அரசு நடு நிலைப் பள்ளியை
மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரிய
காலவரையற்ற
பட்டினிப் போராட்டம் வெற்றி
அம்பத்தூர்,
காமராஜபுரம் பகுதியில் மக்களை ஒடுக்கும் காவல்
அலுவலகமா? மக்கள் எதிர்கால நலனுக்கான
பள்ளிக் கூடமா? என்ற மக்கள்
போராட்டத்தின் முழக்கத்துக்கு மக்கள் எதிர்கால நலனுக்கான
பள்ளிக் கூடமே என்ற விடை
கிடைத்துள்ளது.
அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு
அருகில் அரசு நிலம் உள்ளது.
அந்தப் பள்ளியை தரம் உயர்த்தி
உயர்நிலைப் பள்ளியாக கட்டித்தர வேண்டும் என பகுதி மக்கள்
நீண்ட நாட்களாக கோரிக்கை எழுப்புகின்றனர். பல்வேறு போராட்டங்களும் நடத்தியுள்ளனர்.
அங்கு காவல் ஆணையர் அலுவலகம்
கட்ட அரசு நிர்வாகம் முயற்சி
செய்வதை தகவல் அறியும் சட்டம்
மூலம் பகுதி மக்கள் அறிந்துகொண்டனர்.
மீண்டும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.
முன்பு ஒரு காலத்தில் அங்கு
காவலர் குடியிருப்பு இருந்ததாகவும் எனவே அங்கு காவல்
ஆணையர் அலுவலகம்தான் கட்டப்படும் என்றும் அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
பகுதியின்
அம்பேத்கர் பொதுநல மன்ற பதாகையில்,
இகக மாலெ மாநிலக் குழு
உறுப்பின ரும் புரட்சிகர இளைஞர்
கழக தேசியச் செயலாளருமான தோழர்
பாரதி தலைமையில் அம்பேத்கர் பொது நல மன்றத்தைச்
சேர்ந்த தோழர்கள் டி.உமாபதி, எ.ஆர்.ராமன், டி.ராஜ் மோகன், என்.எலிசா (எ) கணேஷ்
ஆகியோர் அரசு நடுநிலைப் பள்ளியை
உயர்நிலைப் பள்ளியாக கட்டித் தர வேண்டும்
என்ற கோரிக்கையுடன மே 19 முதல் காலவரையற்ற
பட்டினிப் போராட்டம் நடத்தினர். நான்கு நாட்கள் வரை
நீடித்த அந்தப் போராட்டத்தை, கோரிக்கையை
பரிசீலிப்பதாக அதிகாரிகள் உறுதியளித்த பின்னர் திரும்பப் பெற்றனர்.
இப்போது
அந்த நடுநிலைப் மேம்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 18.07.2017 தேதியிட்ட அரசாணை எண் 174ன்படி
சமீபத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளபடி 150 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரமுயர்த்தும் பள்ளிக் கல்வித் துறையின்
நடவடிக்கையில் அந்த 150 பள்ளிகளில் காமராஜபுரம்
வார்டு 85ல் உள்ள அம்பத்தூர்
மாநகராட்சி நடுநிலைப் பள்ளியும் அடக்கம்.
காமராஜபுரம்
பகுதி மக்கள் தங்கள் போராட்டத்தின்
வெற்றியை கொண்டாட ஜுலை 30 அன்று அம்பத்தூரில்
பொதுக் கூட்டம் நடத்தினர். போராட்டத்தில்
புரட்சிகர இளைஞர் கழக தேசியச்
செயலாளர் தோழர் பாரதி சிறப்புரையாற்றினார்.