COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, December 2, 2013

விவசாயத் தொழிலாளர்களை வஞ்சிக்கிற ஜெயலலிதா அரசாங்கத்துக்கு எதிராக

நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் சட்டக் கூலி ரூ.148 உடனே வழங்கு!
ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்கு!
குடும்பத்தில் இருவருக்கு வேலை கொடு!
தேர்தல் வாக்குறுதிப்படி வீட்டுமனை வழங்கு!

அக்டோபர் 25, 26 தேதிகளில் விருத்தாச்சலத்தில் நடந்த அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் மாலெ கட்சியின் 9ஆவது காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட விவசாய, கிராமப்புற போராட்டங்கள் குறித்த தீர்மானங்கள் மீது வகுப்பு நடைபெற்றது.

கூட்ட முடிவின்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சட்டப்படியான நாள் கூலி ரூ.148 உடனே வழங்கிட கோரியும், ஜெயலலிதா தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிப்படி  விவசாயத் தொழிலாளர்களுக்கு வீட்டுமனை, ஆடு, மாடு, மடிக்கணிணி, கிரைண்டர், மிக்ஸி ஆகியவற்றை உடனே வழங்கிட கோரியும் நவம்பர் 25 அன்று மாநிலத்தின் 8 மாவட்டங்களில் 15 ஒன்றியங்களில் 2300 பேர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

25.11.2013 அன்று திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்தில் 500 பேர் கலந்து கொண்ட பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அழிஞ்சிவாக்கத்தில் இருந்து அயலா தலைவர் தலைமையில் ஊர்வலமாக 2 கிலோ மீட்டர் சென்ற தோழர்கள் சோழவரம் பிடிஓ அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு நெற்குன்றம் ஊராட்சி மன்றத் தலைவர் தோழர் பி.சரஸ்வதி தலைமை தாங்கினார். அவிதொச மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ஜானகிராமன், சிபிஅய் (எம்எல்) மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார் கண்டன உரையாற்றினார்கள்.

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் ஒன்றியங்களில் அவிதொச தோழர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சிகளில் மாலெ கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் வெங்கடேசன் மற்றும் அவிதொச, முற்போக்கு பெண்கள் கழக மாவட்டத் தலைவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

தஞ்சை மாவட்டத்தில் திருப்பனந்தாள், திருவிடைமருதூர் ஒன்றியங்களில் 400க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அவிதொச மாநிலத் தலைவர் தோழர் டி.கே.எஸ்.ஜனார்தனன், மற்றும் அவிதொச தலைவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினார்கள். நாகை மாவட்டம் கொள்ளிடம், சீர்காழி, மயிலாடுதுறை ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மாலெ கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் இளங்கோவன், அவிதொச தலைவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

புதுக்கோட்டையில் கந்தவர்கோட்டை, குன்றான்டார்கோவில், கரம்பக்குடி ஒன்றியங்களில் 200 பேர் வரை கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மாலெ கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பி, அவிதொச மாநில நிர்வாகிகள் தோழர்கள் வளத்தான், ராஜாங்கம் மற்றும் மாவட்டத் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினார்கள்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் நடைபெற்ற எழுச்சியான ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாலெ கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.அம்மையப்பன் கண்டன உரையாற்றினார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 150 பேர் பங்கேற்றனர். அவிதொச மாவட்டத் தலைவர் தோழர் கணேசன் கண்டன உரையாற்றினார். கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன் கலந்துகொண்டார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் 300 பேர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் மாலெ கட்சி மாவட்டப் பொறுப்பாளர் தோழர் மதிவாணன் உரையாற்றினார்.

Search