2013 ஏப்ரல் மாதம் பெங்களூர் பாஜக அலுவலகம் அருகே குண்டு வெடித்த வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த 20 இஸ்லாமிய இளைஞர்களை தமிழக காவல்துறை உதவியுடன் கைது செய்தது கர்நாடகா காவல்துறை.
அதில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த பீர்முகைதீன், தென்காசி ஹனீபா, சதாம் ஹு சைன் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைபட்டார்கள்.
கிட்டத்தட்ட 6 மாதங்கள் அவர்கள் சிறையில் சித்தரவதை அனுபவித்த பிறகு, இப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது இந்த மூவரும் குற்றவாளிகள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று சொல்லி அவர்களை விடுதலை செய்துள்ளது பெங்களூர் மாநகரக் காவல்துறை.
இந்தக் கொடுமையைக் கண்ட கர்நாடகா மாநில மனித உரிமை ஆணையம் தானாகவே முன்வந்து பெங்களூர் மாநகர காவல்துறை மீது வழக்கு தொடுத்துள்ளது. இவ்வழக்கில் கர்நாடகா மாநில தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள மனித உரிமை ஆணையம், பாதிக்கப்பட்ட அந்த மூவருக்கும் கர்நாடகா அரசு தலா 2 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
“இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்திற்காக எவ்விதக் குற்றமும் செய்யாமல் ஆறு மாத காலம் சிறைக் கொடுமை அனுபவித்துள்ளனர். இந்த மூவரையும் பயங்கரவாதிகள் முத்திரை குத்தி சிறையிலடைத்துள்ளார்கள். இதற்கு முழுக் காரணம் காவல்துறை அதிகாரிகளே. இந்த அதிகாரிகள் இந்த அப்பாவிகளை அநியாயமாகச் சிறையில் தள்ளியது மட்டுமின்றி, அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்குவதற்காக அவர்களைச் சித்தரவதை செய்துள்ளனர்.
அதிகாரிகள் இதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று கர்நாடகா மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் சி.ஜி.ஹன்குந்த் கர்நாடகா அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். மேலும் அவர், முஸ்லீம்கள் என்றாலே பயங்கரவாதிகள் என்று காவல்துறை அதிகாரிகளின் மண்டையில் எந்த அளவிற்கு ஆழமாகப் பதிந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும். இந்த நஷ்டஈடு காவல்துறையினரை கொஞ்சம் கூருணர்வு உள்ளவர்கள் ஆக்குவதற்கான ஒரு சிறிய முயற்சி என்று கூறியுள்ளார்.
இந்த மூவரைப்போலவே, கடந்த வருடம் அஜாஷ் அகமது மிர்சா என்ற விஞ்ஞானி ஒருவரும் பத்திரிகையாளர் மதியுர் ரஹ்மான் சித்திக் என்பவரும் இந்துத்துவா தலைவர்களை, அரசியல்வாதிகளைக் கொல்ல சதி செய்தார்கள் என்று பெங்களூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறைவாசத்திற்குப் பின்னர், சாட்சிகள் இல்லை என விடுதலை செய்யப்பட்டார்கள்.
அதேபோல் மாலேகான், அஜ்மீர் செரிப், சம்சுத்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மஜ்ஜீஸ் போன்ற இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளுக்குக் காரணம் இந்துத்துவா பரிவாரங்கள்தான் என வெளிப்படையாக தெரிந்துவிட்ட பிறகும் அவ்வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஏதுமறியா இஸ்லாமியர்கள் இன்னமும் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.
நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய இளைஞர்கள் மீது நடத்தப்படும் இந்த வேட்டையால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளின் எதிர்காலமும் அவர்களுடைய குடும்பங்களின் எதிர்காலமும் பாழாய்போன பின்பும் அவர்களிடம் மன்னிப்பு கோருவதை, அவர்களுக்கு இழப்பீடுகள் வழங்குவதை இந்த அரசாங்கங்கள் தவிர்த்து விடுகின்றன.
மெக்கா மஜ்ஜீஸ் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து 70 இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் சித்தரவதை அனுபவித்தார்கள். மத்திய புலனாய்வுத்துறையின் விசாரணையில் இந்துத்துவா அமைப்புகளே குண்டு வைத்தது தெரிந்த பின்னர் அவர்களில் சிலர் விடுதலை செய்யப்பட்டார்கள்.
ஆந்திர மாநில சிறுபான்மையோர் ஆணையம் பாதிக்கப்பட்ட 20 பேருக்கு தலா 3 லட்ச ரூபாயும் 50 பேருக்கு தலா 20 ஆயிரம் ரூபாயும் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது. ஆந்திர அரசும் சிலருக்கு மட்டும் வழங்கியிருக்கிறது.
அதற்குள் வெங்கடேஷ் கவுடு என்பவர் நஷ்டஈட்டிற்கு எதிராக வழக்குப்போட ஆந்திரா உயர்நீதிமன்றம் நஷ்டஈடு வழங்குவதற்குத் தடை விதித்துள்ளது. தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஆந்திர முதல்வர் ஆலோசித்துக் கொண்டிருக்கிறாராம்.
இஸ்லாமியர்கள் என்றாலே பயங்கரவாதிகள் என்கிற சிந்தனை, எண்ணம் காவல்துறை அதிகாரிகளிடத்தில் மட்டுமின்றி சில நீதிபதிகளிடம் கூட இருக்கிறது. இந்திய ஆட்சியாளர் களும் ஆளும் வர்க்கமும் இந்த விஷ வித்தை திட்டமிட்டு இந்திய மக்களின் பொதுப்புத்தியில் விதைத்து வருகிறார்கள்.
சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் மோடி கும்பல்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களை பாகிஸ்தானின் உளவுத்துறையான அய்எஸ்அய் தொடர்பு கொண்டது என்று வாய்கூசாமல் பேசினார் காங்கிரஸ் கட்சியின் இளவரசர் ராகுல்காந்தி.
முசாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பிச் செல்வதற்கு வேண்டிய எந்தவித வசதி வாய்ப்புக்களையும் செய்து கொடுக்காமல், அவர்களெல்லாம் அகதி முகாம்களில் சொகுசாக இருப்பதால், வீடுகளுக்குப் போக மறுக்கிறார்கள் என்று இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்தியுள்ளது முலாயம் சிங் அரசு.
தமிழகத்தில் இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டாலும் கொல்லப்பட்டாலும் அதற்குக் காரணம் இஸ்லாமியர்கள் என்ற ரீதியில்தான் வழக்கை விசாரிக்கவே தொடங்குகிறது காவல்துறை. இந்துத்துவா இயக்கத்தைச் சேர்ந்த வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் கொல்லப்பட்ட சமயத்தில் தமிழக காவல்துறைத் தலைவர் ஒன்றிரண்டைத்தவிர பெரும்பாலான கொலைகள் தனிப்பட்ட காரணங்களால்தான் நடந்துள்ளன என்று அறிக்கையே வெளியிட்டார்.
ஆனால், அடுத்தடுத்து அனைத்து வழக்குகளிலும் இஸ்லாமியர்களையே கைது செய்தார்கள். மேலப்பாளையத்தில் பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் இருக்கும்போது வெறும் பெட்டியை ஒரு வீட்டில் இருந்து எடுத்துவிட்டு யாரிடமும் திறந்துகூட காட்டாமல் வெடிகுண்டுகள் எடுத்ததாக வழக்குப் போட்டுள்ளார்கள்.
போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் இருவரையும் இந்து அமைப்புத் தலைவர்கள் கொல்லப்பட்ட அனைத்து வழக்குகளிலும் கஸ்டடியில் வைத்துக் கொண்டே அடுத்தடுத்து கைது செய்து அவர்களே ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்று சொல்லி ஜோடித்துக் கொண்டிருக்கிறது தமிழக காவல்துறை.
தீவிரவாதிகளைப் பிடித்த 238 போலீஸôருக்கு ரூபாய் 2.53 கோடி பரிசுத்தொகை வழங்கிப் பாராட்டியுள்ளார் ஜெயலலிதா. முதலில் சில போலீசாருக்கு மட்டும் பரிசுத்தொகை அறிவித்ததால் காவல்துறைக்குள் முணுமுணுப்பு ஏற்பட்டதால் எல்லாரும் பரிசு என வாரி வழங்கியிருக்கிறார்.
கருணாநிதி கூட, கொலையாளிகள் போலீஸ் பக்ருதீன் குழுவினரா? அல்லது ஏற்கனவே டிஜிபி அறிவித்த நபர்களா? என்று பொது மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு அரசு ஏன் பதில் அளிக்கவில்லை என்று கேள்வி கேட்டுள்ளார்.
இவர் ஆட்சியிலும் இஸ்லாமியர்கள்தான் குறிவைத்து கைது செய்யப்பட்டார்கள் என்பது தனிக்கதை. புதிய இளைஞர்கள் மட்டுமின்றி பல்வேறு வழக்குகளில் இருந்து நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் மீதும் மீண்டும் மீண்டும் வழக்குகள் போடுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது தமிழக அரசும் காவல் துறையும். கர்நாடகத்திலாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது சிலரை மட்டுமாவது விடுதலை செய்துள்ளனர். (அதற்காக மற்றவர்கள் எல்லாரும் உண்மைக் குற்றவாளிகள் என்று அர்த்தம் இல்லை).
ஆனால், ஓர் இஸ்லாமியரை கைது செய்துவிட்டால் முதல் தகவல் அறிக்கையில் இருந்து குற்றப்பத்திரிகை, சாட்சி விசாரணை வரை வழக்கை ஜோடித்து வெளியே வரமுடியாதபடி செய்வதுதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழக மனித உரிமை ஆணையம் மற்றும் நீதிமன்றங்கள்கூட இதுபோன்ற விசயங்களில் அதிகம் கவனம் எடுத்துக் கொள்வதில்லை. இதுபோன்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் அதிகமாவது மட்டுமே தீர்வாகும்.