குண்டர்
சட்டம் ஏவுதலும் காவல்துறை கைதுகளும் அத்துமீறல்களும்
ஜனநாயகத்தின்
மீதான தாக்குதல்களே
தமிழக அரசாங்கம் பலவீனமானதால் கொடூரமான ஒடுக்குமுறை
தமிழ்நாட்டு
மக்களின் வெறுப்புக்கும் சீற்றத்துக்கும் ஆளாகி உள்ள பழனிச்சாமி
அரசாங்கம், பாரதிய ஜனதாவிடம் சரணடைந்து
அதன் தயவில் ஒவ்வொரு நாளையும்
ஓட்டிக் கொண்டிருக்கிற பழனிச்சாமி அரசாங்கம்,
கொஞ்சம் கூட தயங்காமல்,
‘போலீஸ் ராஜ்ஜியம்’ நடத்துகிறது. அன்று, மக்களுக்காகப் போராடிய
நக்சல்பாரி இயக்கத்தின் மீது, முன்னாள் உயர்நீதிமன்ற
நீதிபதி தார்குண்டே உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்கள்
மீது, வால்டர் தேவாரம் என்ற
கொடூரமான உயர்காவல் அதிகாரி மூலம் போலீஸ்
ராஜ்ஜியத்தை, எம்.ஜி.இராமச்சந்திரன்
ஆட்சி ஏவியது. எம்.ஜி.இராமச்சந்திரன் நூற்றாண்டைக் கொண்டாட, இன்று பழனிச்சாமி அரசாங்கமும்,
‘போலீஸ் ராஜ்ஜியத்தை’ ஏவுகிறது. பலவீனமான அரசாங்கம், கொடூரமான ஒடுக்குமுறையை ஏவுகிறது!
விவசாய
நெருக்கடி - எதிர்ப்பு
- ஒடுக்குமுறை
தமிழ்நாட்டில்
விவசாய நெருக்கடியை, முன்னேறி முரட்டுத்தனமாய்த் தாக்கும் மூலதனத்தின் முன்பு சரியும் விவசாயம்
என்ற நிலைமையை, கண்டு கொள்ளாமல் இன்று
எவரும் அவ்வளவு எளிதாக கடந்து
சென்றுவிட முடியாது. மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா என நாடெங்கும் 2 லட்சத்துக்கும்
மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது,
அதுபற்றி, அச்சு மின்னணு ஊடகங்கள்
எந்த அக்கறையும் காட்டவில்லை எனப் பிரபல பத்திரிகையாளர்
சாய்நாத் ஆதாரங்களுடன் ஆதங்கப்பட்டார். இன்று அஇஅதிமுக பாஜக
தவிர மற்ற எல்லா கட்சிகளும்
விவசாயத்திற்கு ஆபத்து எனப் பேச
வேண்டிய நிலை உள்ளது. எல்லா
பலவீனங்கள் பிரச்சனைகளும் தாண்டி ஏதேதோ கோணங்களில்,
சமூக ஊடகங்களில், விவசாய நெருக்கடி பற்றிய
உரையாடல் நடக்கிறது. ஓஎன்ஜிசி, மீத்தேன், பெட்ரோகெமிக்கல் காம்ப்ளக்ஸ், நெடுவாசல், கதிராமங்கலம், விவசாயிகளின் போராட்டங்கள் பற்றி ஒவ்வொரு நாளும்,
அச்சு மின்னணு ஊடகங்கள் ஏதாவது
செய்தி வெளியிட்டே ஆக வேண்டும் என்ற
நிலை உள்ளது. விவசாயத்துக்கு நேர்ந்துள்ள
ஆபத்து சமூகத்திற்கு நேர்ந்துள்ள பேராபத்து என அனைத்து பிரிவு
மக்களும் உணரத் தலைப்பட்டுள்ளனர். விவசாய
நெருக்கடியால் உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்து,
விவசாய நெருக்கடியால் வேலையின்மையும் சொற்ப கூலியே கிடைக்கும்
நிலைமைகளும் உருவாகி கூலி விகிதங்கள்
வெகுவாகக் குறையும், இதனால் மக்களின் வாங்கும்
சக்தி குறையும், இவை எல்லாம் சேர்த்து
சமூகத்தை நாசமாக்கும் என விவாதங்கள் நீள்கின்றன.
ஆக, பழனிச்சாமி பன்னீர்செல்வம் தினகரன், பொன்.ராதாகிருஷ்ணன் வகையறாக்கள்
தவிர, அனைத்துப் பிரிவினரும் விவசாயப் பிரச்சனையை எழுப்புகின்றனர். டாஸ்மாக் கடை மூடக் கோரி,
குடிக்கத் தண்ணீர் கோரி நடந்த
பெண்கள் போராட்டத்தை, கன்னத்தில் அறைந்தும் ஆபாசமாகப் பேசியும் எதிர்கொண்டது, பழனிச்சாமி அரசாங்கம்.
இப்போது,
விவசாய நெருக்கடியால், உழைக்கும் விவசாயிகளுக்கு விவசாய கிராமப் புற
தொழிலாளர்களுக்கு நேர்ந்துள்ள ஆபத் திற்கு எதிராக,
மாணவர் இளைஞர்கள் மக்கள் சமூகம் எதிர்த்தெழுமோ
என பழனிச்சாமி அரசாங்கம் அஞ்சுகிறது. உழைக்கும் விவசாயிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து தண்டிக்கப்பட்ட
பிரிக்கால் தொழிலாளி, அவர்களுக்கு ஆதரவாக கிராமப்புற நகர்ப்புற
தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள் சட்டமன்ற முற்றுகைக்குப் புறப்பட்டதை அடுத்து,
வரக்கூடிய ஆபத்து கண்டு பழனிச்சாமி
அரசாங்கம் அஞ்சுகிறது. அதனால் ஜனநாயகத்தின் குரல்வளையை
நெறிக்கிறது. தோல்வி பயத்தில் உள்ளாட்சித்
தேர்தல்களைத் திரும்பத் திரும்பத் தள்ளிவைத்து, ஜனநாயகத்தைத் தாக்குகிறது. ஆட்சியே கவிழும் என்ற
மரண பயத்தில், குண்டர் சட்டம் உள்ளிட்ட,
ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.
பிரபலமானவர்கள்
மீதே குண்டர் சட்டத்தை ஏவுகிறது.
பழைய வழக்குகளை தூசு தட்டி எடுத்து
கைது செய்து நிபந்தனை ஜாமீன்
என மிரட்டுகிறது. மே 17 இயக்கத்தின் திருமுருகன்
காந்தி தமிழகம் எங்கும் அறியப்பட்டவர்.
அவர் ‘தமிழ் ஈழம்’‘தமிழ் தேசியம்’ என்ற தமது அரசியல்
செயல்பாட்டால் பிரபலமானவர். திவ்யபாரதி, கக்கூஸ் ஆவணப்படம் மூலம்
தமிழகம் எங்கும் கவனத்தை ஈர்த்தவர்.
மனிதக் கழிவு அகற்றுதலில் மனிதரை
ஈடுபடுத்தக் கூடாது என்று குரல்
கொடுப்பவர். இப்படிப் பிரபலமானவர்களையே, அரசு குண்டர் சட்டம்
கொண்டு தாக்கும், கைது செய்யும் என்றால்,
சாமான்யர்களின் நிலை என்ன ஆகும்
என்ற அச்சத்தை உண்டாக்க, திட்டமிட்டு முயற்சிக்கிறார்கள்.
குண்டர்
சட்டம்
பொதுவாக
குண்டர் சட்டம் என்று அழைக்கப்படும்
சட்டத்தின் முழுப்பெயர், கள்ளச் சாராயப் பேர்வழிகள்,
சைபர் சட்டம் மீறும் குற்றம்
புரிவோர், போதைப் பொருள் குற்றம்
புரிவோர், வனக் குற்றங்கள் புரிவோர்,
மணல் குற்றம் புரிவோர், பாலியல்
தொழில் தொடர்பான குற்றம் புரிவோர், பாலியல்
குற்றம் புரிவோர், குடிசைப் பகுதிகளை அபகரிப்போர் மற்றும் வீடியோ கடத்தல்
கொள்ளையர்கள் போன்றோரின் ஆபத்தான நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான
தமிழ்நாடு சட்டம் 1982 என்பதே ஆகும்.
இதில் எந்த வகையில் தோழர்
வளர்மதி வருவார்? தோழர் வளர்மதி, சமூக
அக்கறை கொண்ட, சமூக மாற்றப்
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஓர் இடதுசாரி அரசியல்
போராளி. அவர் கார்ப்பரேட் வளர்ச்சிப்
பாதைக்கு எதிராகக் குரல் கொடுத்ததால், அவர்
மீது தயங்காமல் குண்டர் சட்டம் போட்டுள்ளனர்.
மாநில அரசாங்கத்தால் ஆபத்தானவர்கள் எனப் பட்டியிலிடப்பட்டுள்ளோர் வரிசையில், இடதுசாரி
தீவிரவாதிகள், தமிழ்தேசியவாதிகள் அடுத்தடுத்து மற்றோர் என வருவார்கள்
போல் உள்ளது. அதனால்தான் பெண்
மாணவர் ஒருவர் மீது, முன்னுதாரணம்
இல்லாத வகையில், ‘அம்மா சின்னம்மா ஆசி
பெற்ற’ அரசாங்கம், குண்டர் சட்டத்தை ஏவி
உள்ளது. தன் நற்பெயருக்குக் களங்கம்
ஏற்படுத்திவிட்ட மாணவர் என்று சொல்லி,
தோழர் வளர்மதியை தற்காலிக நீக்கம் செய்து பெரியார்
பல்கலைக் கழகம், தன் அரசாங்க
விசுவாசத்தைக் காட்டிக் கொண்டுள்ளது.
அரசியலமைப்புச்
சட்டத்தின் 21ஆவது ஷரத்து, சட்டத்தால்
நிலை நாட்டப்பட்ட நடைமுறை வழிகள் மூலம்
அல்லாமல், எந்த ஒருவரின் வாழ்வுரிமையையோ
அல்லது தனிநபர் சுதந்திரத்தையோ பறிக்க
முடியாது என்கிறது. உயிர்வாழும் உரிமையை தனிநபர் சுதந்திரத்தைப்
பறிக்க முடியாது; ஆனால் பறிக்க முடியும்!
சட்டத்தால் நிலைநாட்டப்பட்ட நடைமுறைகள் மூலம் பறிக்க முடியும்!
அரசியலமைப்புச் சட்டத்தின் 22 (3) (க்ஷ)
பிரிவு தடுப்புக்காவல் சட்டத்திற்கு இடமிருப்பதைச் சொல்கிறது. பிரிவு 22 (4) (5) (6) (7) தடுப்புக் காவலுக்கு விரிவுரையும் வியாக்கியானமும் தருகின்றன.
‘புரட்சித்
தலைவர்’ என்பதால் எம்.ஜி. ராமச்சந்திரன்,
1982ல் மாநில அளவில் தடுப்புக்
காவல் சட்டம் போட்டு, ‘புரட்சி’ செய்தார்.
1982 சட்டம், 1986, 1988,
2004, 2006, 2008 மற்றும்
2014ல் திருத்தப்பட்டுள்ளது. குண்டர் என்பவர் வாடிக்கையாகக்
குற்றம் புரியும் கும்பலில் உள்ளவர், அந்த குற்றக் கும்பலுக்கு
உதவுபவர் என்பதே பொதுவான புரிதலாகும்.
குண்டர்
சட்டத்தில் ஓராண்டு வரை தடுப்புக்
காவலில் வைக்க முடியும். இந்திய
தண்டனைச் சட்டப்படி, குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர்
மீது சாட்சியங்கள் மூலம் ஆதாரபூர்வமாக குற்றத்தை
நிரூபித்தால் மட்டுமே, அவரைத் தண்டிக்க முடியும்.
தடுப்புக் காவலுக்கு, சான்றுகள் அடிப்படையிலான நிரூபணம் தேவை இல்லை, தடுப்புக்
காவலில் வைக்கப்பட வேண்டியவரால் பொது அமைதிக்குப் பாதிப்பு
நேரிடக் கூடும் என, தடுப்புக்
காவலுக்கு உத்தரவிடுபவர் மனதில் பட்டால், அதுவே
போதுமானது. 2016ல் தமிழ்நாட்டில், 2,701 பேர் குண்டர்
சட்டத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இவர்களில்,
1,635 பேர் மாநகரங்களில் காவல் ஆணையாளர்கள் உத்தரவுப்படி
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். சென்னை,
கோவை, திருப்பூர், சேலம், மதுரை, திருச்சி,
திருநெல்வேலி மாநகரங்களில் தடுப்புக் காவல் உத்தரவை, காவல்
ஆணையா ளரே பிறப்பிக்கலாம். மற்ற
இடங்களில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
சொல்வ தன் அடிப்படையில் மாவட்ட
ஆட்சியர் உத்தரவு போடலாம். ஒரே
ஒரு குற்றம் செய்ததாக ஒருவர்
மீது புகார் இருந்தாலும், அதுவே,
அவரைத் தடுப்புக் காவலில் வைக்கப் போதுமானது
என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது,
இது அரசுக்கும் காவல்துறைக்கும் மிகவும் வசதியாகிவிட்டது.
திருமுருகன்
காந்தி, மோடிக்கு கருப்புக் கொடி காட்டினார், ஈழத்தில்
பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
நடத்தினார் போன்ற காரணங்களால், குண்டர்
சட்டத்தில் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறை
வைக்கப்பட்டுள்ளார். அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டதை
குண்டர் செயலாக்கி உள்ளனர். வளர்மதி, ஜெயந்தி என்ற பெண்
மாணவருடன், ஜ÷ன் 12 அன்று சேலம்
கோரிமேட்டில் உள்ள அரசு பெண்கள்
கலைக் கல்லூரி முன்பு கார்ப்பரேட்
ஆதரவு திட்டங்கள் விவசாயத்தை அழிப்பதற்கு எதிராக, துண்டுப் பிரசுரம்
கொடுத்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார். ஜெயந்தி
பின்னர் வெளியே வந்துவிட்டார். வளர்மதி
மீது 6 வழக்குகள், அதனால்தான் குண்டர் சட்டம் என்றார்,
எடப்பாடி பழனிச்சாமி. காவல்துறையோ, வளர்மதி மாவோயிஸ்ட் அனுதாபி,
அதனால்தான் குண்டர் சட்டம் என்றது.
மனித உரிமை ஆர்வலர் பாலமுருகன்,
வளர்மதி மீதான இரண்டு வழக்குகள்
மாணவர் போராட்டங்கள் தொடர்பானவை என்றும், மற்ற நான்கு வழக்குகளும்
மக்களுக்கு எதிரான வளர்ச்சித் திட்டங்களை
எதிர்த்ததற்காகப் போடப்பட்ட வழக்குகள் என்றும் சொல்கிறார். வளர்மதியால்,
திருமுருகன் காந்தியால், பொது ஒழுங்கிற்கு என்ன
அச்சுறுத்தல்? அரசியல் காரணங்களுக்காக, குண்டர்
சட்ட தடுப்பு காவல் உத்தரவு
போடப்பட்டுள்ளது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
ஜோடிக்கப்படும்
வழக்குகள்
இகக(மாலெ) நாமக்கல் மாவட்டச்
செயலாளரும் ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளருமான தோழர்
கோவிந்தராஜ் 02.08.2003 அன்று குண்டர் சட்டத்தில்
சிறை வைக்கப்பட்டார். 19.11.1998 அன்று குமாரபாளையம் பொது
மருத்துவமனையில் நடந்த போராட்டம் சம்பந்தமான
ஒரு வழக்கு ஆதாரமாகக் காட்டப்பட்
டது. அதுபோக, 01.05.2003 அன்று கட்சி கொடியை
பொது மக்களுக்கு பாதகமாக நட்டார், 01.05.2003 அன்று
விசைத்தறி உரிமையாளர் வாகனத்திற்கு தீ வைத்து அவரை
மிரட்டினார், 16.07.2003,
22.07.2003 தேதிகளில் வேறு வேறு விசைத்தறி
முதலாளிகளை அச்சுறுத்தினார், 23.07.2003 அன்று ஒரு விசைத்தறி
கூடத்தில் குண்டு வைத்தார், அதே
நாளில் கத்தியைக் காட்டி மிரட்டி தாக்கினார்
என்று கற்பனையாக வழக்குகள் ஜோடிக்கப்பட்டன. எழுந்து வந்த விசைத்தறி
தொழிலாளர் போராட்டங்களைஒடுக்க பொன்னையன் துணையுடன் வழக்கு ஜோடிக்கப்பட்டது என்றே
விசைத்தறி தொழிலாளர்கள் உறுதியாக நம்பினார்கள்.
இசுலாமியர்கள்,
மாலெ இயக்கத்தினர் மீது முற்றிலும் ஜோடனையான
வழக்குகளை போட்டு தடுப்பு காவலில்
வைப்பதும் தண்டிப்பதும் அரசுகளுக்கு வாடிக்கை. குஜராத்தின் அக்ஷர்தம் கோவில் வழக்கில், ஊடுருவிய
பாகிஸ்தானியரோடு சேர்ந்துகொண்டு, கோவில் மீது படையினர்
மீது தாக்குதல் தொடுத்ததாக, குஜராத் இசுலாமியர் மீதும்
வழக்கு போடப்பட்டது. துப்பாக்கிக் சண்டை நடந்து, பாகிஸ்தானிலிருந்து
ஊடுருவியவர்கள் அனைவரும் இறந்ததாகச் சொல்லப்பட்டது. செத்த பாகிஸ்தானியரிடம் இருந்து
வெளியே வந்த, எந்த கரையும்
படியாமல் சுத்தமாக இருந்த காகிதத்திலிருந்து, உள்ளூர்
இசுலாமியர் சதி செய்தது தெரிந்ததாக
காவல்துறை வழக்கு ஜோடித்தது. உச்சநீதிமன்ற
நீதிபதி கோபால கவுடா வழக்கின்
ஜோடனைத் தன்மையைக் காட்ட, பரவலாகக் கையாளப்படும்
மார்க் ட்வெய்ன் மேற்கோளின் முதல் பகுதியை, முதலில்
சென்னார். அரசு தரப்பு, ‘உண்மை
கட்டுக்கதையை விட வினோதமானது’ என வாதாடுகிறது என்றார்.
ஆனால், அரசு தரப்பு, மார்க்
ட்வெய்ன் மேற்கோளின் இறுதிப் பகுதியை விட்டுவிட்டது
எனச் சுட்டிக் காட்டினார். ‘கட்டுக்கதை நம்பத் தகுந்ததாக இருக்க
வேண்டும்’
என்றார். நம்ப முடியாத பல
கட்டுக்கதைகள் அடிப்படையில், எத்தனை எத்தனை பேர்
தண்டிக்கப்பட்டுள்ளனர்!
மாநிலம்
எங்கும் அத்துமீறும் காவல்துறை
காவல்துறையினர்
பொதுவாக போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கிறார்கள். போராட்ட
இடங்கள் ஆளில்லாத இடங்களாக இருக்குமாறு, போராட்ட நேரம் குறைவாக
இருக்குமாறு, பார்த்துக் கொள்கிறார்கள். கைது செய்யும்போதே, வெளியே
தெரியாத வகைக் காயங்களை ஏற்படுத்துகிறார்கள்.
பீரோ ஆஃப் போலீஸ் ரிசர்ச்
அண்ட் டெவலப்மென்ட் அறிக்கைப்படி தமிழ்நாட்டில், 2015ல் 20,450 போராட்டங்கள் நடந்தன. 2016ல் நாளொன்றுக்கு சராசரியாய்
47 போராட்டங்கள் என நாட்டின் 25% போராட்டங்கள்
தமிழ்நாட்டில் நடந்துள்ளன. தமிழ்நாடு போராட்டப் பட்டியலில் இரண்டாம் இடம் பெற்றது. 2017ல்
முதலிட வாய்ப்பு உண்டு. இதற்கு காவல்துறை,
கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் கடமையாற்றுகிறார்கள் என்று பொருள் ஆகுமா?
கட்டுக்கடங்காத ஊழல், கொள்ளை, ஆட்சியாளர்
நம்பிக்கைத் துரோகம், மக்களின் வாழ்வுரிமை பறிப்பு ஆகியவற்றிற்கு எதிரான
எதிர்ப்புணர்வு பரவி ம் தீவிரமடைந்தும்
வருவதால் போராட்டங் ள் வெடிக்கின்றன. ஒரு
பக்கம் ஜனநாயக முகமூடி அணிந்து
போராட்டங்களுக்கு அனுமதி தருவதாகக் காட்டிக்
கொள்ளும் அரசு, மறுபுறம் தேர்ந்தெடுத்து
தாக்குதல் நடத்துகிறது. கதிராமங்கலம் போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜெயராமன்
உள்ளிட் ர் மீது, பிணையில்
வெளியே வரமுடியாத வழக்குகள் போடுகிறது. கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு வழக்குகள் தொடர்பான மன உளைச்சலைத் தொடர்ந்து
தருகிறது.
இகக (மாலெ) மாநிலக் குழு
உறுப்பினரும் கடலூர் மாவட்டச் செயலாளரும்
புரட்சிகர இளைஞர் கழக பொதுச்
செயலாளருமான தோழர் தனவேல், சில
தினங்கள் முன்பு அவர் குடியிருந்த
பகுதியில், கோவில் திருவிழாவை ஒட்டி
மோதிக் கொண்ட இரண்டு குழுக்களை
விலக்கி விட்டார். அவரது சமூக அக்கறைமிக்க
நடவடிக்கையால், 20 - 30 பேர் கொடுங்காயம் அடைந்து
மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டிய சூழல், தவிர்க்கப்பட்டது.
திரண்டு பார்த்த மக்கள் அனைவருக்கும்,
என்ன நடந்தது என நன்கு
தெரியும். அங்கு வந்த விருத்தாச்சலம்
உதவி ஆய்வாளர்கள் இரண்டு பேர் (ஓர்
ஆண், ஒரு பெண்), ‘மாட்சிமை
மிகுந்த காவல்துறை அதிகாரிகள்’ அங்கு வந்த பிறகும்,
நகராமல் நின்றிருந்ததால், தோழர் தனவேலைத் தாக்கி
வண்டியில் ஏற்றினர். காவல்நிலையத்தில் விசாரிக்காமலே காவல் ஆய்வாளரும் தாக்கினார்.
மாநிலம் முழுவதும் எதிர்ப்பு வலுக்கிறது என்று தெரிந்த பிறகு,
அவரை விடுதலை செய்து வருத்தம்
தெரிவிக் ன்றனர். அப்போதும் பெண்
உதவி ஆய்வா ளர், அதிகார
மமதையுடன் வசைச் சொற்கள் பேசியதாகவும்,
தான் விரும்பும்படி போராட்டக்காரர்களைத் தாக்க தமக்கு உரிமை
இருப்பதாக மேல் அதிகாரியிடமே பேசியதாகவும்,
தெரிய வருகிறது. க்யூ பிராஞ்ச் போலீசார்,
காத்திருந்து பழிவாங்கியதாகத் தெரிகிறது. சமூகத்தில் பதட்டத்தைத் தணித்து, மோதலைத் தடுத்து, பொது
ஒழுங்கைக் காப்பாற்றியவரை, சட்டம் ஒழுங்கைக் காக்க
வேண்டிய காவல்துறை அத்துமீறித் தாக்கியுள்ளது. இதுபோல், எண்ணற்ற ஒடுக்குமுறைகள் நடக்கின்றன.
வேறுவேறு
தாக்குதல்களும் உண்டு
நீதிமன்றங்கள்,
எடப்பாடி பழனிச்சாமியைப் போலவே, போராட்டக்காரர்களை ஏளனமாகப்
பார்த்து கடும் நடவடிக்கை எடுக்க
உத்தரவிடுகின்றன. ஆசிரியர்கள் வேலை நிறுத் தம்
செய்தால் தண்டனை என சாட்டையைக்
சொடுக்குகின்றன. ஆலை நிர்வாகங்கள் சம்பளப்
பட்டுவாடா சட்டம் 9 (ண்ண்) பிரிவு மற்றும்
புரொவிசோ படி, ஒரு நாள்
வேலை நிறுத்தம் செய்தால் 8 நாட்கள் சம்பளப் பிடித்தம்
எனக் கொக்கரிக்கின்றன. ஊழலைப் பற்றி, பெரு
முதலாளிகள் - அரசுகள் தொடர்பு பற்றி
எழுதினால், பல கோடி நஷ்ட
ஈடு கேட்டு வழக்கு போடுவதோடு
கூடவே, குற்றவியல் சட்ட அவதூறு வழக்கு
போட்டு நீதிமன்றத்துக்கு இழுக்கின்றன. அதானி குழுமத்திற்கு மோடி
அரசு வாரித் தந்த ரூ.1,500
கோடி பற்றிய கட்டுரை எக்கனாமிக்
அண்ட் பொலிடிக்கல் வீக்லியில் வெளியிடப்பட்டது. அதானி குழுமம்
நஷ்ட ஈடு கேட்டு, குற்றவியல்
அவதூறு வழக்கும் தொடுக்க உள்ளதாக அச்சுறுத்தியது.
ஆசிரியர் பரன்ஜாய் குஹா தாகுர்தா ராஜினாமா
செய்தார். பல வழிகளில் ஜனநாயகத்திற்கு
அச்சுறுத்தல் நடக்கிறது.
ஜனநாயகத்துக்கு
விரோதமான சர்வதேச, தேசிய சூழல்
அய்க்கிய
அமெரிக்காவின் காவல்துறை மூர்க்கமாகவும் முரட்டுத்தனமாகவும் வெள்ளையினம் அல்லாதவர்களைத் தாக்குகிறது. படுகொலை செய்கிறது. சமீபத்தில்
மின்ன சோட்டா மாகாணத்தில் ஓர்
ஆஸ்திரேலியப் பெண்ணை காவல்துறை அதிகாரிகள்,
எந்த காரணமும் இல்லாமலே கொன்றுவிட்டனர். கை விலங்கிடப்பட்ட கைதியை
கொன்ற அதிகாரி
தண்டனை பெற்று நியுயார்க் சிறையில்
உள்ளார். காவல் அதிகாரிகள் மீது
ஏராளமான புகார்கள், வழக்குகள் உள்ளன. ஆனால் டிரம்ப்
சில நாட்கள் முன் சொன்னார்:
‘நீங்கள் கைது செய்யும்போது நல்லவிதமாக
நடப்பதெல்லாம் வீண் வேலை, கடுமையாக
நடந்து கொண்டாக வேண்டும். தாக்கு,
சுடு, கொலை செய். டிரம்ப்,
பச்சைக் கொடி காட்டுகிறார்.
ஜவஹர்லால்
நேரு பல்கலைக் கழக மாணவர்கள், ராணுவத்தை
தேசபக்தியுடன் மதிக்க, பல்கலைக் கழக
வளாகத்தில் ஒரு பீரங்கியை நிறுத்த
வேண்டும் என துணை வேந்தர்
சொல்ல, ராணுவ தளபதிகள் ஆமாம்
ஆமாம் அதுவே சரி என்கிறார்கள்.
இந்திய
உச்சநீதிமன்றம் கர்ணன் வழக்கில் நீதிப்படி
நடந்துள்ளதா என்ற கேள்வி வலுவாக
எழுந்துள்ளது. மே 9 அன்று உச்சநீதிமன்றத்தில்
7 நீதிபதிகள், நீதிபதி கர்ணனுக்கு 6 மாத
சிறைத் தண்டனை வழங்கினார்கள்; விரிவான
தீர்ப்பு பின்னர் வரும் என்றனர்.
மே 27 அன்று தண்டனை வழங்கிய
ஒரு நீதிபதியான பினாகி சந்திர கோஸ்
ஓய்வு பெற்றார். திறந்த நீதி மன்றத்தில்
தீர்ப்பு வழங்கும் நடைமுறைக்கு மாறாக, மே 9 கையொப்பமிடப்பட்டதாக,
காரணங்களடங்கிய தீர்ப்பு ஜ÷லை 5 அன்று உச்சநீதிமன்ற
வலை தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. நீதிபதிகள் செல்லமேஸ்வர் மற்றும் ரஞ்சன் கோகாய்
எழுதிய, உடன்பட்ட அதே நேரம் தனித்
தீர்ப்பு, ஜ÷லை 4 அன்று பதிவேற்றம்
செய்யப்பட்டது.விடுமுறைக்கு முன் தண்டனை. விடுமுறை
முடிந்த பிறகு, ஒரு நீதிபதி
ஓய்வு பெற்ற பிறகு, காரணங்களுடைய
தீர்ப்பு! இந்த நடைமுறையை, உச்ச
நீதிமன்றம் கீழமை நீதிமன்றங்களுக்கு அனுமதிக்குமா?
நீதி செய்யப்பட்டது போன்ற தோற்றம் காணாமல்
போய்விட்டதே!
கர்ணனின்
மன நிலையைப் பரிசோதிக்கச் சொன்ன நீதிபதிகள், அவர்
மன நிலையில் சோதனை தேவை என
முடிவுக்கு வந்த பிறகு, ஏன்
மன நிலை சோதனை நடத்தாமலேயே
தண்டனை வழங்கினார்கள்? ஏன் ஊடகங்களுக்கு தடை
போட்டார்கள்? நீதிபதி செல்லமேஸ்வர், நீதிபதிகள்
நியமன முறை பரிசீலிக்கப்பட வேண்டும்
என்று சொன்ன அதே நேரம்,
நீதித்துறைக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தும் பல நீதிபதிகளின் நடத்தை
நல்ல வேளையாக பொதுமக்களுக்குத் தெரியவில்லை
என்று வேறு சொல்லி உள்ளார்.
அவர்கள் யார், அவர்களுக்கு என்ன
தண்டனை என கர்ணனோ மற்றவர்களோ
கேட்டால், என்ன பதில் சொல்ல
முடியும்? அடிப்படை உரிமைகளைக் காக்க வேண்டிய, முழுமையான
நீதி வழங்க வேண்டிய உச்சநீதிமன்றமே,
கர்ணன் வழக்கை அவசரமாக முடித்து,
என் கிட்ட மோதாதே, யாரையும்
எப்படியும் தண்டிப்பேன் எனச் செய்தி சொல்வதாக,
மக்கள் கவலைப்பட நேருமானால், ஜனநாயகத்தின் கதி என்ன?
அம்பேத்கர்,
இந்திய நாடாளுமன்ற ஜனநாயக நிறுவனங்கள், ஜனநாயக
அலங்கார மேல் பூச்சு மட்டுமே
கொண்டவை, அடிமண் ஜனநாயக விரோதமானது
என்றார். இகக (மாலெ) கட்சித்
திட்டம் (02 - 06 ஏப்ரல் 2013 ராஞ்சி ஒன்பதாவது காங்கிரஸ்)
அரசு பற்றிச் சொல்கிறது: ‘நாட்டின்
பல பகுதிகளில் ஓர் அறிவிக்கப்படாத அவசர
நிலை உள்ளது. கலகத்தை அல்லது
பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில், ஜனநாயகக்
குரல்கள் வாடிக்கையாக நசுக்கப்படுகின்றன’. ‘இந்திய
சட்ட, நீதிபரிபாலன மற்றும் நிர்வாகத்துறை மேல்கட்டுமானம்,
ஆயுதப்படைகள் ஆகியவையும் காலனிய கலாச் சாரமும்,
குடியுரிமை பற்றிய நவீன ஜனநாயகக்
கருத்தாக்கத்தின் மீது இப்போதும், தொடர்ந்து
நிழலாய் பரவிப் படர்ந்துள்ளன’. ‘கொடூரமான சட்டங்கள், சட்டம் நீதி ஆகியவற்றுக்கு
அப் பாற்பட்ட ஒடுக்குமுறை, காவல் சித்திரவதை, பாலியல்
வன்முறை மற்றும் படுகொலைகள்; ‘போலி
மோதல்கள்’,
விசாரணையின்றி காவல், சிறுபான்மையினர் பழங்குடியினர்
அரசியல் மாற்றுக் கருத்துடையோர் மீது பழி சுமத்தும்
வேட்டை, வெகுமக்கள் எதிர்ப்பின் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனம்,
‘கலவரப் பகுதி கள்’ என்று அழைக்கப்படுகிற பகுதிகளில்,
தண்டனை பற்றிய அச்சம் முற்றிலும்
இன்றி, ஒடுக்குமுறையில் இறங்கும் ‘சிறப்பு அதிகாரங்கள்’ கொண்ட ஆயுதப்படைகளின் ராணுவத்
தலையீடு என, காலனிய ஆட்சிக்குப்
பிந்தைய இந்தியாவில், ‘சட்டத்தின் ஆட்சி’ எப்போதும் மனித உரிமைகளை மீறுவதாகவே
உள்ளது’.
சாதிகள்
ஒழிய வேண்டும், வர்க்கங்கள் இல்லாத சமூகம் வேண்டும்
என்று சொல்லும் இந்த இரு தரப்பினருமே,
இந்திய ஜனநாயகத்தின் வேர் மிகமிகப் பலவீனமானது
என அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றனர். மோடி ஆட்சியை துதிபாடும்
பழனிச்சாமி ஆட்சியில், ஜனநாயகம் மீதான தாக்குதல்கள் தீவிரம்
அடைந்துள்ளன. அவை எந்த அரங்கத்தையும்
விட்டுவைக்கவில்லை.
குண்டர்
சட்டம்: யார் உள்ளே இருக்க வேண்டும்?
யார் வெளியே இருக்க வேண்டும்?
தமிழ்நாட்டில்
கடந்த ஆறு ஏழு மாதங்களில்
சாதி ஆதிக்க வன்மத்துடன் 28 தலித்துகள்
கொல்லப்பட்டுள்ளனர். தலித் மக்களுக்கு எதிராக
சமூக ஊடகங்களில், பொது மேடைகளில் நஞ்சை
உமிழும் எவரும், இதுவரை குண்டர் சட்டத்தில் கைது
செய்யப்படவில்லை. திருவண்ணாமலை மாவட்டம் புளியரம்பாக்கத்தில் தலித் மக்கள் சொத்துக்களை
சூறையாடிய வெங்கடேசன் என்ற தலித் இளைஞரை
படுகொலை செய்த தலித் மக்கள்
மீது கொலை வெறி தாக்குதல்
நடத்திய சாதியாதிக்க சக்திகள் மீது குண்டர் சட்டம்
பாயுமா?
சொத்து
குவிப்பு குற்றம் செய்த, தமிழகத்தில்
கொள்ளைக் கும்பலை வழி நடத்திய
‘ஜெயலலிதா, சசிகலா’ குண்டர் சட்டத்தில் உள்ளே
இருந்திருக்க வேண்டும் என மக்கள் கேட்க
முடியாதா? ‘வனம்’‘மணல்’‘சாராயம்’‘போதைப் பொருள்’‘குடிசைப் பகுதி அபகரிப்பு’ போன்ற இதர குற்றங்களில்
ஈடுபட்டு, கொள்ளையடித்ததைக் காப்பாற்றிக் கொள்ள கொள்ளையைத் தொடர
எது செய்யவும் தயாராக உள்ள ஆளும்
கூட்டத்தின் கணிசமானவர்கள், குண்டர் சட்டத்தில் உள்ளே
இருக்க வேண்டியவர்கள் அல்லவா?
அவர்கள்
வெளியே இருப்பதால்தான், அவர்கள் வெளியே இருப்பதற்காகத்தான்
வளர்மதி, திருமுருகன் காந்தி போன்றவர்கள் குண்டர்
சட்டத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். திவ்யபாரதி
சில மணி நேரமும் குபேந்திரன்
சில நாட்களும் கைதில் இருந்தனர். பேராசிரியர்
ஜெயராமன் உள்ளிட்டோர் பல நாட்கள் சிறையில்
உள்ளனர். தனவேல் மூர்க்கமாகத் தாக்கப்படுகிறார்.
ஆகவேதான்,
விவசாயம்
காக்க, ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்.
மக்கள்
போராளிகள் மீதான அனைத்து வழக்குகளும்
திரும்பப் பெறப்பட வேண்டும். அரசு,
அவர்களிடம் மன்னிப்பு கேட்டு நஷ்ட ஈடு
தர வேண்டும்.
பழனிச்சாமி
அரசாங்கம் தாமதமின்றிப் பதவி விலக வேண்டும்.
மோடி அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட
வேண்டும்.
இந்தியாவை,
தமிழ்நாட்டை அனைத்தும் தழுவிய முறையில் ஜனநாயகப்படுத்துவோம்.