COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, December 1, 2013

திருபெரும்புதூர் தொழிலாளர் மத்தியில் புரட்சிகர இளைஞர் கழகத்தின் கையெழுத்து இயக்கம்

திருபெரும்புதூரில் ரஷ்யப் புரட்சி தினமான நவம்பர் 7 அன்று பயிற்சியாளர் நலன் காக்கும் மசோதா 47/2008க்கு மத்திய அரசு ஒப்புதல் பெறுதல் தொழிற்சங்க அங்கீகாரச் சட்டம், பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்புடன் கூடிய போக்குவரத்து வசதி, விடுதி வசதி, தொழிலாளர் குடியிருப்புக்கள், உழைப்பவர் எவரானாலும் மாதம் ரூ.15,000 சம்பளம் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புரட்சிகர இளைஞர் கழகத்தின் கையெழுத்தியக்கம் தொடங்கப்பட்டது.

இதுவரை சுமார் 100 இளம் தொழிலாளர்கள் இந்த இயக்கத்தில் பணியாற்றி வருகிறார்கள். திருபெரும்புதூரில் பல தெருக்களில் மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக வேலைக்குச் சென்று வரும் தொழிலாளர்களைச் சந்தித்து கையெழுத்துக்களை திரட்டுகிறார்கள். இதுவரை 10,000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர். சில ஆயிரங்கள் நிதி தந்துள்ளனர். சுங்குவார்சத்திரம், ஓரகடம், இருங்காட்டுக்கோட்டை தொழிற்பேட்டைகளில் ஆலைவாயில்களில் கையெழுத்து திரட்டும் பணிகள் நடக்கவுள்ளன.

Search