COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, December 1, 2013

அம்பத்தூரில் லட்சம் மக்களை சந்திக்கும் மாலெ கட்சி கையெழுத்து இயக்கம்

அம்பத்தூரில் லட்சம் மக்களை சந்திக்கும் கையெழுத்து இயக்கம் தொடங்கியது. அம்பத்தூரில் அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர் வேலைகள், போராட்டங்கள், ஒப்பந்தங்கள், வெற்றிவிழா என முன்னே செல்கிறது. 8 இலட்சம் மக்கள் வாழ்கிற இப்பகுதியிலுள்ள ஏழை, எளிய மக்களின் கவலைகள், விருப்பங்கள், எதிர்ப்பார்ப்புக்களை இயக்கமாக்கி வழிநடத்த உழைப்போர் உரிமை இயக்கம், புரட்சிகர இளைஞர் கழகம், கட்சிக் கிளைகள் இணைந்து கையெழுத்து இயக்கம் நடத்துகின்றன.

அம்பத்தூரில் 1000 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை வேண்டும், இந்தப் பகுதியில் 350 சாராயக் கடைகளை திறந்துள்ள தமிழக அரசு வட்டம்தோறும் மேல்நிலைப் பள்ளிகள் அமைக்க வேண்டும், அரசுக் கல்லூரி உருவாக்க வேண்டும், தமிழக முதல்வர் ஏப்ரல் 2011ல் வீடில்லா மக்களுக்கு வீட்டு மனைகள் தருவேன் என்று சொன்ன வாக்குறுதிப்படி, வீட்டுமனை தர வேண்டும், உழைப்பவர் எவரானாலும் ரூ.15,000 குறைந்தபட்ச சம்பளம் கிடைக்க தமிழக அரசு வழி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து லட்சம் கையெழுத்துக்களை திரட்டும் இயக்கத்தை 26.11.2013 அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி துவக்கி வைத்தார். புரட்சிகர இளைஞர் கழகத்தின் தேசியச் செயலாளர் தோழர் பாரதி சிறப்புரையாற்றினார்.

உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர் மோகன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். எழுச்சியாக நடைபெற்ற இக்கூட்டத்தில் அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம், அகில இந்திய தொழிற் சங்க மய்யக் கவுன்சில் மாநிலத் தலைவர்கள் கையெழுத்திட்டு துவங்கி வைத்தனர்.

கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் குமாரசாமி உரையாற்றும் போது வரவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் சிபிஅய் (எம்எல்) கட்சி திருப்பெரும்புதூர் தொகுதியில் களம் காணுகிறது என்ற செய்தியுடன் ஆட்சியில் உள்ள கொள்கைகளை வீழ்த்த மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதை வேண்டி கையெழுத்தியக்கம் நடத்துகிற தோழர்களுக்கு உழைக்கும் மக்கள் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Search