COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, December 1, 2013

ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் ‘நோட்டா’ பிரச்சாரம்

ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 68 விரிவாக்கப் பணிக்காக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறித்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. அகில இந்திய விவசாய மகாசபாவும், இகக(மாலெ)யும் நியாயமான இழப்பீடு கேட்டு தொடர் போராட்ட இயக்கங்கள் கட்டமைத்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக விவசாய மக்களை வஞ்சித்த அதிமுக, திமுக கட்சிகளை புறக்கணிக்க வலியுறுத்தியும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 49ஓ படி யாருக்கும் வாக்களிக்காமல், வாக்கு இயந்திரத்தில் None of the above (NOTA)பட்டனை பயன்படுத்தும்படி கேட்டும் பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது.

தோழர்கள் 10 குழுக்களாக வீடு வீடாகச் சென்று துண்டறிக்கை விநியோகம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மாலெ கட்சி மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் சந்திரமோகன் மற்றும் மோகனசுந்தரம் பிரச்சாரத்தில் கலந்துகொண்டனர்.

இகக, இககமா ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பின்னணியில், நோட்டா பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மாலெ கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் மோகனசுந்தரம், மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் அய்யந்துரை மற்றும் தோழர் செல்வராஜ் ஆகியோர் ஜெயலலிதா பிரச்சாரத்துக்கு வந்த அன்று கைது செய்யப்பட்டனர். கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிறகே விடுதலை செய்யப்பட்டனர்.

Search