கில், முதல் தகவல் அறிக்கை டிசம்பர் 2 அன்றும், ஜெகனாபாத் சிவில் நீதிமன்றத்தில் டிசம்பர் 4 அன்றும் பதிவு செய்யப்பட்டது. நேரில் கண்ட சாட்சிகளின் சாட்சியங்களை புறந்தள்ள முக்கியமான, அதே நேரம் எளிதான அடிப்படையாக, முதல் தகவல் அறிக்கை பெறுவதில் ஏற்பட்ட தாமதம் பயன்படுத்தப்பட்டது. தங்கள் முதல் வாக்கு மூலத்திலேயே குற்றவாளிகளின் பெயர்களை விசாரணை அதிகாரியிடம் சொல்லிவிட்டதாக நேரில் கண்ட சாட்சிகள் சொன்னபோதும், நீதி மன்றம் அந்தத் தாமதத்தை, முதல் முதல் தகவல் அறிக்கையில் இல்லாத பெயர்கள், இரண்டு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு தரப் பட்டன என்று வியாக்கியானப்படுத்தியது.
ஆனால், கீழ்நீதிமன்றத்தில் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்ட 26 பேர் சந்தேகத்தின் பலனைப் பெறுவார்கள் என்றால், அந்த 58 பேரை கொன்றது யார்? உயர்நீதிமன்றத்தைப் பொறுத்தவரை, கொலைகாரர்கள் அனைவரும் சோனே ஆற்றைத் தாண்டி போஜ்பூர் கிராமங் களுக்குள் தப்பிவிட்டனர்; அவர்களை அடையாளப்படுத்தி, கண்டுபிடிக்க ஜெகானபாத் மாவட்ட காவல்துறை, போஜ்பூர் காவல் துறையை தொடர்பு கொண்டது; பிறகு அந்த முயற்சியை கைவிட்டுவிட்டது. இப்படியாக, நேரில் கண்ட சாட்சிகள், இவர்கள்தான் என்று அடையாளம் காட்டிய 26 பேரும் குற்றமற்றவர்கள், உண்மைக் குற்றவாளிகள் சோனே ஆற்றைக் கடந்து தப்பிவிட்டனர், அவர்கள் யாரென்று தெரியவில்லை என்று நீதிமன்றம் வசதியாக முடிவுக்கு வந்தது.
ஆனால், இந்தத் தெளிவான கதையில், தெளிவாகத் தெரிகிற ஒரு தவறு இருக்கிறது. கொலைகாரர்கள் 150 பேர் வரை இருந்தனர் என்று, நேரில் கண்ட சாட்சிகள் எப்போதும் சொல்லிக் கொண்டிருந்தனர். பிழைத்தவர்கள் அந்த 150 பேரையும் அடையாளம் காட்டிவிட் டதாகச் சொல்லவே இல்லை.
ஆனால், முதல் நாளில் இருந்து, அவர்கள் கூலிகளாக வேலை செய்த நிலத்தின் சொந்தக்காரர்கள் கொலை காரர்கள் மத்தியில் இருந்தார்கள் என்று திட்ட வட்டமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கொலைகாரர்கள் இவர்கள்தான் என்று எந்த சந்தேகத்துக்கும் இடமின்றி அடையாளம் காட்டினார்கள். மேலும் சோனே நதிக்கரையில் உள்ள போஜ்பூர் கிராமங்களைச் சேர்நதவர்களை அவர்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்; ஏனென்றால், சோனே நதிக்கரையின் இரு பக்கங்களிலும் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி ஆற்றைக் கடப்பதால், அங்குள்ளவர்களை, மொத்த பிராந்தியத்திலும் உள்ள கிராமப்புற வறியவர்கள் கண்டு அஞ்சும் முக்கியமான சேனா தலைவர்களை அவர்க ளுக்கு நன்கு தெரியும். விசாரணை நீதிமன்றம் விடுவித்த 19 பேரில் பெரும்பான்மையானவர் கள் போஜ்பூர் பக்கத்தைச் சேர்ந்தவர்கள்; குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 26 பேர், பெரும் பாலும் பாதே மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
பாதே படுகொலையில் இருந்து தப்பித்துப் பிழைத்தவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்யவுள்ளனர். பீகார் அரசாங்கமும் மேல் முறையீடு செய்ய வேண்டும். பதானிதோலா வழக்கில் பாட்னா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக் கெதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீடுகளை கடந்த ஆண்டு ஜ÷லையில் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு அனுமதித்தது. ஓராண்டு காலம் ஆகியும் விசாரணை இன்னும் துவங்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்களுக்கு தரப்பட்ட குறிப்பாணைகளை தவிர்த்து வருகின்றனர்.
விசாரணை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட சாட்சிகளே உச்சநீதிமன்றம் முன்பும் வைக்கப்படும்.
விசாரணை நீதிமன்றத்தில் விசாரணை மற்றும் குற்றச்சாட்டுத் தரப்புகளில் இருந்த இடைவெளிகளை இப்போது உச்சநீதி மன்றத்தில் சரிசெய்துவிட முடியாது; ஆயுதங் களை பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தோட்டாக்களுடன் தடயவியல் ரீதியாக ஒப்பிட்டுப் பார்ப்பதில் காவல்துறையும் அரசுத் தரப்பும் தவறியதை இப்போது சரிசெய்துவிட முடியாது; ஜெகனாபாத் சிவில் நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கையை பெறுவதில் இருந்த தாமதத்தை இப்போது சரிசெய்துவிட முடியாது.
நேரில் கண்ட சாட்சிகளின் சாட்சியங்கள்பால் நீதிமன்றம் காட்டுகிற நடுநிலைத்தன்மை மற்றும் கூருணர்வில்தான் இப்போது நீதி ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராணயன், பாதே படுகொலையை தேசிய அவமானம் என்று அழைத்தார். இப்போது நடந்துள்ளது இன்னும் அவமானத்துக்குரியது. உச்சநீதிமன்றம் தனது சொந்த கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து, குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட அனைத்து படுகொலை வழக்குகளையும் மறுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகிறது.
பதானி தோலா மற்றும் பாதே படுகொலைகளுக்கு நீதி கோரும் போராட்டம், ஒரு நீதி பரிபாலன தவறை சரிசெய்வதை விட மிகப் பெரியது. அது, திருப்திப்படுத்துவது, தண்டனை பற்றிய அச்சமின்றி இருப்பது என்ற அரசியலால் வலுப்படுத்தப்பட்டது; இப்போது, அவமானகரமான நீதித்துறை மவுன ஒப்புதலால் துணிச்சல் பெற்றிருக்கிற நிலப்பிரபுத்துவ மதவெறி கொலைகாரர்களை கட்டுப்படுத்துவது தொடர்பானது. இது பீகாரின் ஒடுக்கப்பட்ட வறிய மக்களின் போராட்டம் மட்டுமல்ல; இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றி அக்கறை கொண்டுள்ள யாருக்கும், இந்தப் போர் நாம் வென்றே ஆக வேண்டிய போர்.
ஆமீர்தாஸ் ஆணையத்தின் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கோருவதும் மிகவும் அவசியமானது. ஒரு பயங்கரவாத அமைப்புக்கு தரப்பட்ட நிதி மற்றும் அரசியல் ஆதரவு பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட ஓர் ஆணையம், ராஷ்டிரிய ஜனதாதள ஆட்சியில் ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் இருந்ததும், நிதிஷ் குமார் ஆட்சியின் முதல் சில வாரங்களிலேயே கலைக் கப்பட்டதும் ஏன்?
ஆமீர்தாஸ் ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் பட்டியல், பீகாரில் உள்ள அனைத்து கட்சிகளையும் சேர்ந்த சக்திவாய்ந்த தலைவர்கள். ரன்வீர் சேனா தலைவர் பிரம்மேஷ்வர் முக்கியாவின் சொந்த நாளேட்டின் மூலம் இந்த அரசியல் வாதிகளுடனான தொடர்பு நிறுவப்பட்டது. ஆமீர்தாஸ் ஆணையத்தின் செயலாளர் ராம் நாகினா பிரசாத் சிஎன்என் - அய்பிஎன் தொலைக்காட்சியில் பேசியபோது, தலைவர் அந்த அறிக்கையை சமர்ப்பித்திருந்தால், பலரும் ஏதாவது ஒரு தண்டனை பெற்றிருப்பார்கள் என்றார். பணக்காரர்களிடமும் அரசியல் ரீதியாக சக்தி வாய்ந்தவர்களிடமும் பிரம்மேஷ்வர் நிதி பெற்றதற்கும் பதிலுக்கு அவர் அவர்களுக்கு அரசியல் சேவை செய்ததற்கும் ஆதாரம் இருப் பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆமீர்தாஸ் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சிலர், அக்டோபர் 27 அன்று பாட்னாவில் நடைபெறுகிற ஹ÷ங்கார் பேரணியில் கலந்துகொள்ளவுள்ள பிரதமர் வேட்பாளர் மோடியை வரவேற்பார்கள். அவர்கள் நல்ல துணையுடன் இருப்பார்கள். 2002 மோடியின் குஜராத்தில் இருந்த மதவெறி பாசிச கும்பல் ரன்வீர் சேனாவிடம் இருந்துதான் பல பாடங்கள் பெற்றது. ரன்வீர் சேனா தலைவர் பிரம்மேஷ்வர் தனது சங்பரிவார் பின்னணி பற்றியோ, மோடியை பிரதமராக பார்க்க விரும்புவது பற்றியோ மறைக்கவில்லை.
ரன்வீர் சேனாவின் வெறியாட்டத்தில் தப்பிப் பிழைத்தவர்களும், அந்த வெறியாடடத்துக்கு பலியானவர்களின் குடும்பங்களும் அந்த ஹுங்கார் முன் பணிந்து விடமாட்டார்கள். அக்டோபர் 30 அன்று நடக்கவுள்ள மாலெ கட்சியின் கபர்தார் பேரணியில் எச்சரிக்கை விடுக்க ஆயிரக்கணக்கில் இணைவார்கள். பீகார் முழுவதும், பீகாரின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினர், ‘மதவெறி, நிலப்பிரபுத்துவ பாசிச சக்திகளுக்கு எச்சரிக்கை செய்கிறோம். இது குஜராத் அல்ல, இது பீகார்’ என்று சொல்லி வருகின்றனர். மக்களுக்கும் மோடியின் உண்மையான முகம் பற்றி அவர்கள் எச்சரிக்கை தெரிவிப்பார்கள்.