COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 30, 2013

5

உலகம்

இந்தோ - பாக் உறவுகள்

அமைதியை உத்தரவாதப்படுத்துவோம்! யுத்தத்திற்கான தயாரிப்பை முறியடிப்போம்!

2012ன் இறுதிக்கு திடீரென்று முற்றிலும் முரணான விதத்தில் 2013ன் துவக்கம் வந்து நிற்கிறது. பெண்களுக்கான நீதி மற்றும் சுதந்திரம் பற்றியும் நம் சமூகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜனநாயக சீர்திருத்தம் பற்றியும் மிகுந்த அவசரத்தோடு விவாதங்கள் கட்டமைத்துக் கொண்டிருந்த அதே மின்னணு ஊடகங்கள், இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கோட்டில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடைபெற்ற பிரச்சனைகளை அடுத்து போர் வெறிக் கூச்சலுக்கான போட்டி அலைகளை உசுப்பிவிடத் துவங்கிவிட்டன. டிசம்பரில் ஜனநாயகம் என்பது ஆய்வுப் பொருளாக இருந்தது என்றால், ஜனவரியில் யுத்த வெறி என்பது மேலோங்கிய தன்மை பெற்றது. கொடூரமான விதத்தில் லான்ஸ் நாயக் ஹேம்ராஜ் தலை துண்டிக்கப்பட்டது, இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் புத்தி ஸ்வாதீனமுள்ள அனைவராலும் திட்டவட்டமாக கண்டனம் செய்யப்பட்டது; இது பற்றி விசாரணை நடத்த பாகிஸ்தான் மீது ராஜதந்திர அழுத்தம் தருவதற்குப் பதிலாக, ஓர் இந்தியர் தலைக்குப் பதிலாக பத்து பாகிஸ்தானியர் தலைகள் என்று பாஜக தலைவரான சுஷ்மா ஸ்வராஜ் சொல்வதன் மூலம், உணர்ச்சி வெறியைத் தூண்டிவிட, இந்தப் பிரச்சனையை பொறுப்பற்ற விதத்தில் பயன்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் போர் வெறிச் சூழல் ஏற்கனவே அதற்கான துன்ப விளைவுகளைத் தரத் துவங்கி விட்டது. இந்திய ஹாக்கித் தொடர் போட்டியில் விளையாட வந்த பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள் சிவசேனை எதிர்ப்பு காரணமாக திருப்பி அனுப்பப்பட்டு விட்டார்கள். லாகூரில் புகழ் வாய்ந்த அஜோகா நாடகக் குழுவின் கோன் ஹைய் யே குஸ்தக், கராச்சியை மய்யமாகக் கொண்ட நிகழ்த்துக் கலைகளுக்கான தேசிய சபாவின் மண்டோரமா ஆகிய இரு பாகிஸ்தான் நாடகக் குழுக்களின் நிகழ்ச்சிகளும் டெல்லியில் ரத்து செய்யப்பட்டு விட்டன. விந்தை முரணான விதத்தில் இந்த இரு நாடகங்களுமே இந்தியாவின் மரபு சார்ந்த கதைகள் எழுதி வந்து, பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்த சதத் ஹசன் மண்டோ பிறந்த நூற்றாண்டில் அவருக்கு புகழஞ்சலி செலுத்துவதற்கானதாகும். ஜனவரி 14 அன்று பாகிஸ்தானின் செவ்விலக்கிய பாடகர் ஜாவித் பஷீர் டெல்லியில் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படவில்லை. புனேயில் நடிகரும் பாப் பாடகருமான அலி ஜாபர் தடுக்கப்பட்டார். பாகிஸ்தானிய நடிகர்கள் மற்றும் கலைஞர்களின் பாதுகாப்பைஉத்தரவாதம் செய்தல் என்ற பெயரில், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ரத்து செய்திருக்கின்றார்கள். இந்த இயக்கப்போக்கில் இந்திய அரசு உண்மையிலேயே போர்வெறிக் கூச்சல் தூபம் போடுபவர்களுக்கு தைரியம் அளித்து, உற்சாகப்படுத்துகிறது என்பது வெளிப்பட்டிருக்கிறது.

யுத்த வெறி அரசியலுக்கு சிறந்த தகுதி இருப்பதாக காங்கிரஸ் எப்போதுமே பார்க்கிறது. தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் எடுக்கப்படும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத முடிவுகளை நியாயப்படுத்தப் போர் மேகங்கள் சிறந்த கவசத்தை அளிக்கின்றன. கடுமையான இரயில் கட்டண உயர்வை தொடர்ந்து, அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி டீசல் விலைக் கட்டுப்பாட்டை நீக்கி எரிபொருள் மானியத்தை முற்றிலும் ஒழித்து விட வழிவகை செய்திருக்கிறது. அரசியல்ரீதியாக, யுத்த வெறி விளையாட்டில் பாஜக, சங்பரிவாரை, தான் விஞ்சிவிட முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது. 1962 இந்திய – சீன யுத்தத்தின் போது நேரு குடியரசு தின அணிவகுப்பில் ஆர்எஸ்எஸ்ûஸ பங்கு பெறும்படி அழைப்பு விடுக்கும் அளவுக்குச் சென்றதை நினைவுபடுத்திக் கொள்ளலாம். இன்று திரும்பவும் காங்கிரஸ் அதே யுக்தியை பாஜக சிவசேனை போன்ற அமைப்புகளை சாந்தப்படுத்தி விட எடுக்கிறது.

இன்றைய கொந்தளிப்பான உலகளாவிய அரசியல் சூழலில் யுத்தம் போன்ற ஒரு சூழ்நிலைக்கு இந்திய அல்லது பாகிஸ்தானிய மக்களால் விலை கொடுக்க முடியாது. கட்டுக் கடங்காத ஊழல் மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு அப்பால், இந்தியாவும் பாகிஸ்தானும் ஏகாதிபத்திய தலையீடு மற்றும் பயங்கரவாதத்துக்கு ஆளாகக் கூடிய ஆபத்திலும் இருக்கின்றன. உள்ளபடியே, பாகிஸ்தான் தினமும் அமெரிக்க ட்ரோன் தாக்குதலாலும், தலிபானால் ஆதர்μக்கப் பட்ட பயங்கரவாத வன்முறையாலும் சூழப்பட்டிருக்கிறது. அதே வேளை இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே ஜனநாயகத்துக்காக வளர்ந்து வரும் வெகுஜன அறுதியடலுக்கான உற்சாகமான சமிக்கைகளையும் கண்டு வருகிறது. இரு நாடுகளுக்கான பதற்றத்தை அதிகப்படுத்துவதோ அல்லது இந்த துணைக் கண்டப் பகுதியின் வான் மீது போர் மேகங்களை ஆழப்படுத்துவதோ இரு நாடுகளிலும் ஜனநாயக அரசியல் சூழலை மாசுபடுத்தி, ஜனநாயக அரசியலுக்கு பாதகமாக எதேச்சதிகார நீரோட்டத்தை வலுவாக்க மட்டுமே செய்யும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் பொதுக் கருத்து, இரு நாடுகளிலும் போர் வெறிக் கூச்சல் போடுபவர்கள் மீது ஆளுமை செலுத்தி 2003 போர் நிறுத்த ஒப்பந்தத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்கவும் எல்லா வகையிலும் மற்றுமொரு கார்கிலை தவிர்க்கவும் நிர்ப்பந்தப்படுத்த வேண்டும்.

தமிழில்: தேசிகன்
ஜனவரி 22 - 28, எம்எல் அப்டேட்

Search