COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, December 1, 2013

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது... தொழிலாளர் வர்க்க போராட்டங்கள்

அகில இந்திய தொழிற்சங்க மய்ய கவுன்சிலின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் 10.11.2013 அன்று நடைபெற்றது. 14.11.2013 அன்று தொடங்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பங்கேற்கக் கூடாது என கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியதுடன் 12.11.2013 அன்று அனைத்து பகுதி, ஆலைமட்ட கிளைச் சங்கங்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்த அழைப்பு விடுத்தது.

12.11.2013 அன்று  அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஆன்லோடு கியர்ஸ், பாலாஜி ஃபோர்ஜிங்ஸ், கிளைமேக்ஸ் ஆலைவாயில்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சிபிஅய் எம்எல் மாவட்ட செயலாளர் தோழர் எஸ்.சேகர், ஏஅய்சிசிடியு மாநில செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் ஜி.முனுசாமி, மோகன், வேணுகோபால், பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள் .

 திருப்பெரும்புதூரில் ஏசியன் பெயின்ட்ஸ் ஆலைவாயிலிலும் காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை வாயிலிலும் பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

இதே நாளில் சிபிஅய்எம்எல் தோழர்கள் அம்பத்தூர் வரதராசபுரத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு மாநில சிறப்புத் தலைவர் தோழர் எஸ்.ஜவகர் கண்டன உரையாற்றினார். இதே முழக்கங்களுடன் இந்நாளில் தமிழகத்தில் கோவை, நெல்லை, நாமக்கல், சேலம் ஆகிய மய்யங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர் தோழர்கள் கலந்துகொண்டனர்.

Search