மண்ணில்
பாதி
இந்தியப்
பெண்கள் வேலை வாய்ப்பு:
சில
விவரங்கள்
2009 - 2010ல், தங்கள்
வீட்டில்
மட்டும் வேலை
செய்யும்
பெண்களின்
எண்ணிக்கை 21.6 கோடி.
இது பிரேசில்
நாட்டின்
மொத்த மக்கள்
தொகையை விடக்
கூடுதல்.
இவர்களில்
1.27
கோடி பேர்
பட்டப்படிப்பும்
அதற்கு
மேலும்
படித்தவர்கள்.
இது சிங்கப்பூர்
மக்கள்
தொகையின்
இருமடங்கை விடக்
கூடுதல்.
இந்தப்
பிரிவின்
நகர்ப்புற பெண்களில்
57%
பேர் பட்டப்
படிப்பும் அதற்கு
மேலும்
படித்தவர்கள்.
1999 - 2000 முதல் 2004 -
2005 வரை உருவாக்கப்பட்ட
97
லட்சம் வேலை
வாய்ப்புக்களில்
37
லட்சம் வேலை
வாய்ப்புக்கள்
பெண்களுக்கு
கிடைத்தன.
ஆனால், இவற்றில் பெரும்பான்மை
பாதுகாப்பின்மை,
சட்ட உரிமைகள்
மறுப்பு, குறைந்த
கூலி ஆகியவற்றால்
குறிக்கப்படுகிற
ஆயத்த ஆடைத் துறை
வேலை
வாய்ப்புக்கள்.
2004 - 2005 முதல் 2009 -
2010 வரை உற்பத்தித்
துறையில் 37 லட்சம்
வேலை வாய்ப்புக்கள்
பறிபோயின.
இவற்றில் 80% பெண்களுடையவை.
1990களுக்குப்
பிறகு
பெண்களுக்கு கிடைத்த
மிகப்பெரிய
வேலை
வாய்ப்பு வீடுகளில்
வேலை
செய்வதுதான்.
படித்த
பெண்களுக்கு
சம்பளம்
தரும் வேலை
இல்லை.
கிடைத்த
வேலைக்குச் செல்கிற
பெண்களுக்குப்
பாதுகாப்பு
இல்லை.
(விவரங்கள்
ஆதாரம்: 09.01.2013 அன்று
தி இந்து நாளிதழில்
வெளியான
ஜெயன் ஜோஸ்
தாமஸ் எழுதிய,
‘இந்திய
தொழிலாளர்கள்
மத்தியில்
பெண்கள் வடிவிலான
இடைவெளி’ என்ற
கட்டுரை)