முன்முயற்சி
சென்னை
உயர்நீதிமன்றத்தில்
ஜனநாயக வழக்கறிஞர்கள்
சங்க நடவடிக்கைகள்
நெற்றிக் கண்
திறந்தாலும் குற்றம்
குற்றமே எனப் பாடிய
புலவர்கள், சிவபெருமாள்
சீற்றத்திற்கும்
அஞ்சாத தமிழ்ப்
புலவர்கள் எனப்
பழம் பெருமை பேசுவது
ஒரு புறமும்,
அதிகாரங்கள்
முன் மண்டியிடுவது
மறுபுறமும் நடப்பது
தமிழ் அறிவுலகத்தில்
வாடிக்கை. நீதித்துறை,
ஆகப் பெரிய
புனிதப் பசுவாகும்.
ஊடகங்கள் கவனமாகக்
கட்டமைக்கும்
பிம்பங்கள், கடைசிப் புகலிடமாக
நீதிமன்றங்கள்
இருப்பதாக நம்பிக்கை
தருகின்றன. பொதுப்புத்தியும்
நம்புகிறது.
இந்த நீதித்
துறையில்தான்
தினகரன் உச்ச நீதிமன்ற
நீதிபதியாக பதவி
ஏற்க இருந்தார்.
இம்பீச்மெண்ட்
தீர்மானம் (நீதிபதி
பதவி விலக்கத்
தீர்மானம்) நிறைவேறும்
என இறுதியாக உறுதியான
பிறகுதான், கடைசி சொட்டு
வரை பதவி சுகம்
ஆதாயம் அனுபவித்து,
கடைசியில்
வேறு வழி இல்லாமல்
ராஜினாமா செய்தார்.
பெரும்தொழில்
குழுமங்கள் போல்,
வில்லாதிவில்ல
முதலாளித்துவ
அரசியல்வாதிகள்
போல் மாண்புமிகு
தினகரனும் சாமான்ய
மக்கள் நிலத்தை
அபகரித்தாகப்
புகார் எழுந்தது.
இந்த நீதித்
துறையில், அதன் சுதந்திரம்
கருதி, பணிப் பாதுகாப்பு,
அமைச்சர்கள்
சட்டமன்ற உறுப்பினர்களை
விட, மேலானதாகத்
தரப்பட்டுள்ளது.
26.03.2012 அன்று
திரு விஜயராகவன்
சென்னை உயர்நீதிமன்றத்தில்
கூடுதல் நீதிபதியாக
நியமிக்கப்படுகிறார்.
(இதில்
சாதிக் கணக்குகள்
இருப்பதாகவும்,
தென்மாவட்ட
ஆதிக்க சாதியினரைக்
திருப்திப்படுத்தும்
விஷயம் இருப்பதாகவும்
கூட ஒரு கருத்து
உள்ளது).
நீதிபதி வீட்டில்
ஒரு திருமணம்.
தமிழக முதல்வர்
அதில் கலந்து கொள்கிறார்.
அதன் பிறகுதான்
ஒரு கேலிக் கூத்து
நடந்தது. நீதிபதி
விஜயராகவன் அவரது
குடும்பத்தார்
பெயரால் மதுரை
பதிப்பு தினத்தந்தியில்
ஒரு விளம்பரம்
வெளியிடப்படுகிறது.
அந்த விளம்பரம்,
முதல் வருக்கு
நன்றி என்பதோடு
நில்லாமல், இதய தெய்வம்,
புரட்சித்
தலைவி, அஇஅதிமு கழகத்தின்
நிரந்தரப் பொதுச்
செயலாளர் அம்மாவுக்கு
நன்றி சொல்கிறது.
விளம்பரம் கழக
விசுவாசிகள் பாணியில்
தரப்பட்டது. சில
வழக்கறிஞர்கள்
இந்த விளம்பரத்தின்
வண்ண ஒளி நகலை
நீதிமன்றத்தில்
விநியோகிக்கிறார்கள்.
நீதித் துறையின்
சுதந்திரத்தைச்
சரணடைய வைக்கும்
விளம்பரம் என்ற
கருத்து வலுவாக
உருவான பிறகும்,
நடவடிக்கை
ஏதும் எடுக்க பரவலான
தயக்கம் காணப்பட்டது.
விவரம் தெரிந்த
நீதிபதிகளும்,
குறைந்தபட்சம்,
இந்த விளம்பரத்தை
திரு.விஜயராகவன்
வெளியிட்டிருந்தால்
அவர் அதனைத் திரும்பப்
பெற வேண்டும் என்று
கூடச் சொல்லாமல்,
அமைதி காக்கிறார்கள்.
துணிச்சலான மூத்த
வழக்கறிஞர்களும்
கூட, சட்ட
எல்லைகளுக்குள்
நின்று கொண்டு,
நீதிபதி பதவியில்
தொடர்வதைக் கேள்வி
கேட்கும் குவோ
வாரண்டோ வழக்கு
போட முடியாது எனச்
சொல்லி சட்ட வரம்புக்குள்
நிற்கிறார்கள்.
இத்தகைய பின்னணியில்தான்,
சென்னை உயர்நீதிமன்ற
நீதிபதி, கழகக் கண்மணி
போல் இரத்தத்தின்
இரத்தமாகச் செயல்படக்
கூடாது எனப் பிரசுரம்
வெளியிட்டு ஆர்ப்பாட்டம்
நடத்துவதோடு,
அதிகாரத்தைத்
தவறாகப் பயன்படுத்தி,
நீதித்துறையின்
சுதந்திரத்திற்கு
ஊறு விளைவிக்க
நீதிபதி பதவியில்
தொடர்வது எப்படி
என குவோ வாரண்டோ
வழக்கை, ஜனநாயக வழக்கறிஞர்கள்
சங்க அமைப்பாளர்
பாரதி ஒரு வழக்கைத்
தாக்கல் செய்தார்.
வேண்டாமே தவிர்த்து
விடுங்களேன் என்ற
கருத்துக்கள்
செல்வாக்குமிக்கவர்கள்
மத்தியில் இருந்து
வந்ததை மீறி ஆர்ப்பாட்டம்
நடந்தது. வழக்கும்
தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு போட
முடியுமா என்ற
விஷயம் 11.12.2012 அன்று டிபிள்யு.பி.எஸ்.ஆர்.
எண்.132193/2012ல் நீதிபதிகள்
வி.ராமசுப்பிரமணியன்
மற்றும் கே.எம்.சுந்தரேஷ்
அமர்வம் முன் விசாரணைக்கு
வந்தது. எதிர்பார்த்தபடியே,
நீதிபதிகள்,
பதவியில்
உள்ள நீதிபதிகள்
நியமனம் பற்றிக்
கேள்வி எழாத போது,
அவர்களை பதவி
நீக்கம் செய்ய,
அரசியலமைப்புச்
சட்டம் சொல்வது
போல் மக்கள் பிரதிநிதிகள்
தீர்மானம் மூலம்
மட்டுமே (இம்பீச்மென்ட்)
செய்ய முடியும்
என்று சொல்லி,
ரிட் மனு
எடுபடாது என்றனர்.
திரு.விஜயராகவன்
விளம்பரம் செய்ததற்கு
ஆதாரம் இருக்கிறதா
எனக் கேள்வி எழுப்பினர்.
(திரு.விஜயராகவன்
தாம் விளம்பரம்
செய்யவில்லை என,
சர்ச்சை எழுந்த
பிறகும், எவருக்கும்
விளக்கம் தந்ததாகத்
தெரியவில்லை).
நீதிபதி ஒருவரின்
பெயரால், அவர் ஒப்புதல்
இல்லாமல், செய்தித் தாள்
எதுவும், சரிபார்க்காமல்
விளம்பரம் வெளியிடும்
என்பதை நம்புவதுதான்
கடினம். நீதிபதி
விஜயராகவன் விளம்பரம்
கொடுத்தாரா கொடுக்கவில்லையா
என யாரும் கேட்கவில்லை.
அவரும் விளக்கவில்லை.
வழக்கை தொடுத்தவர்கள்
இளம் துருக்கியர்கள்,
நியாயம் கேட்பவர்கள்
என்று வழக்கை விசாரித்த
நீதிபதிகள் உணர்ந்ததும்,
அவர்கள் பேசிய,
எழுதிய விசயங்களில்
வெளிப்படையாகத்
தெரியாவிட்டாலும்,
உள்ளுக்குள்
ஓர் ஆதங்கம் இருப்பதும்
வெளிப்பட்டது.
நியமனத் தகுதியை
ஒரு நீதிபதி பெற்றுவிட்ட
பிறகு, அவரது நடவடிக்கைகள்படி
அவர் பொருத்தமானவரா
எனக் காண எந்தச்
சட்டமும் இல்லை.
பதவியில் அமர்ந்தபிறகு
ஒழுங்கீனம் (மிஸ்காண்டக்ட்)
தொடர்பாக எவரும்
எதுவும் செய்ய
முடியாது ஒரே வழி
இம்பீச்மென்ட்தான்.
(அரசியலமைப்புச்
சட்டப்பிரிவு
124 (4) 217 (1) (படி),
நாடாளுமன்ற
இரு அவைகளின் உறுப்பினர்களில்
மூன்றில் இருவர்
கலந்து கொண்டு
அதில் பெரும்பான்மை
ஆதரவு இருந்தாலே
நீதிபதி பதவி விலக்கத்
தீர்மானம் நிறைவேறும்).
பேசாப் பொருள்
பேசப்பட்டது. கேட்கப்படாத
கேள்வி கேட்கப்பட்டது.
திரு. விஜயராகவன்
வழக்கு முடிந்த
சில நாட்களிலேயே,
திரு.வேலு
என்ற மாவட்ட மற்றும்
அமர்வ நீதிபதி
அஇஅதிமுக கூட்ட
ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டதாகப்
பத்திரிகை செய்தி
வந்தது. வரும்
காலங்களில், நீதிபதிகள்,
முத்தமிழ்
அறிஞர் டாக்டர்
கலைஞர், கருப்பு எம்ஜிஆர்,
மருத்துவர்
அய்யா ஆகியோருக்கெல்லாம்
நன்றி சொல்லி விசுவாசம்
காட்டினாலும்,
நம்மால் ஏதும்
செய்ய முடியாது.
பைபிள் எழுப்பும்
கேள்வியை எழுப்பலாம்.
WHO IS TO
GUARD THE GUARDS THEMSELVES? தமிழில் சிறிது
தாராளமாக, பயிரை மேயும்
வேலிகளை என்ன செய்வது
என்று மொழி பெயர்த்துக்
கேட்கலாம். எது
எப்படி ஆனபோதும்,
கேள்வி கேட்க
அமைப்பு ஒன்று
உள்ளது என்பது
நிரூபணமாகி உள்ளது.
நாடெங்கும்
ஒரு பக்கம் பெரும்
தொழில் குழுமக்
கொள்ளை, பெரும் தொழில்
குழும முதலாளித்துவ
அச்சின் சூறையாடல்,
ஏகாதிபத்தியத்
தலையீடு ஆகியவற்றோடு,
படுமோசமாக,
பெண்கள் மீதான
ஆணாதிக்க தாக்குதல்களும்,
தலித் மக்கள்
மீதான சாதி வெறித்
தாக்குதல்களும்
தொடர்ந்து நடக்கின்றன.
டெல்லியில் தன்
ஆண் நண்பரோடு பின்
மாலைப் பொழுதில்
சென்ற ஒரு பெண்ணை,
இந்த நேரத்தில்
ஓர் ஆணோடு உனக்கென்ன
வேலை எனக் கேட்டு,
ஒரு கும்பல்
கூட்டு பாலியல்
வன்முறை செய்தது.
குற்றவாளிகளுக்கு தண்டனை
கோரி டிசம் பர்
21 அன்று
உயர்நீதி மன்ற
வளாகத்துக்குள்
ஜனநாயக வழக்கறிஞர்கள்
சங்கம் நடத்திய
கையெழுத்து இயக்கத்தில்
பலநூறு பேர் கையெழுத்திட்டனர்.
அநீதிகளைத் தட்டிக் கேட்கும், முற்போக்கு இடதுசாரி வழக்கறிஞர் கள் அமைப்பான ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம், தமிழகம் முழுவதும் பரவி வேர் விடுவதும், வழக்கறிஞர்கள் சமூகத்திற்கு உள்ளும் வெளியும் விடாப்பிடியான ஜனநாயக நிலைப்பாடுகள் எடுப்பதும் மிகமிகத் தேவையானவை ஆகும்