இந்த ஹுண்டாய் தொழிலாளிக்கு
தமிழ்ப்பற்று
இல்லையா?
நிறுவனம் எங்கள ரொம்ப கேவலமா நடத்துச்சு. எங்க உரிமைக்காக நாங்க ஸ்ட்ரைக் பண்ணப்ப எங்கள கம்பனி வாசல்ல நிற்க விடல. 200 மீ தாண்டி போகனும்னு சொன்னாங்க. சங்க கொடிய கேட்ல ஏத்த விடல. இன்னிக்கு அதே கேட்ல ஜல்லிக்கட்டு தடையை கண்டிச்சு தொழிலாளியெல்லாம் நின்னு ஆர்ப்பாட்டம் நடத்த நிர்வாகம் அனுமதிச்சுது.
நிர்வாகத்தைச் சேர்ந்த பணியாளர்கள், அதிகாரிகள் எல்லாம் கேட்டுக்கு வந்து நின்னாங்க. அப்ரன்டீஸ், ட்ரெய்னீஸ்களை அங்க நிக்க அனுமதிச்சாங்க. கம்பெனி பஸ் வழக்கமாக எடுக்குற நேரத்தை விட அரை மணி நேரம் கழிச்சுதான் எடுத்தாங்க. அங்க இருந்த காவல்துறையும் இந்த எல்லாத்துக்கும் ஒத்துழைப்பு குடுத்தாங்க.
கார்ப்பரேட்
நிறுவனங்களுக்கு இந்தப் போராட்டத்துல அப்படி
என்ன அக்கறை?
மறுநாள்
சிப்காட் தொழிலாளர்கள் சேர்ந்து சிப்காட் நுழைவாயில் வரைக்கும் 200 பேருக்கு மேல் பேரணியாக வந்து
கோஷம் போட்டு கலைஞ்சு போனாங்க.
காவல்துறை ஒத்துழைப்பு தந்தாங்க. எதாவது போராட்டம்னு அனுமதி
கேட்டா வழக்கமா இழுத்தடிப்பாங்க. மெரட்டுவாங்க.
அனுமதி மறுப்பாங்க. ஆனா, இந்த ஆர்ப்பாட்டத்துக்கு
சில மணி நேரத்தில அனுமதி
எப்படி குடுத்தாங்க?
கொரியன்
அதிகாரி தமிழ் தொழிலாளி மேல்
ஏறி காலால் மிதிச்சப்போ அதை
தொழிலாளி கேள்வி கேட்டப்போ, இதே
காவல்துறைதான் அந்தத் தொழிலாளியை ஒடுக்குனாங்க.
ஒரகடத்துல
2000 பேர் சேர்ந்து ஆர்ப்பாட்டம் பண்ணாங்க. கார்ப்பரேட் கம்பெனியெல்லாம் பன்னாட்டு நிறுவனம் எல்லாம் பண்பாடு காக்க
பொறப்பட்டுட்டாங்க
தமிழர்களோட
நிலம், வாழ்வியல் எல்லாத்தையும் பறிச்சுகிட்டவங்க இப்ப
பண்பாடு காக்கிறாங்க.
(இந்தக்
கருத்தை வெளிப்படுத்திய தொழிலாளி பெயரைச் சொன்னால் அவரது
வேலை பறி போகலாம். அவர்
தமிழர் என்பதற்காக அவரை விட்டுவைக்க மாட்டார்கள்).