COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, December 1, 2013

அகில இந்திய மாணவர் கழக ஆர்ப்பாட்டம்

நவம்பர் 15 அன்று மதுரையில் அகில இந்திய மாணவர் கழகம் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர் பிரச்சனைகள் குறித்து கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தியது. அகில இந்திய மாணவர் கழக  மாவட்ட அமைப்பாளர் தோழர் அருண் தலைமை வகித்தார்.

சுயநிதிக் கல்லூரிகளில் பயிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என்ற அரசாணையை அரசு முழுமையாக/முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினருக்கான மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை திட்டத்தை (Post Metric Scholarship) தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிட வேண்டும், லிங்டோ கமிட்டி பரிந்துரைப்படி மாணவர் பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தும், மாணவர்களின் பிரச்சனைகளை முன்னெடுத்துப் போராடும் பல்கலை ஆய்வாளர்கள் அருண் மற்றும் பாண்டியராஜன் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முயலும் மதுரை பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்தும் மாணவர்கள் முழக்கம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில்  அகில இந்திய மாணவர் கழக மாநிலக் குழு உறுப்பினர் தோழர் பாண்டியராஜன் உட்பட மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். அகில இந்திய மாணவர் கழக மாநில துணைத் தலைவர் தோழர் சத்ய கிருஷ்ணன் கண்டன உரையற்றினார். எஸ்எப்அய் புறநகர் மாவட்ட செயலாளர் தோழர் கண்ணன், மூட்டா (ஙமபஅ) சார்பாக தோழர் எழில், மாலெ கட்சி மாவட்ட பொறுப்பாளர் தோழர் மதிவாணன் உரையாற்றினர்.

Search