COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 30, 2013

6

சேலம்: சில உடனடி தலையீடுகள்

சேலம் மணியணூர் கேபி கரடில் குடிநீரை கட்டுமானப் பணிகளுக்கு காண்ட்ராக்டர்கள் பயன்படுத்தி வருவதால் மக்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. இதற்கு எதிராக இகக மாலெ மணியணூர் கிளை டிசம்பர் 24 அன்று சாலை மறியல் போராட்டம் நடத்தியது. போராட்டத்தை கட்சி முன்னணிகள் மாரிமுத்து, குமரேசன், ஜோதிபாசு ஆகியோர் தலைமையேற்று நடத்தினர். தோழர்கள் மாணிக்கம், செல்வராஜ், குமார், செந்தில் ராஜேந்திரன் ஆகியோர் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நீண்ட நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்ட பின் காவல்துறையினரும் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக் காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சீரான குடிநீர் விநியோகத்துக்கு உத்தரவாதம் அளித்த பின் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஜனவரி 7 அன்று தேசிய நெடுஞ்சாலை 68 விரிவாக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகள் 450க்கும் அதிகமானோர் அகில இந்திய கிசான் மகா சபா பதாகையில் தோழர் அய்யந்துரை மற்றும் செல்வராஜ் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் திரண்டனர்.

ஜனவரி 8 அன்று, அகில இந்திய கட்டுமானத் தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 60 பெண்கள் உட்பட 100க்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் குமரேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு மாநில துணைத் தலைவர் தோழர் சந்திரமோகன், இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் மோகனசுந்தரம், ஏஅய்சிடபுள்யுஎஃப் தேசிய செயற்குழு உறுப்பினர் தோழர் ஜோதிபாசு மற்றும் தோழர் நடராஜன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

நாமக்கல் மாவட்ட ராசிபுரம் வெண்ணந்தூரில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் சட்டக் கூலி ரூ.132 கேட்டு ஜனவரி 7 அன்று அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் தர்ணா நடத்தியது. சட்டமன்ற சபாநாயகர் தொகுதியாக இருப்பதால் போலீஸ் கெடுபிடி அதிகம் இருந்தும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெற்றது.

தோழர்.கணேசன் தலைமையில் நடந்த போராட்டத்தில் அயாலா அகில இந்திய துணைத் தலைவர் தோழர் பாலசுந்தரம், மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் வெங்கடேசன், ஏஅய்சிசிடியு மாநில துணைத் தலைவர் சந்திரமோகன் மற்றும் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகனசுந்தரம் ஆகியோர் உரையாற்றினார். 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

Search