சோவியத்
யூனியனில்
திரிபுவாதம்
தலைதூக்கியது
முதலாளித்துவத்தில்
இருந்து கம்யூனிசத்துக்கு மாறிச் செல்லும் கால
கட்டம் ஒரு வரலாற்று சகாப்தத்தை
பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
இந்த சகாப்தம் நிறைவுறும் வரை, சுரண்டுபவர்கள், தவிர்க்க
முடியாமல், மீள்வதற்கான நம்பிக்கையை போற்றி வளர்ப்பார்கள்; இந்த
நம்பிக்கை மீள்வதற்கான முயற்சிகளாக மாறும்.
லெனின்
சொன்னது சோவியத் யூனியனிலேயே நடந்தது.
ஸ்டாலினும் இந்த ஆபத்தை காணத்
தவறினார். சோவியத் யூனியனில் வர்க்கப்
பகைமையோ, முரண்படும் வர்க்கங்களோ இல்லை என்றார்.
ஸ்டாலின்
மறைவுக்குப் பிறகு, மாலென்கோவ் கட்சியின் பொதுச்
செயலாளராகவும் ஆட்சித் தலைவராகவும், அதற்குப்
பிறகு பல்கனின் பிரதமராகவும் இருந்த குறுகிய காலத்துக்குப்
பிறகு சோவியத் யூனியன் பார்த்த
குருஷ்சேவ் ஆட்சி காலம், 1964ல்
அவர் பதவியில் இருந்து வெளியேற்றப்படும் வரை,
உள்நாட்டிலும் வெளியுறவுகளிலும் வழிவிலகல்களின் காலமாக இருந்தது. தனக்கு
கட்சியிலும் அரசிலும் போட்டியாளர்களாக இருந்த ஸ்டாலின் ஆதரவாளர்களை
எதிர்கொள்ள அவர் புகுத்திய மாற்றங்கள்
எதிர்விளைவுகளையே உருவாக்கின.
பயன்படுத்தப்படாத
நிலத்தில் பெரிய அளவில் விவசாயம்
செய்ய முயற்சி செய்தது, மய்ய
தொழில் அமைச்சகங்களுக்குப் பதில் பிராந்திய கவுன்சில்கள்
அமைத்தது போன்றவை விளைவு தரவில்லை.
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 21ஆவது காங்கி ரசில்
குருஷ்சேவ் முன்வைத்த ஏழாண்டு திட்டம் முழுமையாக
நிறைவேற்றப்படாமல் அதன் அய்ந்தாவது ஆண்டிலேயே
கைவிடப்பட்டது. கட்சி கமிட்டிகளில் தொழில்
துறைக்கு, விவசாயத்துக்கு தனித்தனி கமிட்டி என பிரிக்கப்பட்டது,
பல குழப்பங்களை உருவாக்கியது. பொருளாதய ஊக்கம் தருவது என்ற
பெயரில் வருமான ஏற்றத்தாழ்வு உருவானது.
பனிப்போர்
நிலவிய நேரத்தில் சர்வதேச உறவுகளில் குருஷ்சேவ்
மேற்கொண்ட மாற்றங்கள் சர்வதேச கம்யூனிச இயக்கத்தில்
கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாயின. 1955ல் ஜெனிவாவில் அய்சன்ஹோவரை
சந்தித்த குருஷ்சேவ், முதலாளித்துவத்துடனான சமாதான சகவாழ்வு என்ற
கருத்தை முன்னகர்த்தினார். அய்க்கிய அமெரிக்காவுக்குச் சென்ற முதல் சோவியத்
ஆட்சித் தலைவர் குருஷ்சேவ்தான்.
ஸ்டாலின்
பற்றிய கடுமையான விமர்சனங்களை குருஷ்சேவ் முன்வைத்த 1956 சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின்
20ஆவது காங்கிரசில் முதலாளித்துவத்துடனான சமாதான சகவாழ்வு என்ற
கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. 22ஆவது காங்கிரசில் சோவியத்
யூனியனில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இனியும்
அவசியமில்லை என்று குருஷ்சேவ் முன்வைத்தார்.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் இடத்தில்
ஒட்டுமொத்த மக்களின் அரசு, பாட்டாளி வர்க்க
கட்சியின் இடத்தில் ஒட்டுமொத்த மக்களின் கட்சி என்ற அவரது
பிரகடனங்கள் மார்க்சிய - லெனினிய அடிப்படைகளை மறுதலிப்பவையாக,
அதனால், சோவியத் யூனியனில் தலையெடுத்துவிட்ட
முதலாளித்துவ போக்குகள் வலுப்பெற வழிவகுப்பவையாக இருந்தன.
சோசலிச
சீனத்தை கட்டியெழுப்பும் மகத்தான பணியில் ஈடுபட்டிருந்த
மாவோவின் வார்த்தைகளில் சொல்வதென்றால், சோவியத் யூனியனில் முதலாளித்துவ
மீட்புக்கான போக்குகள் குருஷ்சேவின் தலைமையிலான கட்சியிலும் ஆட்சியிலும் தெளிவாக தெரிந்தன. குருஷ்சேவின்
திரிபுவாதத்துக்கு எதிராக கடுமையான போர்
தொடுத்த மாவோ சொல்கிறார்:
‘சோவியத்
கட்சியின், ஆட்சியின் தலைமையை குருஷ்சேவ் கைப்பற்றியதில்
இருந்து, திரிபுவாதக் கொள்கைகளின் ஓர் ஒட்டுமொத்த தொடர்வரிசையை
அவர் முன்னகர்த்தினார்; இந்தக் கொள்கைகள் சோவியத்
யூனியனில் முதலாளித்துவ சக்திகளின் வளர்ச்சியை பெரிதும் துரிதப்படுத்தின; பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் இடையிலான வர்க்கப் போராட்டத்தை, சோசலிசம் நோக்கிய பாதைக்கும் முதலாளித்துவம்
நோக்கிய பாதைக்கும் இடையிலான போராட்டத்தை, மீண்டும் கூர்மைப்படுத்தின’.
‘தனிநபர்
வழிபாட்டை எதிர்கொள்வது என்ற பெயரால், பாட்டாளி
வர்க்க சர்வாதிகாரத்தை, சோசலிச கட்டமைப்பை இழிவு
படுத்திய குருஷ்சேவ், அதன் மூலம் சோவியத்
யூனியனில் முதலா ளித்துவ மீட்புக்கு
வழிவகுத்தார். ஸ்டாலினை முழுவதுமாக மறுதலித்ததன் மூலம் ஸ்டாலின் உயர்த்திப்
பிடித்த மார்க்சிய - லெனினியத்தை மறுதலித்து திரிபுவாத வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதற்கான
கதவுகளை திறந்துவிட்டு விட்டார்’.
‘1952 பத்தொன்பதாவது
காங்கிரசில் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய கமிட்டி உறுப்பினர்களில்
எழுபது சதம் பேர் 1956ல்
நடந்த இருபதாவது காங்கிரசில் இல்லை. இருபதா வது
காங்கிரசில் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய கமிட்டி உறுப்பினர்களில்
அய்ம்பது சதம் பேர் 1961ல்
நடந்த 22ஆவது காங்கிரஸ் நடக்கும்
போது இல்லை’.
‘சமாதான
சகவாழ்வு என்ற பெயரில் குருஷ்சேவ்
அய்க்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூடிக்குலாவுகிறார்; சோசலிச முகாமை, சர்வதேச
கம்யூனிச இயக்கத்தை சேதத்துக்குள்ளாக்குகிறார்; ஒடுக்கப்பட்ட மக்களின், தேசங்களின் புரட்சிகர போராட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறார்; வல்லரசு
ஆதிக்கத்தை, தேசிய தன்வெறிவாதத்தை பின்பற்றுகிறார்;
பாட்டாளி வர்க்க சர்வதேசியத்துக்கு துரோகம்
இழைக்கிறார்’.
‘சோவியத்
மக்களுக்கு எதிரான தங்களது கொடூரமான
வர்க்கப் போராட்டம் பற்றிய உண்மைகளை மறைக்க,
குருஷ்சேவ் கூட்டம், சோவியத் யூனியனில் முரண்பட்ட
வர்க்கங்களோ, வர்க்கப் போராட்டமோ இல்லை என்ற கதையை
பரப்பிக் கொண்டிருக்கிறது’.
‘குருஷ்சேவின்
திரிபுவாதத்தின் விளைவாக, மகத்தான சோவியத் மக்கள்
தங்கள் ரத்தத்தாலும் வியர்வையாலும் கட்டியெழுப்பிய, உலகின் முதல் சோசலிச
நாடு, முதலாளித்துவ மீட்பு ஆபத்தை சந்திக்கிறது’.
ராணுவ தலையீடுகளில், அணுஆயுதப் போட்டியில், ஆயுத உற்பத்தியில் சோவியத்
யூனியன் ஒருபுறம் பனிப்போரில் பதில் வினையாற்றிக் கொண்டிருந்தபோது,
மறுபுறம் மாவோவின் தலைமையில் குருஷ்சேவின் திரிபுவாதத்துக்கு எதிராக மாபெரும் விவாதம்
துவங்கியது.
இரண்டாம்
உலகப் போருக்குப் பின்
சோவியத்
யூனியனின் ராணுவ தலையீடுகள்
பனிப்போர்
காலத்து சோவியத் யூனியன் ஆயுதப்
போட்டியிலும் அணுஆயுத உற்பத்தியிலும் கவனம்
செலுத்தியது.
இரண்டாம்
உலகப் போருக்குப் பின் சோசலிச ஆட்சிகள்
அமைக்கப்பட்ட கிழக்கு அய்ரோப்பிய நாடுகள்
சிலவற்றில், பனிப்போர் காலத்தில் கிளர்ச்சிகள் வெடித்தன. இந்தக் கிளர்ச்சிகள் சோவியத்
யூனியனின் ராணுவ தலையீடுகளால் கட்டுக்குள்
கொண்டு வரப்பட்டன.
1956ல் ஹங்கேரியில் இருந்த
சோவியத் ஆதரவு அரசுக்கு எதிராக
உருவான ஆயுதப் போராட்டத்தை சோவியத்
யூனியன் தனது ராணுவ தலையீட்டின்
மூலம் கட்டுப்படுத்தியது. அதன் பிறகு, ஹங்கேரியில்
இருந்த சோவியத் யூனியன் படைகள்
1991ல்தான் முழுவதுமாக வெளியேறின.
1968ல்
செக்கோஸ்லேவகியாவிலும் உள்நாட்டு கலகங்களை கட்டுப்படுத்துவது என்ற பெயரில் சோவியத்
ராணுவம் நுழைந்தது. உள்நாட்டு கிளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டு சோவியத் ஆதரவு ஆட்சி
உருவாக்கப்பட்டது. இங்கும் 1989 வரை சோவியத் யூனியன்
படைகள் நிறுத்தப்பட்டிருந்தன.
1978ல்
ஆப்கானிஸ்தானில் இருந்த சோவியத் ஆதரவு
அரசாங்கத்துக்கு எதிராக உள்நாட்டு போர்
வெடித்தது.போரை கட்டுப்படுத்த ஆப்கானிஸ்தான்
அரசாங்கம் சோவியத் யூனியன் உதவியை
நாடியது. ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனின் ராணுவ
தலையீடு 1979 முதல் 1989 வரை நீடித்தது. சோவியத்
யூனியனின் தலையீடு துவங்கும் முன்பே,
சோவியத் ஆதரவு ஆட்சிக்கு எதிராக
கலகத்தில் ஈடுபட்டிருந்த முஜாஹிதீன்களுக்கு அய்க்கிய அமெரிக்காவில் இருந்து ஆயுதங்களும் பிற
உதவிகளும் வழங்கப்படுவது துவங்கிவிட்டது.