(20 - 26 டிசம்பர் 1992 கொல்கத்தாவில் நடந்த இககமாலெ அய்ந்தாவது அகில இந்திய மாநாட்டில் தோழர் வினோத் மிஸ்ரா (24.03.1947 - 18.12.1998) முன்வைத்த அரசியல் அமைப்பு அறிக்கையிலிருந்து)
கடந்த ஒரு சில வருடங்களாக இந்தியாவின் வகுப்புவாத சூடு தணியாமல் தொடர்ந்து அதிகரித்து வரவே செய்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும் அதையடுத்து ஆயிரம் பேர் பலியாகி மேலும் பலர் காயமடைந்த நாடு தழுவிய துயரச் சம்பவத்தையும் அடுத்து வகுப்பு வாதம் அரசியல் நிகழ்ச்சிநிரலில் முதல் இடத்திற்கு வந்துள்ளது.
நேருவிய பொருளாதார முன்மாதிரியின் வீழ்ச்சி, அரசியல் அமைப்பு மீது வளர்ந்து வரும் மக்கள் அதிருப்தி, தேசிய ஒற்றுமைக்கு எதிரான உண்மையான மற்றும் கற்பனைரீதியான அச்சுறுத்தல்கள், வலதுசாரி மற்றும் அடிப்படைவாத எழுச்சிக்கான சர்வதேச சூழல் ஆகிய பல காரணிகள், வகுப்புவாத கருத்தியலும் அரசியலும் வளர்வதற்கு உகந்த சூழல் ஏற்பட பங்களிப்பு செய்துள்ளன.
பிரதான நீரோட்டத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் - காங்கிரஸ் (இ) ஜனதா தளம், சிபிஅய் மற்றும் சிபிஅய் (எம்) ஆகிய அனைத்தும் உட்பட, ஏதேனும் ஒரு கட்டத்தில் பிஜேபி தொடர்பாகக் கடைபிடித்த அரசியல் சந்தர்ப்பவாதம் பிஜேபியின் வளர்ச்சிக்கு மேலும் உதவியது.
ராம் ஜன்ம பூமி - பாபர் மசூதி பிரச்சனை இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையிலான வெறும் கோவில் – மசூதி பிரச்சனை மட்டுமல்ல என்பது தெளிவாக புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபியின் புத்திசாலித்தனமான தலைமை, பாபர் மசூதியை இந்து இந்தியாவின் மீதான முஸ்லீம் படையெடுப்பின் நினைவுச் சின்னமாக இடைவிடாமல் முன்னிறுத்தி வந்துள்ளது. இந்து மகிமை மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டுமானால், மசூதி நொறுக்கப்பட வேண்டும் என கூறிவந்துள்ளது.
இங்ஙனம் ராம ஜென்ம பூமி, இந்து ராஜ்ஜியம் என்ற நெடுநாளைய ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் மிகவும் குறிப்பானதோர் சின்னமாக ஆகியது. அப்பாவி இந்து மக்கள் மத்தியில் பெரும் எண்ணிக்கையினரைக் கவர்ந்தது.
அத்துடன் சங் குடும்பத்தால் திறம்பட கட்டமைக்கப்பட்ட பெரும்மக்கள் இயக்கத்தின் குணாம்சத்தைப் பெற்றது. மதம் என்ற முகமூடிக்குப் பின்னால் உண்மையில் அரசியலும் கருத்தியலுமே இருந்தன. ராமர் பெயர், பாஜகவை நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குக்கும் கொண்டு சென்று குறுகிய காலத்திற்குள் அதை பிரதான எதிர்க்கட்சியாக்க உதவியது.
நான்கு மாநிலங்களில் பாஜக அதிகாரத்தில் இருப்பதனால், இந்து ராஜ்யக் கருத்தியலைப் பரப்பும் மய்யங்களாக பள்ளிக்கூடங்களை மாற்ற, ஆர்எஸ்எஸ், பள்ளி பாடத்திட்டங்களை உடனடியாக மாற்றத் தொடங்கியது.
இங்ஙனம் பாஜக, மார்க்சிஸ்ட் மற்றும் பல்வேறு இதர சோசலிச இலட்சியங்கள் பின் வாங்கியதாலும், காங்கிரஸ் அவப்பெயருக்கு உள்ளானதாலும் ஏற்பட்ட, கருத்தியல் அரசியல் வெற்றிடத்தைப் பயன்படுத்தி, வகுப்புவாத - பாசிச மாற்றாக தோன்றியுள்ளது. முதலாளித்துவ வர்க்கம், மற்றும் நிலப்பிரபுக்களின் மிகவும் பழமைவாதப் பிரிவின் பிரதி நிதித்துவரீதியான சிந்தனையாக விளங்கும் பாசிசம், அதன் தன்மையிலேயே அடாவடிக் குணத்தைக் கொண்டது. ஓரிரு மாநிலங்களில் பெற்ற அதிகாரத்தோடு திருப்தியடைந்து விடக்கூடிய கட்சியல்ல பாஜக.
டெல்லியில் அதிகாரத்தைக் கைப்பற்ற அடுத்த பாய்ச்சலை மேற்கொள்ள அது துடித்துக் கொண்டிருக்கிறது. எனவே அது அயோத்யா பிரச்சனையில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டு வந்தது. பாபரி மசூதி இடிக்கப்படுவதைக் கட்டமைத்தது. இப்போது காசியிலும் மதுராவிலும் முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களை இடிக்கப்போவதாக புதிய அச்சுறுத்தல்களை விட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த வகுப்புவாதத் தாக்குதல்களுக்கு அதிகாரபூர்வ பதில், தாராளவாத இந்து கருத்தை எழுப்புவதோடும், சட்டரீதியான வழிகளைக் கையாளுவதோடும் நின்று விடுகிறது. பிரதான நீரோட்ட இடதுசாரி பதிலும் இந்த எல்லைக்கோட்டை ஒருபோதும் தாண்ட முடியவில்லை. இது இறுதியில் ‘கோவில் கட்டப்படட்டும், மசூதி இருக்கட்டும், சட்டத்தைப் பின்பற்றுவோம்’ என்ற கோஷ மாக போய் முடிந்தது.
மார்க்ஸ் உயிரோடு இருந்திருந்தால், இந்தியாவில் எல்லா போராட்டங்களும், வர்க்கங்களுக்கிடையிலான போராட்டமானாலும் சரி, கருத்துக் கோப்புக்களுக்கிடையிலான போராட்டமானாலும் சரி, சமரசங்களில்தான் முடிவடைகின்றன என கருத்து தெரிவித்திருப்பார். மதச்சார்பின்மை விசயத்திலும் அப்படியே.
இந்துக்கள் பெரும்பான்மையினராக இருப் பதால்தான் இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கிறது என்ற மற்றொரு பாஜக பிரச்சாரத்தால் பலர் கவரப்பட்டுள்ளனர். இஸ்லாமில் உள்ளார்ந்திருப்பதாகக் கூறப்படும்
அடிப்படை வாதத்திற்கு நேர்மாறாக, இந்து மதம் தாராளவாதத் தன்மையும் சகிப்புத் தன்மையும் வாய்ந்தது என்ற கருத்து இதில் உட்பொதிந்துள்ளது.
முதலாவதாக, அயோத்யா சம்பவங்கள் இந்த மாயையை ஆணித்தரமாக தகர்த்திருக் கின்றன. அயோத்யாவை தனது ஹிந்து வாடிகனாக சொல்லிக் கொண்டு, விஸ்வ ஹிந்து பரிஷத் போன்று ஒரு கட்டமைக்கப்பட்ட இயல்பை ஹிந்துயிசம் மேற்கொண்டவுடனேயே, ஹிந்து மடாதிபதிகள், வேறு எந்த மதத்தையும் சேர்ந்த அடிப்படைவாதிகளைப் போலவே வெறியர்களாகவும் தீவிரவாதிகளாக வும் வெளிப்பட்டனர்.
இரண்டாவதாக, மதச்சார்பின்மைக்கும் (சர்வ தர்ம சம்பவே) எல்லா மதமும் சமம் என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது மதச்சார்பின்மையை இந்தியமயமாக்குவது என்ற பெயரில், இந்தியாவின் நவீன சமூக சிந்தனையாளர்களால் அதற்கு கொடுக்கப்பட்ட அர்த்தம். மதச்சார்பின்மை என்பது முக்கியமாக அரசு விவகாரங்களைக் கட்டமைப்பதில் மதத்தை நிராகரிப்பது என்று அர்த்தம்.
மூன்றாவதாக, எங்கும் மதச்சார்பற்ற அரசு என்பது வெற்றிகரமான ஜனநாயகப் புரட்சியின் விளைபொருளாகும். இந்தியாவில் மதச்சார்பின்மை எனும் கருத்துக்கோப்பை நீர்த்துப் போகச் செய்வதற்கான நிர்ப்பந்தமே இந்திய ஜனநாயகப் புரட்சியின் முடிக்கப்படாத குணாதிசயத்திற்கான மற்றொரு வாக்குமூலமாகும். எந்த ஒரு மதத்தின் பழமைவாத முகமோ அல்லது தாராளவாத முகமோ எது மேலோங்கிய நிலையை மேற்கொள்கிறது என்பது சிவில் சமூகத்தின் பரிணாம வளர்ச்சிக் கட்டத்தோடு தொடர்புடையது.
கிருஸ்த்துவ மதம் பழமைவாதக் கட்டத்திலிருந்து தாராளவாதத்திற்கு கடந்து சென்று கொண்டிருக்கிறது அல்லது உள்ளார்ந்தரீதியில் தாராளவாதத் தன்மை வாய்ந்தது என்று சொல்லப்பட்ட சீக்கிய மதம், காலிஸ்தான் எழுச்சியையடுத்து பழமைவாதத் தன்மைவாய்ந்ததாக மாறிக் கொண்டிருப்பது இவையெல்லாம் இந்த சமூக விதிக்கான எடுத்துக் காட்டுகளாகும்
பாபர் மசூதி இடிக்கப்பட்டது இந்து மத அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதாக தாராளவாத ஹிந்து அறிவுஜீவிகளெல்லாம் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதே நேரத்தில், இந்த பாழடைந்த கட்டிடத்தின் மீதான அதிலும் வழிபாடு நடக்காத இந்த மசூதி மீதான தங்கள் கோரிக்கையை முஸ்லீம் தலைவர்கள் ஏன் விட்டுக்கொடுக்கவில்லை என்றும் வியப்பு தெரிவிக்கின்றனர். இசுலாமியர்களைப் பொறுத்தவரையிலும் கூட பாபர் மசூதி என்பது இந்தியாவின் சிக்கலான சமூக பொருளாதார நிலைமைகளில் அவர்களது அடையாளத்தையும் இருத்தலையும் குறிக்கும் நினைவுச் சின்னம் என்பதை அவர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள்.
இந்திய மதச் சார்பற்ற அறிவுஜீவிகள் சாமானியனிடமிருந்து தனிமைப்பட்டிருப்பதும், அதன் காரணமாக, வகுப்புவாதத் தாக்குதலின் முன்னிலையில் அவர்களுக்கு ஏற்படும் பீதியும், சில நேரங்களில் கோயிலுக்கு எதிராக மண்டலை நிறுத்துவது என்ற எதிர்மறையான போர்த்தந்திரத்தை சார்ந்திருக்க வைத்துள்ளது. இந்த போர் தந்திரம் சென்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது.
இன்றைய வகுப்புவாத தாக்குதலுக்கு எதிராக பரந்த மக்கள் கருத்தை அணிதிரட்ட இந்துயிசம் மற்றும் இஸ்லாம் ஆகிய இரு மதங்களின் தாராளவாத நெறிகளையும், அதோடு தொல்பொருள் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் நீதிமன்ற தீர்ப்புகள் ஆகிய அனைத்தையும் நன்கு பயன்படுத்த வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும், சுதந்திரமான இடதுசாரி மேடையிலிருந்து நவீன மதச்சார்பற்ற இலட்சியங்களை பரவலாக பிரச்சாரம் செய்வது மட்டுமே எதிர்த்தாக்குதலுக்கான சாராம்சரீதியாக கருவாக அமைய முடியும்.
மேலும், மதச்சார்பின்மை என்ற பெயரால், ஜனநாயக அல்லது மதச்சார்பற்ற முன்னணி என்ற பெயரால் எல்லா வகையான சந்தர்ப்பவாத கூட்டுகளையும் நியாயப்படுத்தக் கூடாது. மாறாக அது ஜனநாயகப் புரட்சியின் பிரிக்கப்பட முடியாத பகுதியாக ஆக்கப்பட வேண்டும். ஜனநாயகப் பிரச்சனைகளையும் கூட கையிலெடுக்கக் கூடிய ஒரு மதச்சார்பற்ற முன்னணி என்பதற்கு பதிலாக, ஒரு மதச்சார்பற்ற அரசை அமைப்பதை தனது நிகழ்ச்சிநிரலில் முதன் மையாகக் கொண்ட ஒரு ஜனநாயக முன்னணியை நாம் கொண்டிருக்க வேண்டும். அது வெறும் நியாய நெறி பிரச்சனையாக அல்லாமல் ஒரு நடைமுறை அரசியல் பிரச்சனையாக, ஒரு நவீன இந்தியாவைக் கட்டுவதற்கான முழு முதல் நிபந்தனையாக இருக்க வேண்டும்.

-- இகக மாலெ 9ஆவது காங்கிரஸ் ஆவணம்நாம், சங்பரிவாரின் மதவெறி அரசியலில் இருந்து மட்டுமின்றி, கட்டற்ற அதிகாரம் மற்றும் சூறையாடலுக்காக பசியுடன் காத்திருக்கிற பெரும்தொழில் குழும உலகில் இருந்தும் இன்று மோடி தமது சக்தியைப் பெறுகிறார் எனப்புரிந்து கொள்ளும்போது, மோடி மாதிரிக்கெதிரான போராட்டத்தை வெறுமனே மதவெறி எதிர் மதச்சார்பின்மை வழிகளில் தொடர முடியாது என்பதை அங்கீகரித்தாக வேண்டும்; மாறாக அது உழைக்கும் மக்களின் பெரும்தொழில் குழும எதிர்ப்பு மற்றும் ஜனநாயகத்திற்கான தொடர் போராட்டங்களில் இருந்து பலம் பெற வேண்டும். மோடி முத்திரை அரசியலோடு பிரிக்க முடியாதபடி பிணைந்துள்ள மதவாத பயங்கரம், பெரும் தொழில்குழும மூலதனம் அரசு ஒடுக்குமுறை, ஏகாதிபத்தியத்தின் பயங்கரவாதத்திற்கெதிரான போரின் ஒரு பகுதியாக இஸ்லாமியர்களை குற்றவாளிகளாகக் காட்டுவது ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களை திறம்பட இணைப்பதன் மூலம்தான் மோடி மாதிரியை எதிர் கொள்ள முடியும். மக்களின் ஓர் அதிஉயர்ந்தபட்ச அறுதியிடலும் இடதுசாரி ஜனநாயக சக்திகளின் சக்தி வாய்ந்த தலையீடும் மட்டுமே நாடு ஒட்டு மொத்தமாக பெரும் தொழில் குழும - பாசிச கையகப்படுத்தல் ஆபத்துக்கு ஆளாவதில் இருந்து காப்பாற்ற முடியும்.
ஜனநாயக அல்லது மதச்சார்பற்ற முன்னணி என்ற பெயரால் எல்லா வகையான சந்தர்ப்பவாத கூட்டுகளையும் நியாயப்படுத்தக் கூடாது. மாறாக, அது ஜனநாயகப் புரட்சியின் பிரிக்கப்பட முடியாத பகுதியாக ஆக்கப்பட வேண்டும். ஜனநாயகப் பிரச்சனைகளையும் கையிலெடுக்கக் கூடிய ஒரு மதச்சார்பற்ற முன்னணி என்பதற்கு பதிலாக, ஒரு மதச்சார்பற்ற அரசு அமைப்பதை தனது நிகழ்ச்சி நிரலில் முதன்மையாகக் கொண்ட ஒரு ஜனநாயக முன்னணியை நாம் கொண்டிருக்க வேண்டும்.