COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, December 2, 2013

இகக(மாலெ) 9ஆவது காங்கிரஸ் தொழிலாளர் வர்க்க இயக்க தீர்மானத்தின் மீதான தொழிலாளர் வகுப்புகள்

திருச்சியில் 19.11.2013 அன்று நடைபெற்ற வகுப்பில் விராலிமலை சன்மார், ரானே தொழிற்சாலை தொழிலாளர்கள், கரூரிலிருந்து ஏற்றுமதி தையல் தொழிலாளர்கள், புதுக்கோட்டையிலிருந்து ஆசிரியர்கள், தஞ்சையிலிருந்து கட்டுமானத் தொழிலாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஒருமைப்பாடு இதழில் வெளிவந்த தொழிலாளர் வர்க்க இயக்க தீர்மானம் மீதான குறிப்புகள் படிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு விளக்கப்பட்டது.

கூட்டத்தில் ஏஅய்சிசிடியுவின் அகில இந்திய தலைவர் தோழர் குமாரசாமி கலந்து கொண்டு விளக்கவுரை வழங்கினார். ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தேசிகன், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் ஆசைத்தம்பி, வளத்தான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

24.11.2013 அன்று திண்டுக்கல்லில் இதே வகுப்பு நடைபெற்றது. இதில் வீட்டு வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள், கட்டுமானம் உட்பட இதர அமைப்புசாரா தொழிலாளர்களோடு, கரூரிலிருந்து மின்சார வாரிய தொழிலாளர் குழு ஒன்றும், தேனியிலிருந்து தொழிற்சங்க முன்னணிகள் குழு ஒன்றும் கலந்து கொண்டன. ஏஅய்சிசிடியு மாநில துணை பொதுச் செயலாளர் தோழர் புவனேஸ்வரி, மாநில செயலாளர் தோழர் தேசிகன் ஆகியோர் விளக்கிப் பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் மணிவேல் தலைமை வகித்தார்.

அன்றைய தினம் திருநெல்வேலியில் நடைபெற்ற வகுப்பில் பீடி, கட்டுமானம், தையல் மற்றும் இதர அமைப்புசாரா தொழிலாளர்கள் என 75 பேர் பங்கு பெற்றனர். ஏஅய்சிசிடியு மாநில பொதுச் செயலாளர் தோழர் சங்கரபாண்டியன் மற்றும் மாநில துணைத் தலைவர் தோழர் ரமேஷ் விளக்கிப் பேசினர். அதே நாளில் கோயம்புத்தூரில் கோஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கான கல்வி வகுப்பு நடைபெற்றது. 85 பேர் கலந்துகொண்ட வகுப்பில் கோஆப்டெக்ஸ் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தோழர்கள் அந்தோணிராஜ், விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏஅய்சிசிடியு தேசிய தலைவர் தோழர் குமாரசாமி விளக்க உரையாற்றினார்.

Search