COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 30, 2013

1

கற்பனை

அய்முகூ அரசாங்கத்தின் சாதனைகள் சொல்லாதே யாரும் கேட்டால்...

சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் மத்தியில் ஆட்சியில் இருந்த இந்தத் தொடர் 9 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று சோனியா காந்தி காங்கிரஸ்காரர்களுக்கு அழைப்பு விடுத்தார். அய்முகூவுக்கு தலைமையேற்று காங்கிரஸ் கட்சி செய்த சாதனைகள் என்னென்ன என்று மக்களுக்கு நன்கு தெரியும். சோனியா சொல்லிவிட்டாரே என்பதற்காக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களும் உயர்மட்ட தொண்டர்களும் முடிவு எடுத்துவிட்டால் என்னென்ன சாதனைகள் பற்றி பேசுவார்கள் என்பது பற்றி ஒரு சாமானிய இந்தியனின் கற்பனை.

சாதனை 1: அன்னை சோனியா தலைமையில் நாங்கள்தான் கடந்த 9 ஆண்டுகளில் பல மடங்கு விலை உயர்வால் மக்களை மூச்சுத்திணறச் செய்தோம்.

சாதனை 2: அண்ணன் ராகுல் சொன்னபடி நாங்கள்தான் இந்தியாவை அமெரிக்காவின் மற்றுமொரு மாநிலமாக மாற்றினோம்.

சாதனை 3: அய்யா மன்மோகன் தலைமையில் நாங்கள்தான் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களைத் தவிர மற்ற அனைத்தையும் தனியார்மயமாக்கினோம்.

சாதனை 4: அய்யா சிதம்பரத்தின் புத்திக்கூர்மையால் நாங்கள்தான் பொருளாதாரத்தை மேம்படுத்த அந்நிய மூலதனத்துக்கு சிறப்பாக சேவை செய்து வருகிறோம்.

சாதனை 5: அய்யா சிதம்பரம் தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து நாங்கள்தான் காங்கிரசின் மறுபெயர் ஊழல் என்ற அளவுக்கு வரலாறு காணாத ஊழல்களில் ஈடுபட்டோம்.

சாதனை.6: அய்யா மன்மோகனின் மவுனத்தின் மூலமே ஊழலுக்குக் காரணமானவர்களுக்கு உயர் பதவிகள் தந்தோம்.

சாதனை 7: அன்னை சோனியா வழிகாட்டுதலில் கட்சி பேதம் பாராமல் அமைச்சர்கள், அதிகாரிகள், உறவினர்கள், வேண்டியவர்கள் என அனைவரையும் ஊழல் வலைப்பின்னலில் கொண்டு வந்தோம். அன்னை சோனியா - அய்யா மன்மோகன் தலைமையில் நாங்கள்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் - அரசியல்வாதிகள் அச்சை தெளிவாக முன்னிறுத்தினோம். அரசாங்கத்தை இயங்கச் செய்யும் அச்சாக ஊழல் முழுவதுமாக உருப்பெற வைத்தோம்.

சாதனை 8: அன்னை சோனியா - அய்யா மன்மோகன் - மற்றொரு அன்னை ஷீலா தீக்μத் அனைவரும், மத்தியில் அய்முகூ, டில்லியில் காங்கிரஸ் ஆட்சி என ஒன்றிணைந்து செயல்பட்டு நாட்டின் தலைநகரம் பாலியல் வல்லுறவு தலைநகரமாக மாற அனைத்தும் தழுவிய முயற்சிகள் எடுத்தோம்.

சாதனை 9: அய்யா சிதம்பரம் ஆலோசனைப்படி, எதிர்க்கட்சி ஆட்சி இருக்கிற மாநிலமானாலும் முதலாளிகள் நலன் காக்க நாங்கள்தான் பசுமை வேட்டை நடவடிக்கையை அறிமுகப்படுத்தினோம். குற்றங்களில் ஈடுபடுபவருக்கு பாதுகாப்பு, போராடும் மக்கள் மீது ஒடுக்குமுறை என்பதை இந்தியாவின் குறிப்பியல்பாக வளர்த்தெடுத்தோம்.

சாதனை 10: விவசாய நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கத் தந்துவிட்டு அங்கு வாழ்ந்த மக்களை அடித்து விரட்டுவதில் நாங்கள்தான் உறுதியானவர்கள்.

சாதனை 11: மூத்த தலைவர் சரத் பவார் தலைமையில் உணவுப் பாதுகாப்பை ஒழித்துக்கட்ட அரும்பாடுபட்டு வருவது காங்கிரஸ் கட்சியே. விவசாயத்தை ஒழித்துக்கட்ட முயற்சி எடுப்பது எங்கள் ஆட்சிதான்.

சாதனை 12: இந்திய உழைக்கும் மக்கள் கடினப்பட்டு சிறுகச்சிறுகச் சேர்த்த பணத்தை பங்குச் சந்தை முதலைகள் ருசி பார்க்க நாங்கள்தான் எல்லா ஏற்பாடுகளும் செய்கிறோம்.

சாதனை 13: அய்யா சிதம்பரம் - அய்யா மன்மோகன் - அய்யா மான்டெக் மூவரின் மூளைகளைக் கசக்கி, முதலாளிகளுக்கு வரிச் சலுகை, சாமானிய மனிதனுக்கு கூடுதல் வரிகள் என்று வரிக் கொள்கையில் புதிய பாதை போட்டிருக்கிறோம். எங்கள் சாதனைகளைச் சொல்லிக் கொண்டே போனால் மக்கள் தாங்க மாட்டார்கள் என்பதுடன் எங்களாலேயே தாங்க முடியாது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறோம்.

Search