மாதவிடாய்
கால விடுப்பு: பெண்ணுடல் பற்றிய கூருணர்வில் ஒரு
மிகப்பெரிய முன்னேற்றம்
மும்பையைச்
சேர்ந்த கல்ச்சர் மிஷின் என்ற நிறுவனம்
தனது நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்கள்
மாத விடாய் நாட்களின் முதல்
நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக்
கொள்ள அனுமதித்து ஆணையிட்டது.
நாடு முழுவதும் பரபரப்பான விவாதத்தை எழுப்பிய இந்த நடவடிக்கையை தொடர்ந்து
கேரள மாநில அரசு பெண்
ஊழியர்களுக்கு அதுபோல் விடுப்பு வேண்டும்
என்று கேரள காங்கிரஸ்காரர்கள் கோரிக்கை
எழுப்ப கேரள முதலமைச்சர் பினரயி
விஜயனும் அது பற்றி ஆலோசிப்பதாகச்
சொல்லியுள்ளார்.
மும்பையைச்
சேர்ந்த வேறு இரண்டு நிறுவனங்களும்
தங்கள் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய்
காலத்தில் ஊதியத்துடன் கூடிய ஒரு நாள்
விடுப்பு அறிவித்துள்ளன.
சட்டப்படியான
ஊதியத்துடனான மகப்பேறு விடுமுறை கூட இன்னும் முழுமையாக
அமலாக்கப்படாத சூழலில் மாதவிடாய் காலத்துக்கு
விடுப்புடன் ஊதியம் என்ற அறிவிப்பு,
ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து
வந்துள்ளது பெண் தொழிலாளர்களின் தொடர்ச்சியான
கடுமையான அயற்சிக்கு நடுவே சற்று பெருமூச்சு
விட்டுக் கொள்ள வெளி தந்துள்ளது.
யாருக்கோ விடுப்பு என்ற அறிவிப்பே மற்ற
பெண்களுக்கு ஓரளவு ஆறுதல் தரும்
என்றால், அனைவருக்கும் அது அமலானால்...? நிலவுகிற
சட்டங்களில் இருக்கிற உரிமைகளையே மறுக்கும் தொழில் நிறுவனங்களிடம், விதவிதமான
காரணங்கள் சொல்லி மேலும் மேலும்
வேலைப் பளுவை அதிகரிக்கும் நிறுவனங்களிடம்
இப்படி கேட்க முடியுமா? நடக்குமா?நடக்கும்.வேறு ஒரு மட்டத்தில்
இது நடந்துள்ளது.
பெண்ணுரிமை
பற்றிய விவாதங்கள் ஆண்டாண்டு காலமாய் நடந்துகொண்டிருக்கும் போதும், மாதவிடாய்
காலம் மகிழ்ச்சியான காலம்போல் சித்தரிக்கும் விஸ்பர் விளம்பரத்துக்கும் மற்ற
நாப்கின் விளம்பரங்களுக்கும் பெண்கள் மத்தியில் எதிர்ப்பு
இருந்தாலும் அது ஓரளவுக்கு கூட
வெளிப்படுத்தப்படாதபோதும்,
மாதவிடாய் காலத்துக்கு விடுப்பு என்ற இந்த விவாதம்
இப்போது பொது வெளிக்கு வந்துள்ளது.
இது பொது வெளிக்கு வந்துள்ளபோதுதான்,
இன்னும் பெரிதாக பிரபலப்படுத்தப்படாத ஒரு
விசயமும் ஒரு சிறிய பிரிவினர்
மத்தியில் பேசப்படுகிறது.
அரசாணை
எண் 3 எஃப் 2 - 01/92/1977 தேதி 04.04.1992.இது பீகார் மாநில
அரசின் நிதித் துறை 1992ல்
வெளியிட்ட அரசாணை.இந்த அரசாணை
பீகார் மாநில அரசின் நிரந்தர
பெண் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டு
நாட்கள் சிறப்பு விடுப்பு எடுக்க
வழிவகுக்கிறது. அரசாணைப்படி இந்த விடுப்பு இரண்டு
தொடர்நாட்கள் தரப்படும். இது மற்ற விடுப்புகளுடன்
சேர்த்துக் கொள்ளப்படலாம். இப்படி மற்ற விடுப்புகளுடன்
சேர்த்து எடுப்பது 12 நாட்களுக்கு மிகக் கூடாது.
இந்த அரசாணையை பீகார் மாநிலம் வெளியிட்டபோது,
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு
தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு, அது நிறைவேறாமல்
இருப்பதில் முக்கிய பங்கை இன்று
வரை வகிக்கிற லாலு முதலமைச்சர்!லாலு
போன்ற ஓர் ஆணாதிக்கவாதி முதலமைச்சராக
இருந்த மாநிலத்தில் இது எப்படி வந்தது?
தொழிலாளர் போராட்ட வல்லமை! அதுதான்
இதை சாத்தியமாக்கியது. பீகார் மாநில ஊழியர்
நலன் காக்க, இகக மாலெயின்
ஏஅய்சிசிடியுவின் வழிகாட்டுதலில் பல்வேறு வெற்றிகரமான போராட்டங்கள்
நடத்திய பீகார் மாநில ஊழியர்
சங்கத்தின் போராட்டத்தின் விளைவாகவே லாலு முதலமைச்சராக இருந்த
போது இதற்கான அரசாணை வெளியிட
நேரிட்டது. இன்றும், பீகார் அரசு ஊழியர்களுக்கு
இருக்கும் இந்த சலுகை பீகாரின்
ஆஷா, அங்கன்வாடி, மதிய உணவு போன்ற
திட்டங்களில் வேலை செய்யும் நிரந்தரமற்ற
பெண் ஊழியர்களுக்கும் தரப்பட வேண்டும் என்று
கோரிக்கை எழுப்பி போராட்டங்கள் கட்டமைக்கப்படுகின்றன.
மாதவிடாய்
காலத்தில் பழைய துணியை பயன்படுத்த
வேண்டிய நிலையில்தான் இன்னும் கோடிக்கணக்கான இந்தியப்
பெண்கள் இருக்கிறார்கள். (அந்த நாப்கினுக்குக் கூட
ஜிஎஸ்டியை ஏற்றி அதிலும் துரோகம்
செய்துவிட்டார்கள் சங் பரிவார்காரர்கள்).இவர்களில்
பெரும்பாலான பெண்கள் கடுமையான உடல்
உழைப்பில் ஈடுபடுபவர்கள். விவசாய பெண் தொழிலாளர்கள்
முதல் ஏற்றுமதி நிறுவனங்களில் குனிந்து உட்கார்ந்துகொண்டு காலால் விசையை அழுத்திக்
கொண்டு, கடைகளில் நின்று கொண்டு, மின்னணு
உற்பத்தி நிறுவனங்களில் நின்றுகொண்டு, கழிப்பறைக்குச் சென்று ரகசியமாக கண்ணீர்விட்டு
அழுதுவிட்டு, மீண்டும் தொடர்ந்து வேலை செய்யும் பெண்கள்
அப்படியே வீட்டுக்கும்போய் வீட்டு வேலைகளையும் செய்கிறார்கள்.
பெண்களை
மாதவிடாய் காலத்தில் ஒதுக்கி வைக்கும் பழக்கம்
இன்றும் கூட, படித்தவர்கள் வீடுகளில்
நாகரிமடைந்துவிட்டதாகச் சொல்லிக் கொள்பவர்கள் வீடுகளில் கூட கடைபிடிக்கப்படுகிறது. அதுபோல் ஒதுக்கப்படுவதற்கு
நாம் முற்றிலும் எதிரானவர்கள். ஆனால், இப்போது முழுக்க
முழுக்க பெண்கள் உடல்நலன் மீதான
அக்கறையில் இருந்து தரப்படும் இந்த
விடுப்பு, எந்த ஊதியமும் இல்லாமல்
வீட்டில் இருக்கும் எல்லா வேலைகளையும் அன்றாடம்
செய்யும் பெண்களுக்கும் வேண்டும். வீட்டில் பெண்கள் செய்யும் வேலைகளுக்கு
ஊதியம் வேண்டும் என்ற விவாதம் சற்று
எழுந்து பிறகு மறைந்து போய்விட்டது.இந்த விவாதமாவது செயல்
வடிவம் பெற முயற்சிகள் வேண்டும்.
வளர்ப்பு
மாற வேண்டும், அவரவர் மனநிலை மாற
வேண்டும் என்று வெற்றுக் கதை
பேசுபவர்கள் சற்று பீகாரைப் பாருங்கள்.
போராட்டங்கள்தான் சாதிக்கும். இதுவரையிலும் கூட எல்லாம் அப்படித்தான்
நடந்துள்ளது. மகள்களைக் காப்போம் என்று சொல்லிவிட்டு குழந்தைகளை
படுகொலை செய்யும் பாஜகவைக் கூட இதைச் செய்ய
வைக்க முடியும். எதற்கெல்லாமோ அவசரச் சட்டம் இயற்றுபவர்களை,
பணமதிப்பகற்றுதல், ஜிஎஸ்டி என்று மக்கள்விரோத
நடவடிக்கைகளை தீர்க்கமாக அமல்படுத்துபவர்களை, ஊதியத்துக்கோ, ஊதியம் இல்லாமலோ வேலை
செய்யும் பெண்கள் அனைவருக்கும் மாதவிடாய்
கால விடுப்பு கட்டாயம் என்றும் அவசரச் சட்டம்
இயற்ற வைக்க முடியும்.