களம்
பாலியல்
வன்கொடுமையால்
உயிரிழந்த டில்லி மாணவிக்கு
அஞ்சலி
டில்லியில்
பாலியல் வன்கொடுமைக்கு
பலியான பெண்ணுக்கு
அஞ்சலி
செலுத்தியும்
குற்றவாளிகள்
மீது
கடுமையான நடவடிக்கை
கோரியும்
டிசம்பர் 30 அன்று
சென்னை
மெரீனாவில்
மெழுகுவர்த்தி
ஏந்தி பேரணி,
ஆர்ப்பாட்டம்
மற்றும் கையெழுத்து
இயக்கம் நடைபெற்றது.
அகில இந்திய
மாணவர் கழகம்,
புரட்சிகர
இளைஞர் கழகம்,
அகில
இந்திய முற்போக்கு
பெண்கள்
கழகம் இணைந்து
புரட்சிகர
இளைஞர் கழக
மாநிலப்
பொறுப்பாளர் தோழர்
பாரதி
தலைமையில்
நடந்த இந்த
நிகழ்ச்சியில்
நூற்றுக்கணக்கான
மாணவர்கள், இளைஞர்கள்,
பொதுமக்கள்
பங்கு பெற்றனர்.
கடற்கரைக்கு
வந்திருந்த
பொதுமக்கள், குறிப்பாக,
பெண்கள்
ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர்.
தங்கள்
குழந்தைகளையும்
கையெழுத்திட
வைத்தனர். ஜனவரி
9
அன்று கந்தர்வகோட்டையில்
பாலியல்
வன்கொடுமைக்கு
எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
புரட்சிகர
இளைஞர் கழக
மாவட்ட
அமைப்பாளர்
தோழர்
கோவிந்தராஜ் தலைமையில்
நடைபெற்றது.
கூட்டத்தில்
தோழர்கள்
ரேவதி, சரோஜா, வனிதா, மல்லிகா உட்பட
பலர் கலந்து
கொண்டனர்.
கட்சி
மாவட்டச்
செயலாளர்
தோழர் ஆசைத்தம்பி
மற்றும் மாநிலக்குழு
உறுப்பினர்கள்
தோழர்கள் தேசிகன்,
வளத்தான்
உரையாற்றினர்.
வெண்மணி
நாள்
உறுதியேற்பு
கூட்டம்
டிசம்பர் 25 அன்று
வெண்மணி
நினைவு
நாளில்
கீழ்வெண்மணி,
பதானிதோலா, கொடியங்குளம்,
பரமக்குடி,
தர்மபுரி
இனிமேலும்
அனுமதிக்கமாட்டோம்
என்ற
முழக்கத்துடன்
வெண்மணி நாள்
உறுதியேற்புக்
கூட்டம் திருவள்ளூர்
மாவட்டம்
காரனோடை
பஜாரில் நடத்தப்பட்டது.
கூட்டத்திற்கு
மாலெ கட்சி மாவட்டச்
செயலாளர்
தோழர்
ஜானகிராமன் தலைமை
தாங்கினார்.
அரசியல்
தலைமைக்குழு
உறுப்பினர்
தோழர்
எஸ்.குமாரசாமி,
மாநிலக் கமிட்டி
உறுப்பினர்கள்
தோழர்கள்
எ.எஸ்.குமார்,
எஸ்.இரணியப்பன்,
எஸ்.சேகர்
ஆகியோர் உரையாற்றினர்.
பேருந்து
வசதி கோரி
போராட்ட
அறிவிப்பு
கரூரில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் குஜியலியம்பாறை ஒன்றியம் வசந்தகிரிபாளையம் பகுதிக்கு போதிய பேருந்து வசதி கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாலெ) கிளையும், உழைப்போர் உரிமை இயக்கமும் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தன. இதையடுத்து கரூர் வட்டாட்சியர், போக்குவரத்து துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கூடுதல் பேருந்துகள் இயக்க ஒரு மாத காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.