தனக்குள் ஒரு வர்க்கம் தனக்கான ஒரு வர்க்கமாக தானே மாறுமா? மாறாது. அப்படி பாட்டாளி வர்க்கம் மாறி இருந்தால், எப்போதோ நாடெங்கும் உலகெங்கும் புரட்சி நடந்து முடிந்திருக்கும். பாட்டாளி வர்க்கம் சுரண்டப்படுகிறது. ஒடுக்கப்படுகிறது. தான் சுரண்டப்படுகிறோம் ஒடுக்கப்படுகிறோம் என்பதை மட்டுமே புரிந்து கொள்ளும்போது, தனக்குள் ஒரு வர்க்கமாக மட்டுமே இருக்கிறது. அது எப்போது, இந்த சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் காரணம் என்ன, இவற்றிற்கு எப்படி முடிவு கட்டலாம் என உணர்ந்து கொள்கிறதோ, அப்போதுதான் அது தனக்கான வர்க்கமாகிறது.
தானே எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா என்ற தமிழ்ப் பாட்டு சரியான தைத்தான் சொல்கிறது. ஏடறிந்த வரலாறெல்லாம் வர்க்கங்களின் வர்க்கப் போராட்டங்க ளின் வரலாறே. புராதன பொது உடைமை சமூகமாக, மனித சமூகம் இருந்த போது, அங்கே, தனிச் சொத்து, குடும்பம், அரசு ஆகியவை இல்லை. அடிமை சமூகம் துவங்கி முதலாளித்துவ கூலி அடிமை சமூகம் வரை, சமூகம் வர்க்கங்களாகப் பிளவுண்டுதான் இருந்துள்ளது. ஆனால் சிறுபான்மை பெரும்பான்மை மீது ஆதிக்கம் செலுத்தி உள்ளது.
அடிமை எஜமானன் இடத்தில் பண்ணை எஜமானனும், பண்ணை எஜமானன் இடத்தில் நவீன முதலாளித்துவ வர்க்கத்தினருமாக, அதிகாரத்தில் இருந்து பெரும்பான்மை உழைக்கும் மக்களை சுரண்டி வந்துள்ளனர், ஒடுக்கி வந்துள்ளனர். மார்க்சியம், நவீன முதலாளித்துவமும் பாட்டாளி வர்க்கமும் பிறந்த பிறகுதான், விஞ்ஞான சோசலிசம் உருவாக முடியும் எனவும், தனக்குள் ஒரு வர்க்கம் என்ற நிலையிலிருந்து பாட்டாளி வர்க்கம் தனக்கான வர்க்கம் ஆக முடியும் என்றும் சொல்கிறது.
‘இயக்கம்தான் எல்லாம் இறுதி இலட்சியம் ஏதுமில்லை’ ‘அவசியமானதற்காக அல்லாமல் சாத்தியமானதற்கே முயற்சிப்பது ’ என்பவற்றை தன்னெழுச்சி எனச் சொல்லி, உணர்வுபூர்வ மான பாத்திரமே தேவை என வலியுறுத்தும்போது, லெனின், ‘என்ன செய்ய வேண்டும்’ நூலில் கார்ல் காவுட்ஸ்கியின் பின்வரும் நீண்ட மேற்கோளைக் கையாள்கிறார்.
“பொருளாதார வளர்ச்சியும் வர்க்கப் போராட்டமும் சோசலிஸ்டு உற்பத்திக்கான நிலைமைகளைப் படைக்கிறதோடல்லாமல் நேரடியாக அதன் அவசியத்தைப் பற்றிய உணர்வையும் (கா.காவுட்ஸ்கி கொட்டையெழுத்தில் போட்டது) படைக்கிறது என்று மார்க்ஸ் அடித்துக் கூறியிருப்பதாக நமது திருத்தல்வாதிகளில் பலர் எண்ணுகின்றனர்.
மேலும், முதலாளித்துவ முறையிலேயே மிக உயர்வாக வளர்ந்துள்ள இங்கிலாந்து மற்றெந்த நாட்டையும்விட இவ்வுணர்விலிருந்து வெகு தொலைவில் நிற்கிறது என்று இந்த விமர்சகர்கள் அடித்துப் பேசுகிறார்கள். நகலைப் பார்க்கும்போது, இப்படி, மறுக்கப்பட்ட வைதிக - மார்க்சிய வகைப்பட்டதாகச் சொல்லப்படும் கருத்தை ஆஸ்திரிய வேலைத் திட்டத்தைத் தயாரித்த குழு ஏற்றுக்கொண்டுள்ளதாக அனுமானிக்கக்கூடும்.
நகல் வேலைத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ‘முதலாளித்துவ வளர்ச்சி பாட்டாளி வர்க்கத்தின் எண்ணிகையை உயர்த்த உயர்த்த, பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராட மேன்மேலும் நிர்ப்பந்திக்கப்படுகிறது, மேன் மேலும் தகுதி பெறுகிறது.
’ சோசலிசத்தின் சாத்தியப்பாட்டையும் அவசியத்தையும் ‘பாட்டாளி வர்க்கம் உணர்ந்து கொள்கிறது ’. இது சம்பந்தமாக, சோசலிஸ்டு உணர்வு பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தின் அவசியமான, நேரடியான விளைவு என்று தோன்றுகிறது. ஆனால் இது முற்றிலும் பொய். தத்துவம் என்கிற வகையில் சோசலிசம் - பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டம் போலவே – தற்காலப் பொருளாதார உறவு முறைகளில் வேர் கொண்டிருப்பதும், அந்த வர்க்கப் போராட்டத்தைப் போலவே அதுவும் முதலாளித்துவம் படைத்த வறுமையையும் மக்களின் துன்பதுயரங்களையும் எதிர்க்கும் போராட்டத்திலிருந்து வெளித் தோன்றுகிறதும் உண்மைதான்.
ஆனால், சோசலிசமும் வர்க்கப் போராட்டமும் அக்கம்பக்கமாக உதிக்கின்றன. ஒன்றிலிருந்து மற்றொன்று உதிக்கவில்லை. ஒவ்வொன்றும் வெவ்வேறு நிலைமைகளின்கீழ் உதிக்கிறது. நவீன சோசலிஸ்டு உணர்வு ஆழ்ந்த விஞ்ஞான அறிவின் அடிப்படையிலே மட்டுமே உதிக்க முடியும்.
உண்மையாகச் சொன்னால், நவீனகாலத் தொழில் நுட்பவியல் போலவே (எடுத்துக்காட்டாகச் சொல்கிறோம்) தற்காலப் பொருளாதார விஞ்ஞானமும் சோசலிஸ்டு உற்பத்திக்கு நிபந்தனையாகும். எவ்வளவு விருப்பம் இருந்தபோதிலும் சரி, தொழிலாளர் வர்க்கத்தால் இவற்றில் எதையும் படைக்க முடியாது. இரண்டும் தற்காலச் சமுதாய நிகழ்வுப்போக்கிலிருந்து உதிக்கின்றன.
விஞ்ஞானத்தை எடுத்துச் செல்லும் ஊர்தி பாட்டாளி வர்க்கமல்ல, முதலாளி வர்க்கப் போக்குள்ள படிப்பாளிப் பகுதியே (காவுட்ஸ்கி கொட்டையெழுத்தில் போட்டது): இந்தப் பகுதியின் தனித்தனி உறுப்பினர்களின் சிந்தனையிலேதான் நவீனகால சோசலிசம் தோற்றம் எடுத்தது. அவர்கள்தாம் அதை மேலான அறிவு வளர்ச்சி பெற்ற தொழிலாளர்களிடம் கொண்டுபோனார்கள். இவர்கள் தம் முறைக்கு பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்திலே, நிலைமைகள் அனுமதிக்கிற அளவுக்கு, அதைப் புகுத்துகிறார்கள்.
எனவே, சோசலிஸ்டு உணர்வு எனப்பட்டது பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்துக்குள் வெளியிலிருந்து புகுத்தப்படுகிற ஒன்றாகும். உள்ளிருந்து தன்னியல்பாகத் தோன்றிய ஒன்றல்ல. அதன்படியேதான், பழைய ஹெய்ன்ஃபெல்ட் வேலைத் திட்டம் சரியாகக் கூறியது. தொழிலாளர் வர்க்கத்துக்குத் தனது நிலை பற்றிய உணர்வை, தனது பணியைப் பற்றிய உணர்வை ஊட்டுவது (உண்மையிலேயே சொன்னால், நிரப்புவது) சமூக - ஜனநாயகவாதத்தின் பணியாகும். வர்க்கப் போராட்டத்திலிருந்து உணர்வு தானாகவே உதிக்கிறதென்றால் இப்பணிக்கு அவசியமெதுவும் இராது. புதிய நகல் இந்த முன்கூற்றைப் பழைய வேலைத் திட்டத்திலிருந்து பிரதி செய்து கொண்டு மேலே சொன்ன முன்கூற்றை அத்துடன் இணைத்துள்ளது. ஆனால் இது சிந்தனைநெறியை முற்றாக அறுத்துவிட்டது.”
உழைக்கும் மக்கள் தமது இயக்கத்தின் நிகழ்வுப்போக்கிலே தாங்களாகவே ஒரு சுதந்திரமான சித்தாந்தத்தை வகுத்துக் கொள்ளும் பேச்சுக்கிடமில்லை. ஆதலால் ஒன்றுதான் தேர்ந்தெடுக்க உண்டு - முதலாளித்துவச் சித்தாந்தம் அல்லது சோசலிஸ்டு சித்தாந்தம், என்று. நடு வழி ஏதும் கிடையாது (ஏனெனில் மனித குலம் ஒரு “மூன்றாம்” சித்தாந்தத்தைப் படைக்கவில்லை; மேலும், வர்க்கப் பகைமைகளால் பிளக்கப்பட்டுள்ள ஒரு சமுதாயத்தில் வர்க்கத் தன்மையற்ற சித்தாந்தமோ வர்க்கத்துக்கு அப்பாற்பட்ட சித்தாந்தமோ என்றைக்கும் இருக்க முடியாது). எனவே, சோசலிஸ்டு சித்தாந்தத்தை எந்த விதத்தில் சிறுமைப்படுத்தினாலும், அதிலிருந்து இழையளவேனும் விலகிச் சென்றாலும் முதலாளித்துவ சித்தாந்தத்தைப் பலப்படுத்துவதாகவே பொருள்.”
ஆக தனியுடைமையை ஒழித்துக்கட்டி பொது உடைமையை உருவாக்க வேண்டும் என்ற சோசலிச உணர்வு, அதாவது பாட்டாளி வர்க்க அரசியல் உணர்வு, பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு வெளியிலிருந்துதான் புகுத்தப்பட வேண்டும். சரியாகச் சொல்வதென்றால், நிரப்பப்பட வேண்டும். இதில் எந்த ஜனநாயக மறுப்பும் கிடையாது. அப்படியானால் தொழிலாளர் வர்க்கம் மத்தியிலிருந்து தத்துவம் படைப்பவர்கள் எவரும் எழ மாட்டார்களா? எப்படி எழுவார்கள்? இந்த கேள்விகளுக்கு லெனின் பின்வருமாறு பதில் சொல்கிறார்.
“இப்படிப்பட்ட தத்துவத்தைப் படைப்பதில் தொழிலாளர்களுக்குப் பங்கு இல்லை என்று இதற்கு அர்த்தமல்ல. என்றபோதிலும், அவர்கள் பங்கு கொள்வது தொழிலாளர்கள் என்கிற முறையிலல்ல, சோசலிஸ்டுத் தத்துவ ஆசிரியர்கள் என்கிற முறையில் - புரூதோன்களைப் போல, வைட்லிங்குகளைப் போல; சுருங்கச் சொன்னால், அவர்கள் தங்கள் சகாப்தத்தின் அறிவைப் பெறவும் அதை வளர்க்கவும் ஏறத்தாழ முடிகிறபோதுதான், முடிகிற அளவுக்குத்தான், அவர்கள் பங்கு கொள்கிறார்கள்.
ஆனால், இதில் தொழிலாளர்கள் மேலும் அடிக்கடி வெற்றிபெறச் செய்வதற்கு பொதுவாகவே தொழிலாளிகளின் உணர்வின் தரத்தை உயர்த்துவதற்கு எல்லா முயற்சிகளும் எடுத்துக் கொள்ளவேண்டும்; “தொழிலாளிகளுக்கான இலக்கியம்” என்கிற செயற்கையாகக் குறுக்கப்பட்ட வரம்புகளுக்குள் தொழிலாளர்கள் நின்று விடாமல் பொதுவாக இலக்கியத்தைப் பயின்று புலமை பெற மேன்மேலும் கற்கவேண்டியது அவசியம்.
“ தொழிலாளர்கள் நின்று விடாமல்” என்று சொல்வதைவிட “தொழிலாளர்களை நிறுத்திவிடாமல்” என்று சொல்வது மேலும் உண்மையாயிருக்கும். காரணம் தொழிலாளர்களைப் பொறுத்தவரை படிப்பாளிப் பகுதிக்காக எழுதப்படுவதனைத்தையும் அவர்கள் வாசிக்க விரும்புகிறார்கள். வாசிக்கவும் செய்கிறார்கள். ஒரு சில மோசமான அறிவுஜீவிகள் தாம் “தொலாளர்களுக்குத்” தொழிற்சாலை நிலைமைகளைப் பற்றிச் சில விசயங்களைச் சொன்னால் போதும், எல்லோருக்கும் வெகுகாலமாகத் தெரிந்திருக்கிறவற்றையே திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தால் போதும் என்று நம்புகிறார்கள்”
தொழிலாளர் வர்க்கம் மத்தியிலிருந்து வரும் புரட்சியாளர்கள் விசயத்தில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விசயங்கள் பற்றி லெனின் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“நமது முதன்மையான முக்கியமான கடமை தொழிலாளி வர்க்கப் புரட்சியாளர்களைப் பயிற்றுவிக்க உதவுவதே, இவர்கள் கட்சி நடவடிக்கை விசயத்தில் அறிவுஜீவிகளிடையே இருந்து வரும் புரட்சியாளர்களுக்குச் சமமாக இருப்பார்கள் “கட்சி நடவடிக்கை விசயத்தில்” எனும் சொற்களை வலியுறுத்துகிறோம். ஏனெனில் மற்ற விசயங்களில் அறிவுஜீவிகளின் தரத்திற்குத் தொழிலாளர்களை உயர்த்துவது அவசியமாயினுங்கூட அது அவ்வளவு சுலபமோ அவசரத் தேவையோ அல்லன.
எனவே தொழிலாளர்களைப் புரட்சியாளர்களின் தரத்திற்கு உயர்த்துவதற்கு முதன்மையான கவனம் செலுத்த வேண்டும்; “பொருளாதாரவாதிகள்” செய்ய விரும்புவதுபோல் “உழைக்கும் மக்களின்” தரத்திற்கோ, ஸ்வபோதா செய்ய விரும்புவது போல் “சராசரித் தொழிலாளர்களின்” தரத்திற்கோ இறங்குவது நம் பணி அல்லவே அல்ல.”
வர்க்கங்கள் உள்ளவரை, வர்க்கப் பகைமைகள் நிலவும்வரை, வர்க்கப் போராட்டங்கள் நடந்தே தீரும். ஆனால், பாட்டாளி வர்க்கம் தனக்குள் ஒரு வர்க்கமாக இருக்கும் நிலையிலி ருந்து தனக்கான ஒரு வர்க்கம் என்ற நிலைக்குச் செல்ல, வெளியிலிருந்து பாட்டாளி வர்க்க அரசியல், பாட்டாளி வர்க்க இயக்கத்திற்குள் நுழைக்கப்பட வேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் புறநிலைரீதியான வரலாற்றுப் பாத்திரம், தனது உணர்வுபூர்வமான ஒன்று குவிக்கப்பட்ட வெளிப்பாட்டைப் பெறுவது, கம்யூனிஸ்ட் கட்சியில்தான், மார்க்சிய லெனினியத்தில்தான்.
இந்த பூமி, மனிதர்கள், லாபங்கள் ஆகியவை இன்றைய சமூகத்தின் முக்கிய மூன்று விசயங்கள் ஆகும் ( PLANET, PEOPLE, PROFIT ). முதலாளித்துவத்திற்கு உள்ளிருந்தே, நாடாளுமன்ற முறைக்கு உள்ளிருந்தே, லாபங்களைக் காட்டிலும் மக்களும் இந்த பூமியும் முதன்மையான வர்கள் என்ற கரிசனம் பிறக்காது. பொருளாதாரக் கொள்கையின் முதன்மை இடத்தில் மக்களையும் இந்த பூமியையும் நிறுத்த வேண்டுமானால், தொழில்மயமாக்கத்திற்கு மூலதனம் அத்தியாவசியமா என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டும்.
மூலதனமில்லாத தொழில் எனும்போது, இயந்திரமில்லாத தொழில், தொழில்நுட்பமில்லாத தொழில், நிதிகளில்லாத தொழில், நிர்வாகமில்லாத தொழில் என்றெல்லாம் அதற்குப் பொருள் ஆகாது. இவை எல்லாம் மூலதனத்தின் பண்புகளை வரையறை செய்யவில்லை.
சமூகமயமாக்கப்பட்ட உற்பத்தியின் பயன்களை தனிச்சொத்து அபகரிப்பதை உறுதி செய்யும் ஒன்று குவிக்கப்பட்ட முரண்பட்ட சமூக அதிகாரமே மூலதனம் ஆகும். மூலதனம் முதலாளித்துவம் ஆகியவை இல்லாத தொழில்மயமாக்கம் சாத்தியமென்பதைத்தான், 20ஆம் நூற்றாண்டு சோசலிசம் சொன்னது, 21ஆம் நூற்றாண்டு சோசலிசம் சொல்கிறது, சோசலிசம், உற்பத்தியை பொதுவுடைமையின் கீழ் வைப்பதன் மூலம், சமூகமயமாக்கப்பட்ட உற்பத்தியை தனிச்சொத்து அபகரிக்கும் முரண்பாட்டிற்கு தீர்வு காணும்.
அதற்கு, தனிச்சொத்தின் அடிப்படையிலான சுரண்டும் சமூகத்தைத் தாண்டி வெளியே செல்ல வேண்டும்; நாடாளுமன்றம் தாண்டிய மக்கள் போராட்டங்கள் வேண்டும்; இதுவரை இல்லாத வகையில், பெரும்பான்மை சிறுபான்மையை ஆளும் ஜனநாயகம் வேண்டும்.