மக்கள்
நலனே கட்சியின் நலன்
தோழர் சாரு மஜும்தார் நினைவு
தினக் கூட்டங்கள்
மக்கள்
நலனே கட்சியின் நலன் என்ற முழக்கத்துடன்
தோழர் சாரு மஜ÷ம்தார் நினைவு
தினமான ஜுலை 28 அன்று இகக
மாலெ நாடெங்கும் பல்வேறு நிகழ்ச்சிகளைக் கட்டமைத்தது.
இந்த நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின்
பல்வேறு மய்யங்களில் கட்சி உறுப்பினர் கூட்டங்கள்
நடத்தப்பட்டன.
2018, மார்ச்
23 - 28 தேதிகளில் கட்சியின் பத்தாவது காங்கிரஸ் மான்சாவில் நடக்கவுள்ள நிலையில் காங்கிரஸ் நோக்கி நிறைவேற்ற வேண்டிய
உடனடி கடமைகள் பற்றி மத்திய
கமிட்டி கட்சி உறுப்பினர் ஒவ்வொருக்கும்
தந்துள்ள கடிதம் இந்தக் கூட்டங்களில்
படித்து விவாதிக்கப்பட்டது. ஜுலை 28க்கு
முன்னரே, இந்த கடிதத்தை கட்சி
உறுப்பினரிடம் கொண்டு சேர்க்கும் பணிகள்
துவங்கிவிட்டன.
‘இன்று,
வாழ்க்கையின் அனைத்து தளங்களிலும் நாம்
ஒரு நெருக்கடியான கட்டத்தைச் சந்திக்கிறோம். அரசாங்கத்தின் கொள்கைகள் நாட்டின் வளங்களை தொடர்ந்து சூறையாடுகின்றன;
மக்கள் நலன்களை புறந்தள்ளி, அவர்களது
வாழ்வாதாரத்துக்கும் சமூகப் பாதுகாப்புக்கும் மேலும்
மேலும் கூடுதல் அச்சுறுத்தலை முன்னிறுத்துகின்றன.
மோடி அரசாங்கத்தின், தற்போது பெரும்பாலும் பாஜக
ஆட்சியில் இருக்கிற மாநில அரசாங்கங்களின் கொள்கைரீதியான
தாக்குதலுடன், கொடிய மதவெறி துருவச்
சேர்க்கைக்கும் பார்ப்பனிய மேலாதிக்கத்துக்கும் சமூகத்தை கீழ்ப்படுத்தும், நாட்டை மூர்க்கமான கம்பெனி
ஆட்சிக்கு உட்படுத்தும் ஆர்எஸ்எஸ் - பாஜக நிகழ்ச்சிநிரலும் சேர்ந்து
வருகிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்திய ஜனநாயகம் ஓர்
ஆபத்தான பாசிச அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.
இந்திய
மக்களின் புரட்சிகர கம்யூனிஸ்ட் படைப்பிரிவின் உறுப்பினர்கள் என்ற விதத்தில், நமது
எல்லா பலத்துடனும் இந்த பாசிச தாக்குதலை
எதிர்ப்பது நமது கடமை. மக்களின்
எதிர்ப்புப் போராட்டங்களின் ஒவ்வொரு முனையிலும் நாம்
உறுதியாக முன்னிற்க வேண்டும்...... .......இந்த கட்டத்தில் நாம்
நமது முன்முயற்சிகளுக்கு, அமைப்புக்கு வலுவூட்ட முடியும் என்றால், கார்ப்பரேட் தாக்குதலை, மதவெறி பாசிச சதியை
முறியடித்து, நாடு முழுவதும் நமது
புரட்சிகர லட்சியத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்’என மத்திய கமிட்டி
கட்சி உறுப்பினர்களுக்குத் தந்துள்ள கடிதத்தில் சொல்லப்பட்டுள்ள கடமையை நிறைவேற்ற இந்தக்
கூட்டங்களில் தோழர்கள் உறுதியேற்றனர்.
பத்தாவது
காங்கிரஸ் நோக்கிய தயாரிப்புகளில் திருவள்ளூர்,
நாமக்கல் மாவட்டங்களிலும் ஜுலை 26 அன்று கந்தர்வக்கோட்டை
ஒன்றிய மட்டத்திலும் ஊழியர் கூட்டங்கள் நடத்தப்பட்
டன. ஜுலை 28 அன்று கரம்பக்குடியில்
பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. ஜுலை 29 அன்று தஞ்சை, ஜுலை 30 அன்று நாகை,
கடலூர் மாவட்ட ஊழியர் கூட்டங்களும்
நடத்தப்பட்டன. கட்சி மாநிலச் செயலாளர்
தோழர் எஸ்.குமாரசாமி இந்தக்
கூட்டங்களில் கலந்துகொண்டார்.