தமிழ்நாட்டின்
அனைத்தும் தழுவிய
பொது விநியோகத்துக்கு முடிவு கட்டும்
அரசாணை
89 ரத்து செய்யப்பட வேண்டும்!
தமிழ்நாட்டின்
பற்றியெரியும் போராட்டங்களை நடத்தும் மக்களுடன் சமாதானம் பேச பொன்.ராதாகிருஷ்ணன்
மட்டும் போதாது என்று நிர்மலா
சீதாராமனும் தமிழ்நாட்டுக்கு வந்து செல்கிறார். ஜிஎஸ்டி
குழப்பங்களுக்கு பதில் சொல்ல வேண்டும்
என்றால் நிர்மலா சீதாராமன் வருகிறார்
.
காவி மற்றும் கார்ப்பரேட் ஆதரவு
வாதங்களை தமிழில் விளக்குகிறார். இதுவும்
ஒரு வகையில் நல்லது. காவி
கார்ப்பரேட் மோசடி கருத்துக்களை அவர்கள்
வாயில் இருந்தே நேரடியாக கேட்டுவிட
முடிகிறது. தமிழ் பேசினாலும் இந்தி
பேசினாலும் காவி காவிதான். கார்ப்பரேட்
ஆதரவு கார்ப்பரேட் ஆதரவுதான்.
பல்வேறு
மாநிலங்களிலும் பல ஆண்டுகளாக சீர்கெட்டுப்
போயிருக்கும் பொது விநியோகத் திட்டத்தை
முறைப்படுத்துவதாகச் சொல்லி, அனைவரையும் உள்ளடக்குவதாகச்
சொல்லி, குறிவைத்த பொது விநியோகம், உங்கள்
பணம் உங்கள் கையில் என்று
பெரும்பான்மை வறியவர்களை வெளியேற்ற அய்முகூ அரசாங்கம் துவக்கி
வைத்த நடவடிக்கைகளை மோடி அரசு துரிதமாகச்
செய்து விட்டது. அனைத்தும் தழுவிய பொது விநியோகம்தான்
சிறந்த முறை என்று எடுத்துச்
சொல்வதற்கு உதாரணமாக இருந்த தமிழ்நாட்டின் பொது
விநியோகத் திட்டத்துக்கு தமிழக ஆட்சியாளர்கள் தங்கள்
முறைகேடுகள் மூலம் குழி தோண்டிக்
கொண்டிருந்தார்கள் என்றால், மோடி அரசாங்கம் அனைத்தும்
தழுவிய பொது விநியோகத்தை அந்தக்
குழியில் தள்ளி புதைத்துவிட முனைகிறது.
மோடி அரசின் பல்வேறு மக்கள்
விரோத நடவடிக்கைகள் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்படுவதைப் போல், அவர்
முதலமைச்சராக இருந்தபோது ஏற்றுக் கொள்ளப்படாத உணவுப்
பாதுகாப்புத் திட்டம் பாஜகவின் தொடர்
அழுத்தத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. இப்போது இந்தத் திட்டத்தை
அமலாக்கும் அரசாணையும் வெளியிடப்பட்டுவிட்டது.
தமிழ்நாட்டின்
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர்
பாதுகாப்பு துறை, தமிழ்நாடு உணவுப்
பாதுகாப்பு விதிகள் 2017ன் இறுதி பதிப்பை
உருவாக்குவது என்ற தலைப்பில் ஜ÷லை 5,
2017 தேதியிட்டு வெளியிட்டுள்ள அரசாணை எண் 89, உணவுப்
பாதுகாப்பு திட்டத்துக்கான விதிகளை முன் வைக்கிறது.
2008ல் தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக
நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்பு தலுக்காக
8 ஆண்டுகள் காத்திருந்து 2016ல் ஒப்புதல் பெற்று
பிறகு அரசாணையாக வெளியிடப்பட்டு இன்னும் விதிகள் உருவாக்கப்படாமல்
காத்திருக்கிறது நிலையாணைகள் திருத்தச் சட்டம். இந்தச் சட்டத்துக்கு
விதிகள் போடப்பட்டால் தமிழ்நாட்டின் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் சட்டரீதியாக குறைந்தபட்ச பாதுகாப்பு பெறுவார்கள். மூன்று மாத காலத்தில்
விதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் சொன்ன
பிறகும் இதற்கு இன்னும் விதிகள்
வெளியிடாத தமிழக அரசு, பொது
விநியோகத்தை ஒழித்துக்கட்ட கொண்டு வரப்பட்ட ஒரு
சட்டத்துக்கு அவசர அவசரமாக விதிகள்
உருவாக்கிவிட்டது.
குடும்ப
வருமானம் ஆண்டில் ரூ.1 லட்சத்துக்குக்
கூடுதலாக இருந்தால் அந்தக் குடும்பம் பொது
விநியோகத் திட்டத்திலிருந்து விலக்கி விடப்படும் என்று
சொல்கிற அந்த விதிகள் தமிழ்நாட்டில்
எதிர்ப்பையும் விவாதத்தையும் உருவாக்கின. ஜிஎஸ்டியால் சாமான்ய மக்கள் பயன் பெறுவார்கள் என்று
தமிழ்நாட்டுக்கு வந்து தமிழக மக்களுக்கு
விளக்கிவிட்டுப் போன நிர்மலா சீதாராமன்
இந்த விதியாலும் தமிழக மக்களுக்கு பாதிப்பில்லை
என்றும், பாதிப்பு இருக்குமானால் அதற்கு மோடி அரசு
பொறுப்பில்லை என்றும் பொருள்பட எழுதியுள்ள
கட்டுரை தி இந்து ஆங்கில
நாளிதழில் ஆகஸ்ட் 21 அன்று வெளியாகியுள்ளது.
நிர்மலா
சீதாராமனின் வாதங்கள் சரியா?
அரசாணை
89 அமலாகாது என்று நிர்மலா சீதாராமன்
சொல்லவில்லை. தமிழ்நாட்டில் உணவுப் பாதுகாப்புச் சட்டம்
ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகும் அனைத்தும் தழுவிய
பொது விநியோகத்தில் எந்த மாற்றமும் வந்துவிடவில்லை
என்று சொல்கிறார். இதை மத்திய காவி
அமைச்சர் சொல்ல வேண்டிய அவசியம்
இல்லை. பொது விநியோகத்தில் கைவைத்தால்
அடி எப்படி விழும் என்பது
தமிழக ஆட்சியாளர்களுக்குத் தெரியும். ஜெயலலிதா அனுபவித்து உணர்ந்து கொண்டவர். நவம்பர் 2016ல் இருந்து தமிழ்நாட்டில்
உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும் பழைய முறையில் மாற்றம்
இல்லாமல் இன்று வரை தமிழக
ஆட்சியாளர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். தமிழக மக்களுக்கு இன்றைய
ஆட்சியாளர்கள் மீது இருக்கிற சீற்றத்தை
அவ்வப்போது சற்று தணிப்பதில், தமிழ்நாட்டின்
பொது விநியோகத் திட்டம் நிச்சயம் பங்கு
வகிக்கிறது. தமிழக அரசியல் சூழலை
பயன்படுத்தி தமிழ்நாட்டில் மக்கள் விரோத காவி
கார்ப்பரேட் கொள்கைகளை திணிக்கிற மத்திய அரசு தமிழ்நாட்டு
மக்களுக்கு துரோகம் இழைக்கிறது என்ற
குரலுக்குத்தான் நிர்மலா சீதாராமன் பதில்
சொல்ல வேண்டும்.
அவரும்
பதில் சொல்ல முயற்சி செய்கிறார்.
மத்திய அரசு தமிழ்நாட்டு பொது
விநியோகத்துக்கென ஆண்டுக்கு ரூ.10,120 கோடி மானியம் தருகிறது
என்றும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்
கீழான உணவுப் பொருட்கள் விலை
முன்பு இருந்ததை விட குறைவு என்பதால்
மாநில அரசின் நிதிச் சுமை
குறைகிறது என்றும் இதனால் மாநில
அரசு ஆண்டுக்கு ரூ.436.44 கோடி சேமிக்க முடியும்
என்றும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள்
அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தரும் தகவல்கள்படி, தமிழ்நாடுதான்
நாட்டில் மிகக் கூடுதலாக உணவுப்
பொருள் பெறும் மாநிலம் என்றும்
சொல்கிறார்.
மத்திய
அமைச்சர்கள், பிரதமர், அதிகாரிகள் எல்லாம் ஒரே விசயத்தில்
வெவ்வேறு புள்ளிவிவரங்கள் தருவதை மோடி அரசில்
அடிக்கடி பார்க்க முடிகிறது. அவர்கள்
தருகிற விவரங்களையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. செய்யலாம்.
ஒரு வாதத்துக்கு அவர்கள் சொல்லும் புள்ளிவிவரங்கள்
சரி என்று கொண்டாலும், இதனால்
எல்லாம் என்ன? மோடி வீட்டு
பணமா, அமித் ஷா வீட்டு
பணமா, நிர்மலா சீதாராமன் சம்பாதித்ததா
அல்லது பாஸ்வான் அவர் சொத்தில் இருந்து
கொண்டு வந்தாரா? அது மக்கள் பணம்.
மக்களுக்குச் சேர்கிறது. இதில் ஆட்சியாளர்கள் சாதனை
எதுவும் இல்லை. இதைச் செய்யத்தான்
அவர்களுக்கு பதவி, பாதுகாப்பு, ஊதியம்,
சலுகைகள் எல்லாம். இந்திய உணவு கழக
கிட்டங்கிகளில் எலி தின்னத் தராமல்,
மழையில் நனைந்து அழுகிப் போய்
நாறாமல், பசித்திருக்கும் மக்கள் நுகரத் தருவது
அவ்வளவு பெரிய சாதனையா? நிர்மலா
சீதாராமன் சொல்வது போல், தமிழ்நாடு
கூடுதல் அரிசி ஒதுக்கீடு பெறும்
மாநிலமாக இருக்கட்டும். இந்த அரிசி தமிழ்நாட்டுக்கு
விலையின்றி தரப்படவில்லை. நீண்ட காலம் இருப்பு
வைக்கப்படுவதாலும் மழை, வெள்ளம் போன்ற
பிற காரணங்களாலும் 2016 - 2017ல் மத்திய அரசு
தரும் விவரங்கள்படி 8,572 மெட்ரிக் டன் (85 லட்சத்து 72 ஆயிரம்
கிலோ கிராம்) தானியங்கள் வீணாகியுள்ளன.
ஏப்ரல் 2016ல் இருந்து நவம்பர்
2016 வரை விநியோகம் செய்ய முடியாத உணவு
தானியங்கள் என வகைப்படுத்தப்பட்டு 8,228 மெட்ரிக் டன்
(82 லட்சத்து 28 ஆயிரம் கிலோ கிராம்)
உணவு தானியங்கள் ‘டிஸ்போஸ்’ செய்யப்பட்டன. உணவுப் பொருளை வீணடிக்காமல்
பாதுகாக்க திட்டமில்லாதவர்கள், ஒரு மாநிலத்துக்கு கூடுதலாக
தரப்படுகிறது என்று வெற்று பெருமை
பேசுவதையாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அரசாணை
எண் 124 என்ன சொல்கிறது?
2016 நவம்பர்
1 முதல் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை
தமிழ்நாட்டில் அமலாக்க தமிழக அரசு
2016ல் வெளியிட்ட அரசாணை எண் 124ல்
பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது: பரம ஏழை, வறுமைக்
கோட்டுக்குக் கீழ், வறுமைக் கோட்டுக்கு
மேல் உள்ளவர்களுக்கு தருவது போக, கூடுதல்
தேவைக்கு ஜ÷ன் 2016 வரை மாதம்
27,969 மெட்ரிக் டன் அரிசி வறுமைக்
கோட்டுக்குக் கீழ் தரப்படும் அரிசி
விலையில் (கிலோ ரூ.5.65க்கு)
மத்திய அரசு தந்தது. இந்த
கூடுதல் ஒதுக்கீடு ஜ÷லையில் இருந்து இல்லை.
இப்போது 38.93 லட்சம் மெட்ரிக் டன்
அரிசி வாங்க மத்திய அரசுக்கு
ரூ.2,393.30 கோடி செலுத்துகிறோம். உணவுப்
பாதுகாப்பு திட்டத்தை அமலாக்கவில்லை என்றால் கூடுதலாக ரூ.2,730.95
கோடி செலவாகும். இப்போது அமல்படுத்தினாலும் தமிழ்நாட்டில்
ஏற்கனவே இருக்கிற முறையை தொடர ஆண்டுக்கு
கூடுதலாக ரூ.1,193 கோடி செலவாகும். 15.15 லட்சம்
மெட்ரிக் டன் அரிசியை கிலோ
ரூ.8.30க்கு மத்திய அரசிடம்
இருந்து வாங்கினோம். இனி அதற்கு கிலோ
ரூ.22.54 தர வேண்டும்.
அதாவது,
நிர்மலா சீதாராமன் சொல்வதுபோல் மத்திய அரசிடம் இருந்து
அரிசி வாங்கும் விலையும் குறையவில்லை, தமிழக அரசுக்கு மிச்சமும்
எதுவும் இல்லை. தமிழ்நாட்டு மக்கள்
தலையில் கூடுதல் சுமையை ஏற்றிவிட்டு,
அவர்களுக்கு இருக்கிற அற்பசொற்ப உணவுப் பாதுகாப்புக்கும் முடிவு
கட்டும் நடவடிக்கைகள்தான் நடந்துகொண்டிருக்கின்றன.
உலக வர்த்தக நிறுவன ஒப்பந்தங்களால்
பாதிப்பு ஏற்படாதா?
அரசாணை
89 வெளியிடப்பட்டதை ஒட்டி எழுந்த விவாதங்களில்
இந்திய அரசாங்கம் விவசாயிகளின் நலன்களை உலக வர்த்தக
நிறுவனத்திடம் அடகு வைத்துவிட்டது என்பதும்
ஒன்று என்பதால் அதற்கும் பதில் சொல்ல நிர்மலா
சீதாராமன் முயற்சி செய்கிறார். இந்தக்
குற்றச்சாட்டு பொய் என்று துவங்குகிறார்.
பிப்ரவரி 2017ல் இருந்து அமலாகி
இருக்கிற வர்த்தக ஊக்குவிப்பு ஒப்பந்தத்தால்
வர்த்தகச் செலவுகள் குறையும், ஏற்றுமதி, இறக்குமதிக்கு ஆகும் நேரம் குறையும்
என்றும், இந்த ஒப்பந்தம் வர்த்தக
வெளிப்படைத்தன்மை தொடர்பானது, சந்தையை திறந்துவிடுவது தொடர்பானது
அல்ல என்றும் சொல்கிறார்.
உணவுப்
பொருள் இருப்புக்கு 2013லேயே ஒப்புக்கொள்ளப்பட்ட, 2015ல் வலியுறுத்தப்பட்ட,
இன்னும் முடிவுக்கு வராத உச்சவரம்பு அளவுதான்
பிரச்சனை என்றும், அந்த உச்சவரம்பை மீறினால்
இருப்பு, கொள்முதல் தொடர்பாக வழக்குகள் தொடுக்கப்படலாம் என்றும், தானிய உற்பத்தியில் 10%க்கு
மேல் கொள்முதல் செய்யக் கூடாது என்பது
அந்த உச்சவரம்பு என்றும் சொல்கிறார். (உற்பத்தி
அளவை கணக்கிட 1986ஆம் ஆண்டு உற்பத்தி
அளவை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்).
கொள்முதலுக்கு
தரப்படும் குறைந்தபட்ச ஆதார விலை, உலக
வர்த்தக நிறுவன ஒப்பந்தங்கள் அடிப்படையில்
நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக
இருந்தால், அது விவசாயிகளுக்கு
ஆதரவு தந்து வர்த்தகம் சீர்குலைக்கப்படுகிறது
என உலக வர்த்தக நிறுவன
மொழியில் விவரிக்கப்படுகிறது.
நிரந்தரத்
தீர்வு காணப்படும் வரை இந்த வரம்பு
மீறப்பட்டாலும் அது தொடர்பாக பிரச்சனை
இருக்கக் கூடாது என்று நவம்பர்
2014ல் சமரசப் பிரிவு ஒன்றை
பெற்றோம், மோடியே நேரடியாக இதற்கான
பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார், உணவுப் பாதுகாப்பு திட்டத்தில்
வழங்கப்படும் உணவுப் பொருட்களுக்கு வரம்பு
விதிக்க வேண்டிய எந்த உறுதியும்
உலக வர்த்தக நிறுவன ஒப்பந்தங்களில்
நாம் தரவில்லை என்கிறார் நிர்மலா சீதாராமன்.
சரி. இதனால், நீங்கள் நாட்டுக்கு
நல்லது செய்துவிட்டீர்கள் என்று நாங்கள் கொண்டாட
வேண்டுமா? அல்லது நம்பத்தான் வேண்டுமா?
உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் ஒருவருக்கு மாதத்துக்கு 5 கிலோ அரிசி அல்லது
கோதுமை என வரம்பு ஏன்
விதித்தீர்கள்? இந்த 5 கிலோ 5 நாட்களுக்கு
வரலாம். மீதி 25 நாட்களுக்கு பட்டினிதான்
கிடக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் உணவுப்
பறிப்புதான் இருக்கிறது. உணவுப் பாதுகாப்பு இல்லை.
ஸ்மார்ட் அட்டை, ஆதார் இணைப்பு
என்று ஏற்கனவே பல குளறுபடிகள்
நடந்துகொண்டிருக்கின்றன.
உலக வர்த்தக நிறுவனத்தில் போடப்பட்டுள்ள
ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்ட பின், அதில் தற்காலிக
சலுகை பெற்றோம், விலக்கு பெற்றோம் என்று
சொல்வது ஏமாற்று. வளர்ந்த நாடுகளின் வர்த்தகம்
தடையில்லாமல் இருக்க உலக வர்த்தக
நிறுவனத்தில் என்ன செய்ய வேண்டுமோ
அதைச் செய்தாகிவிட்டது. அதற்கேற்ப நாட்டுக்குள்ளும் நடவடிக்கைகள் எடுத்தாகிவிட்டது. நாட்டு மக்கள் உண்ணும்
உணவு அளவையே குறைத்துவிட்டால், அதற்கேற்ப
கொள்முதல் செய்தால் போதும்; அந்த அளவு
மட்டும் குறைந்தபட்ச ஆதார விலை தந்தால்
போதும்; கொள்முதலும் குறைந்துவிட்டால் குறைந்தபட்ச ஆதார விலை ஓரளவு
உயர்ந்தாலும் விவசாயிக்கு பயனில்லை. விளைபொருள் வீணாகாமல் இருக்க தனியார் கொள்முதலை
தேர்ந்தெடுக்க வேண்டும். விவசாயிகள் சந்தையின் ஏற்றஇறக்கங்களுக்கு ஆளாக்கப்படுவார்கள். விவசாயிகள், சாமான்ய மக்கள் இரண்டு
பிரிவினரையும் ஒரே நேரத்தில் வஞ்சிக்கும்
நடவடிக்கைக்கு நல்லெண்ண முலாம் பூச நிர்மலா
சீதாராமன் முயற்சி செய்கிறார். பொது
விநியோகத்தில் உணவுப் பொருட்களுக்கு பதில்
நேரடி பணம் தரும் திட்டம்
சோதனை அடிப்படையில் சண்டிகர், புதுச்சேரி, தாத்ராநாகர் ஹவேலி ஆகிய யூனியன்
பிரதேசங்களில் அமல்படுத்தப்பட்டது. 60%க்கும் குறைவான பணம்தான்
உரியவர்களுக்குச் சென்று சேர்கிறது என்றும்
இதைப் பெறவும் பயனாளிகள் பயணம்
போன்றவற்றில் ஒரு தொகையை செலவு
செய்கிறார்கள் என்றும் நிதி ஆயோக்குக்கு
சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுகள் சொல்கின்றன. இது பற்றி நிர்மலா
சீதாராமன் பேசுவாரா?
அரசாணை
89 வெளியான பிறகு தமிழ்நாட்டில் எழுந்துள்ள
விவாதங்களின் மிகவும் அடிப்படையான விசயத்தை
நிர்மலா சீதாராமன் வசதியாக மறந்துவிடுகிறார். அல்லது
மறைக்கப் பார்க்கிறார். ஆண்டு வருமானம் ரூ.1
லட்சத்துக்கு மேல் வாங்கும் குடும்பம்
பொது விநியோகத்தில் இருந்து வெளியேற்றப்படும் என்று
அரசாணை சொல்கிறது. அனைத் தும் தழுவிய
பொது விநியோகம் இருப்பதால்தான் ரூ.1 லட்சம் ஆண்டு
வருமானம் பெறும் குடும்பங்கள் வண்டியை
ஓட்டுகின்றன. 1 லட் சத்து 1 ரூபாய்
ஆண்டு வருமானம் இருப்பவர் விலக்கி வைக்கப்பட்டால் அது
அவரது குடும் பத்துக்கு ஆயுள்
தண்டனை தரப்படுவதைப் போன்றது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2
லட்சம் இருந்தாலும் பொது விநியோக ஆதாரம்
இல்லையென்றால், குடும்பம் நடத்துவது சிரமம். இந்த அளவு
ஆண்டு ஊதியம் பெறும் குடும்பங்களுக்கு
வீட்டு வாடகை, மின் கட்டணம்,
குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளை
நிறைவேற்றும் முன்னரே இந்தத் தொகை
பறந்து போய்விடும். உணவுப் பாதுகாப்புத் திட்டம்
அமலாக்கப்படுவதால் தமிழ்நாட்டுக்கு என்ன மிச்சம், என்ன
ஒதுக்கீடு என்ற விவரங்கள் தரும்
நிர்மலா சீதாராமன், ரூ.1 லட்சம் ஆண்டு
வருமானம் பெறும் குடும்பத்துக்கு உயிர்
வாழ இன்றைய நிலைமைகளில் என்ன
செலவாகும் என்ற விவரங்களை துணிச்சலாக
முன்வைப்பாரா?
திட்டத்தில்
இருந்து வெளியேற்ற அரசாணையில் சொல்லப்படும் வேறு சில நிபந்தனைகளும்
நடைமுறையில் பெரும்பான்மையான வறிய குடும்பங்களை பொது
விநியோகத் திட்டத்தில் இருந்து வெளியேற்றிவிடும். மூன்று
அறைகள் கொண்ட வீடுகள் கொண்ட
குடும்பம் வெளியேற்றப்படும் என்று அரசாணை சொல்கிறது.
200 சதுர அடியில் கூட மூன்று
அறைகள் கொண்ட தின்காரை, மேற்கூரை,
சுவர்கள் கொண்ட வீடுகள் உள்ளன.
அது போன்ற வீடுகளில் 4 பேருக்கும்
மேல் கூட வசிக்கின்றனர். பொது
விநியோகத்தில் இருந்து பெரும்பான்மையானவர்களை வெளியேற்றுவதுதான் இந்த
அரசாணையின் நோக்கமாக இருக்கிறது. நிர்மலா சீதாராமன் இதற்கு
பதில் வைத்திருக்கிறாரா?
அரசாணை
89அய் வெளியிட்டுள்ள தமிழக ஆட்சியாளர்களும் அரசாணையில்
சொல்லப்பட்டுள்ளதுபோல் பொது விநியோகத்தில் இருந்து
யாரையும் விலக்கி வைக்கும் நடவடிக்கை
எதுவும் எடுக்கப்போவதில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். திட்டத்தில் இருந்து
வெளியேற்றப்படும் குடும்பங்களை அடையாளம் காண வேண்டும். அதற்குப்
பின் அவற்றை வெளியேற்ற வேண்டும்.
இதற்கு நேரம் பிடிக்கலாம். பாஜக
ஆணைப்படி தமிழ்நாட்டில் நீட் தேர்வை எப்படியோ
அமலாக்கிவிட்ட பழனிச்சாமி அரசு, இந்த விசயத்திலும்
மோடிக்கு விசுவாசத்தைக் காட்ட முனையக் கூடும்.
இந்த அரசாணையில் பறிபோக இருப்பது உணவுப்
பாதுகாப்பு. இந்த அரசாணை மூலம்
ஏற்கனவே பறிக்கப்பட்டிருப்பது மாநில உரிமை. பறிபோக
இருக்கும் உணவுப் பாதுகாப்பை தக்க
வைத்துக் கொள்ள வேண்டும். பறிபோய்விட்ட
மாநில உரிமையை மீட்டெடுக்க வேண்டும்.
கருணாநிதி கடைசியாக முதலமைச்சராக இருந்தபோது, தமது ஆட்சியில், ஆதரவற்றோர், ரேசன் கடையில் விலையில்லா அரிசி வாங்கி உண்டு விட்டு, முதியோர் அல்லது வேறு வகை உதவித் தொகை வாங்கிக் கொண்டு விலையில்லா தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு நிம்மதியாக காலம் தள்ளலாம் என்றார். அது மட்டும் போதுமா, அவர் கட்சித் தலைவர்கள் அப்படித்தான் காலம் கழிக்கின்றனரா என நமக்கு கேள்வி எழுகிறது. சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் தமிழ்நாட்டில் யார் கருணையிலும் வரவில்லை. அவை மக்கள் போராட்ட வலிமை யால் வந்தவை. அவற்றைச் சிதைத்துவிட பாஜகவும் அஇஅதிமுகவும் எடுக்கிற திட்டமிட்ட முயற்சிகளை முறியடிக்க வேண்டியுள்ளது. இந்த திட்டமிட்ட முயற்சிகள் அரசாணை 89ல் வெளிப்படுகின்றன. தமிழக மக்களின் உணவு உரிமையை, பொது விநியோக உரிமையை பாதுகாக்க வேண்டியுள்ளது. அரசாணை 89அய் ஏட்டோடு நிறுத்த வேண்டியுள்ளது. அது ரத்து செய்யப்பட வேண்டும் என்று உடனடியாக குரல் எழுப்ப வேண்டியுள்ளது.