COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, August 16, 2017

நினைத்தாலே கொதிக்கும்

எஸ்கே

2005 அய்தராபாத் வெடிகுண்டு வழக்கில் 10 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஆகஸ்டு 10, 2017 அன்று விடுவிக்கப்பட்டனர். பயங்கரவாத வழக்குகள் நம் நாட்டில் பலரைக் கடுமையாக பாதிக்கின்றன. பயங்கரவாத வழக்கில் தவறாக சிக்க வைக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படாமல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையாகி வெளியே வந்த பல குற்ற வழக்குகளில், இதுவும் ஒன்று. தவறே இழைக்காமல் ஒரு மதத்தையோ அல்லது ஒரு சாதியையோ சார்ந்தவர் என்ற ஒரே காரணத்தினால் மட்டும், சிறை வைக்கப்பட்ட அவலம், இங்கு பல முறை நிகழ்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 11, 2017 அன்று வந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை இது போன்ற சில தகவல்களை பகிர்ந்துள்ளது.
பாப்ரி மசூதி இடிப்புக்குப் பின் 1 வருடம் கழித்து, இரயில் குண்டு வெடிப்பு வழக்கில் மருந்தாளுனர் படிப்பு 2ஆம் ஆண்டு பயின்று கொண்டு இருந்த நிசாருதீன் அகமது என்ற மாணவர் குற்றம் சாட்டப்பட்டு 1994ஆம் ஆண்டு சிறை பிடிக்கப்பட்டார். இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.ஆனால் 2016ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் இவரை விடுதலை செய்தது. இவர் குற்றம் எதுவும் செய்யாமல் 23 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.
நிசாருதீன், ‘என் வாழ்வின் 8,150 நாட்கள் சிறையில் கழித்து விட்டேன்.என் வாழ்க்கை முடிந்துவிட்டது. நீங்கள் காண்பது ஓர் உயிருள்ள பிணத்தை மட்டுமே. என்னை சிறையில் வைக்கும் பொழுது என் வயது 20. என் வாழ்வில் ஒரு தலைமுறை அளவிற்கு விடுபட்டுப் போனதுஎன்றார்.
ஜாகீருதீன் அகமது என்பவர் வழக்கும் 23 ஆண்டு குற்றமற்ற சிறைவாசத்தை நமக்கு உணர்த்துகிறது. இவர் நிசாருதினின் அண்ணன்.ஜாகீருதீன் அகமது, நிசாருதின் அகமதுடன் அதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். இவர் 1994ல் சிறை வைக்கப்படும்போது பொறியாளராக பணி புரிந்தவர். பின்னாளில் மே 9, 2008ல் உடல் நலக்குறைவு காரணமாகவும், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாலும், உச்சநீதிமன்றத்தில் அவருக்கு பிணை தரப்பட்டது. பின்னர் 2016ல் ஜாகீருதீன் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார்.
2001ல் 28 வயதான குல்சார் அகமது பானி என்பவர் சபர்மதி எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வழக்கில் சிறைப்பிடிக்கப்பட்டவர். போதுமான ஆதாரங்கள் இல்லாததால் 2017ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். தன் வாழ்வில் 16 ஆண்டுகள் சிறையில் கழித்துள் ளார். குல்சார் அகமது பானியின் தந்தை கூறுகையில், ‘குல்சார் அகமது பானி தவறுதலாக காவல்துறையினரால் பிடிக்கப்பட்டுள்ளான். நிச்சயமாக சில மாதங்களிலோ அல்லது ஒரு வருடத்திற்குள்ளேயே விடுதலையாகி வந்து விடுவான் என்று இருந்தோம். ஆனால் வருடங்கள் 10 ஆனது. அதன் பின்னும் கூடுதலாக 6 வருடங்கள் ஆகிப் போனது. தான் செய்யாத குற்றத்திற்காக அவன் தன் வாழ்நாளை, தன் வாழ்க்கையை சிறையில் தொலைத்தான்என்றார். குல்சார் அகமது பானியின் தந்தையின் வார்த்தைகள் நமக்கு வருத்தமும் கோபமும் ஒருசேர வரவழைப்பதாய் இருக்கின்றன.
டெல்லி, ரோடக், சோனிபட் மற்றும் காசியாபாத்தில் 1996 டிசம்பர் முதல் 1997 அக்டோபர் வரையிலான, குறைந்த தீவிரம் கொண்ட 20 முறை நிகழ்ந்த குண்டு வெடிப்பில், முக்கிய குற்றவாளியாக 1998ஆம்  ஆண்டு கைது செய்யப்பட்டவர் மொகமத் அமீர் கான். அவர் சிறை பிடிக்கப்பட்டபோது 20 வயது இளைஞர். இவரது 34ஆவது வயதில் அதாவது 2012ல் 14 ஆண்டுகளுக்குப் பிறகு, குற்றம் நிரூபிக்கப்படாததால் இவரை டில்லி உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. அதன் பின்பயங்கரவாதி என ஜோடித்தனர்; நிரபராதி எனக் காட்ட எனது 14 ஆண்டு போராட்டம்என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
2005ஆம் ஆண்டு குற்றவாளிகள் என சிறைப்பிடிக்கப்பட்ட இர்ஷாத் அலி மற்றும் மவுரிஃப் குவாமர் எனும் இரண்டு பேர் 12 ஆண்டுகள் கழித்து டெல்லி செஷன்ஸ் நீதிமன்றத்தால் 2017ம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.
2006ஆம் ஆண்டு மலேகான் குண்டு வெடிப்பில் சிறைப்பிடிக்கப்பட்ட 9 பேர், 10 வருடங்கள் கழித்து குற்றமற்றவர்கள் என்று 2016ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.
11.07.2006 அன்று நிகழ்ந்த மும்பை இரயில் குண்டு வெடிப்பில் அப்துல் வாஹித் ஷேக் என்பவர் 12 பேரில் ஒருவராய் குற்றம் சாட்டப்பட்டு 9 வருட சிறைவாசத்தின் பின், 2015ஆம் ஆண்டு குற்றவாளி இல்லை என விடுதலை செய்யப்பட்டார். இவர் சிறையில் இருந்தபோதுதண்டனை பெற்ற நிரபராதிஎன்னும் நூலை எழுதியுள்ளார்.
2005 டெல்லி தொடர் குண்டு வெடிப்பில் ÷சைன் பாசில் மற்றும் ரஃபீக் ஷா என்னும் இரண்டு பேர் 2005ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இதில் ÷சைன் பாசில் வயது 31. சால்வை நெசவாளர். ரஃபீக் ஷா 22 வயது. இசுலாமிய கல்வி பயில்பவர். இருவரும் 2017ம் ஆண்டு அதாவது 12 ஆண்டுகள் கழித்து விடுவிக்கப்பட்டனர்.
2002ஆம் ஆண்டு நிகழ்ந்த அக்ஷர்தாம் கோவில் குண்டு வெடிப்பில் ஆதம்பாய் அஜ்மேரி, அப்துல் குவாயும் மஃப்தி ôப் மற்றும் சந்த் கான் என்னும் மூன்று பேர் 2003ல் குற்றம் சாட்டப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு கீழ் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதே வழக்கில் இவர்களுடன் முகமது சலீம் ஹனீஃப் ஷேக், அப்துல்லாமியா யாசின்மியா மற்றும் அல்தாப் மாவெட் ஆகிய மூவருக்கும் 5 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை தீர்ப்பளிக்கப்பட்டது.
ஆனால் இந்த 6 பேர் மீது போடப்பட்ட வழக்கு ஜோடிக்கப்பட்டது என்று கூறி 11 ஆண்டுகள் கழித்து உச்சநீதிமன்றம் அவர்களை 2014ல் விடுதலை செய்தது.
2007ல் உத்தரபிரதேசத்தில் இசுலாமிய போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்று 5 பேர் குற்றம் சாட்டப்பட்டு, 9 வருட சிறைவா சத்தின் பின் 2016ல் விடுவிக்கப்பட்டனர்.
2010ல், ஹைதராபாத்தில் மெக்கா மஜித் குண்டு வெடிப்பில் காவலாளியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக ரியாஸ் கான் மற்றும் அப்துல் சயீத் சிறைபிடிக்கப்பட்டு 2017ல் விடுவிக்கப்பட்டனர்.
2005ல் டெல்லியில் டேராடூன் இந்தியன் மிலிடரி அகாடமியில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக ஹருன் ரஷீத், மொகமது இஃப்திகர், மசூத் அகமது, திலாவர் கான் என்னும் நான்கு பேர் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, 5 வருடங்கள் கழித்து 2010ல் விடுவிக்கப்பட்டனர்.
முகமது இப்ராஹிம் மற்றும் ôப் சோப்தார் ஆகியோர் இந்தியன் இன்ஸ்டிடியுட் ஆப் சயின்ஸ் மீது நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் சிறைபிடிக்கப்பட்டனர். பிறகு 5 வருடங்கள் கழித்து குற்றமற்றவர்கள் என்று 2011ல் விடுவிக்கப்பட்டனர்.
2008ஆம் ஆண்டு 17 பேர் சிமி உறுப்பினர் கள் என்றும், நம் நாட்டுக்கு எதிராக போர்க் கொடி பிடிப்பவர்கள் என்றும் தேச துரோகி கள் என்றும், வெடி மருந்து தயாரிப்பவர்கள் என்றும் குற்றம் சாட்டப்பட்டனர். கர்நாடகா சிஅய்டி (அரசு) அந்த 17 பேர் மீது 1624 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. 7 வருடங்கள் கழித்து, 2015ல் அந்த 17 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்தத் தகவல்கள்படி குற்றமற்ற 60 பேர், 5 ஆண்டு முதல் 23 ஆண்டுகள் வரை சிறையில் இருந்திருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையை சிறையில் தொலைத்தவர்கள், இழந்த நிமிடங்களை இழந்த நாட்களை, இழந்த வாரங்களை, இழந்த மாதங்களை, இழந்த வருடங்களை, இழந்த காலத்தை, அவர்களுக்கு யார் தருவார்?
நம் நாட்டில் இதற்கான இழப்பீட்டை சட்டத்தின் மூலம் பெற வாய்ப்பில்லை.கடந்த ஆண்டு அக்ஷர்தம் வழக்கில் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுதலையான 6 பேர் 11 வருடங்கள் சிறையில் இருந்ததற்கு இழப்பீடு வழங்கினால், அது ஆபத்தான முன் உதாரணமாக மாறும் என்று கூறி அதற்கான வாய்ப்பை மொத்தமாய் மூடிவிட்டது உச்சநீதிமன்றம்.
இந்தியா இறையாண்மை கொண்ட சமதர்மம் பேணும், மதச்சார்பின்மை உள்ள மக்களாட்சியும் குடியரசும் நிலவும் நாடு என்று, நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் உள்ள வார்த்தைகள் சொல்கின்றன. இசுலாமியராய் இருப்பது, இந்தியாவில் மிகப் பெரிய ஆபத்து என யதார்த்தம் காட்டுகிறது.

நினைத்தாலே கொதிக்கிறது.

Search