இரட்டை
ஆயுள் தண்டனையில் இருந்து விடுதலை பெற்ற
பிரிக்கால் தொழிலாளர் முன்னோடிகளுக்கு
கோவை சிறை வாயிலில் வரவேற்பு
இரட்டை
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிரிக்கால்
தொழிலாளர் முன்னோடிகள் 8 பேரில் 6 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தால்
விடுவிக்கப்பட்டனர். தோழர் குணபாலன் ஏற்கனவே
பிணையில் விடுதலையாகியுள்ள நிலையில், விடுதலை செய்யப்பட்ட தோழர்கள்
சிவக்குமார், ராஜேந்திரன், சரவணக்குமார், வேல்முருகன் ஆகியோர் ஜனவரி 23 அன்று
கோவை சிறையிலிருந்து வெளியில் வந்தனர்.
சிறை வாயிலில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் செங்கொடிகளுடன் திரண்டு அவர்களுக்கு வரவேற்பளித்தனர்.
சிறை வாயிலில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் செங்கொடிகளுடன் திரண்டு அவர்களுக்கு வரவேற்பளித்தனர்.
ஏஅய்சிசிடியு
அகில இந்தியத் தலைவர் தோழர் குமாரசாமி,
தோழர் என்.கே.நடராஜன்,
இககமாலெ மாநிலக் குழு உறுப்பினர்
தோழர் பாரதியோடு தோழர்கள் சுரேஷ், அதியமான், சங்கர்,
லூயிஸ் ஆகியோர் அடங்கிய வழக்கறிஞர்
குழு, இகக(மாலெ) மாவட்டச்
செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன் பிரிக்கால்
சங்கத் தலைவர்கள் தோழர்கள் குருசாமி, ஜானகிராமன், கிருஷ்ணமூர்த்தி, கட்சி முன்னணிகள் தோழர்கள்
நாராயணன், வேல்முருகன், பெரோஸ் பாபு ஆகியோர்
வந்திருந்தனர். சாந்தி கியர்ஸ் தொழிற்சங்கத்
தலைவர் தோழர் பிரகாஷ், பொதுச்
செயலாளர் தோழர் மயில்சாமி, இகக(மாலெ) மாவட்டக் குழு
உறுப்பினர்கள் தோழர் பாலமுருகன், தோழர்
சந்திரசேகர் ஆகியோருடன் சாந்தி கியர்ஸ் தொழிலாளர்கள்
50 பேரும் சிறை வாயிலுக்கு வந்திருந்தனர்.
ஜனவரி 27 அன்று தோழர் சம்பத்குமார்
விடுதலையானார். அவரை வரவேற்கவும் பிரிக்கால்
தொழிலாளர்கள் சிறை வாயிலுக்குச் சென்றிருந்தனர்.
ஜனவரி
23 அன்று மாலை பிரிக்கால் சங்க
அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இகக
(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன் தலைமை
வகித்தார். விடுதலை பெற்று வந்தவர்களுக்கு
சால்வை அணிவிக்கப்பட்டது. விடுதலையான தோழர்கள் குணபாலன், சிவக்குமார் ஆகியோர் உரையாற்றினர். ஏஅய்சிசிடியு
மாநிலச் செயலாளர் தோழர் குருசாமி, இகக(மாலெ) மாநிலக்குழு உறுப்பினர்
தோழர் பாரதி, இறுதியாக ஏஅய்சிசிடியு
அகில இந்திய தலைவர் தோழர்
குமாரசாமி உரையாற்றினர். தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விடுதலையான
தோழர் சிவக்குமார், சங்கமும் தொழிலாளர் வர்க்கமும் எங்களை கைவிடாது என்ற
நம்பிக்கை எங்களுக்கு இருந்தது, இந்த ஆண்டு பிரிக்கால்
நிர்வாகத்துடன் நீண்ட கால ஒப்பந்தப்
பேச்சுவார்த்தைகள் எதிர்வருகிற நிலையில் இனி நாம் அடுத்த
கட்ட தீவிரமான போராட்டத்துக்குத் தயாராக வேண்டும் என்றார்.