இந்துத்துவ மதவெறி, சாதியாதிக்க சக்திகளால்
தோழர் மாரியப்பன் படுகொலை செய்யப்பட்டு ஓராண்டு
நிறைவு
நெல்லையில்
புரட்சிகர இளைஞர் கழகத்தின் கண்டன
நிகழ்ச்சி
இந்துத்துவ
மதவெறி, சாதியாதிக்க ரவுடிக் கும்பலால், புரட்சிகர
இளைஞர் கழக தோழர் மாரியப்பன்
கடந்த ஆண்டு ஜ÷லை 20 அன்று
நெல்லை பாட்டப்பத்தில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்
. வறுமை,
வேலையின்மை, வருமானமின்மை ஆகியவற்றால் வாடும் இளைஞர்களைத் திசை
திருப்பி மதவெறியை, சாதிவெறியை பற்ற வைக்கும் காவி,
கார்ப்பரேட் கூட்டத்தின், ஊழல் ஆட்சியாளர்களின் சதிகளை
முறியடிப்போம், பகத்சிங்கின் புரட்சிகரப் பாதையை முன்னெடுப்போம் என்ற
முழக்கத்துடனும் சாதியாதிக்க, மதவெறித் தாக்குதல்களுக்கு எதிராகவும் தோழர் மாரியப்பன் படுகொலை
செய்யப்பட்ட முதலாண்டு நிகழ்ச்சி நெல்லையில் ஜ÷லை 25 அன்று நடைபெற்றது.
புரட்சிகர
இளைஞர் கழகத்தின் நெல்லை மாவட்ட அமைப்பாளர்
தோழர் எம்.சுந்தர்ராஜ் தலைமை
தாங் கினார். இகக (மாலெ)
மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ்
துவக்க உரையாற்றினார். இகக (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)
மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி
சிறப்புரையாற் றினார். அகில இந்திய
மக்கள் மேடை யின் தேசிய
பிரச்சாரக் குழு உறுப்பினர் தோழர்
சு.ப.உதயகுமார், புரட்சிகர
இளைஞர் கழக தேசியச் செயலாளர்
தோழர் கே.பாரதி உரையாற்றினர்.
அஞ்சலித் தீர்மானத்தை ஏஅய்சிசிடியு மாவட்டப் பொதுச் செயலாளர் தோழர்
கே.கணேசன் முன்வைத்தார். இகக
(மாலெ) நெல்லை மாவட்டச் செயலாளர்
தோழர் டி.சங்கரபாண்டியன், புரட்சிகர
இளைஞர் கழக மாநிலத் தலைவர்
தோழர் எஸ்.ராஜகுரு, அகில
இந்திய மாணவர் கழகத்தின் மாநிலச்
செயலாளர் தோழர் வி.சீதா
கருத்துரையாற்றினர்.
ஜனநாயக
சலவைத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர்
தோழர் எம்.கணேசன் நன்றி
கூறினார். மக்கள் கோரிக்கைகளுக்காக போராடுகிற,
குரல் கொடுக்கிற பேராசிரியர் ஜெயராமன், கல்லூரி மாணவர்கள் வளர்மதி,
குபேரன், தோழர் திவ்யபாரதி, மே
17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி போன்றவர்களைக் கைது
செய்வது, குண்டர் சட்டத்தில் போடுவது
போன்ற தமிழக அரசின் ஒடுக்குமுறை
நடவடிக்கைகளுக்கு கூட்டம் கண்டனம் தெரிவித்தது.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் நம்பிக்கையை
முழுவதுமாக இழந்துவிட்ட பழனிச்சாமி அரசு உடனடியாகப் பதவி
விலக வேண்டும் எனவும் இந்துத்துவ
மதவெறி, சாதியாதிக்க மத்திய அரசுக்கும் அதன்
எடுபிடியாகச் செயல்படும் மாநில அரசுக்கும் எதிராக
தலித், சிறுபான்மையினர் மற்றும் உழைக்கும் மக்கள்
அனைவரும் ஒன்றுபட்டு திரண்டு போராட வேண்டும்
எனவும் அறைகூவல் விடுக்கப்பட்டது.
இகக (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மத்தியக் குழு உறுப்பினர் தோழர்
பாலசுந்தரம், குமரி மாவட்டச் செயலாளர்
தோழர் அந்தோணிமுத்து, புரட்சிகர இளைஞர் கழக மாநிலப்
பொதுச் செயலாளர் தோழர் ஜி.தனவேல்,
ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர்
மேரி ஸ்டெல்லா ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.