தலையங்கம்
பாலியல்
வல்லுறவு
தேசிய
அவமானம்
அச்சமற்ற
சுதந்திரத்திற்கான
பெண்கள் உரிமையைப்
பாதுகாப்போம். பாலியல்
வல்லுறவுக்
குற்றம்
புரிந்தவர் அனைவருக்கும்
துரிதமான, நிச்சயமான
தண்டனை
கோருவோம்.
திருமண
உறவு, காவல், சாதிய
மதவெறி மற்றும்
பாதுகாப்புப்
படையினர் பாலியல்
வல்லுறவு
உள்ளிட்ட
பாலியல்
தாக்குதல்களுக்கு,
பாலியல் துன்புறுத்தல்,
கவுரவக்
குற்றங்களுக்கு
எதிரான
மசோதாக்கள்
நிறைவேற்ற நாடாளுமன்ற
சிறப்புத்
தொடர்
நடத்தப்பட வேண்டும்.
பாலியல்
கூருணர்வுடைய
சட்டங்கள், துரித
நிச்சய
தண்டனை: நாடாளுமன்ற
சிறப்புத்
தொடர் கூட்டி,
பெண்கள்
இயக்கங்களோடு
கலந்து பேசி, தாமதமின்றி,
திருமண
உறவு காவல்
சாதிய மதவெறி
மற்றும் பாதுகாப்புப்
படையினர்
பாலியல்
வல்லுறவு உள்ளிட்ட
பாலியல்
தாக்குதல் களுக்கு
எதிராக, பாலியல்
துன்புறுத்தல்
கவுரவக்
குற்றங்களுக்கெதிராக அனைத்தும்
தழுவிய
சட்டங்கள்
இயற்ற
வேண்டும்.
நீதித்துறை:
அனைத்துப்
பாலியல்
வன்முறை
(பாலியல்
துன்புறுத்தல் உட்பட)
வழக்குகளிலும்
துரித
நீதிமன்றங்கள்
அமைக்கப்பட
வேண்டும். அவை 3
மாதங்களுக்குள்
தீர்ப்பு
வழங்க
வேண்டும். பெண்கள்
மீதான வன்முறையை
நியாயப்படுத்தி,
பால் சமத்துவத்திற்கெதிராகப்
பேசும், தீர்ப்பு
வழங்கும்
நீதிபதிகள்
பதவி விலக வழி
செய்ய
வேண்டும்.
காவல்துறை: பாலின
கூருணர்வு
பற்றிய
பயிற்சி
முறைகள் எல்லாக் காவல்
நிலையங்களிலும்
அறிமுகப்படுத்தப்பட
வேண்டும். அவை பாலியல்
வல்லுறவு
புகார்களை
எப்படி அணுக வேண்டும்
என்ற முறைகளை
சொல்லித்
தந்து பயற்சி
தர வேண்டும்.
எல்லா காவல்
நிலையங்களிலும்
பொருத்தமான
உள்கட்டுமானம்
உருவாக்கப்பட
வேண்டும். பாலியல்
வல்லுறவு
விசாரணை
சாதனங்களும்
இருக்க
வேண்டும்.
பாலியல் துன்புறுத்தல்
- வல்லுறவு
வழக்குகள்
பதிவு செய்யத்
தவறும்போது, வேலை
நீக்கம் உள்ளிட்ட
தண்டனைகள்
வழங்கப்பட
வேண்டும்.
மருத்துவமனைகள்: பாலியல்
வல்லுறவுக்கு
ஆளானவர்களுக்கு மருத்துவ
மனநல
சிகிச்சை தர
தனிப்பிரிவு
(வார்டு)
அமைக்கப்பட வேண்டும்.
மருத்துவமனைகளில்
உடல்கூறு குற்றவியல்
விசாரணைகளை கையாள
பொருத்தமான
உள்கட்டுமானம்
வேண்டும்.
பாலியல் வல்லுறவை
நியாயப்படுத்தும்
கலாச்சாரத்துக்கு
முடிவு கட்டப்பட
வேண்டும்: பாலியல்
வல்லுறவுக்கு,
கவுரவ
குற்றங்கள்
அல்லது குடும்ப
வன்முறைக்கு,
எந்த
விதத்திலும்
நியாயம்
சொல்வதற்கும்
முடிவு கட்ட
வேண்டும்.
வல்லுறவுக்கு
ஆளானவர்களை குற்றம்
சொல்லும் தேர்ந்தெடுக்கப்பட்ட
பிரதிநிதிகள்
அல்லது காவல்
அதிகாரிகள்
உள்ளிட்ட பொது
ஊழியர்கள், நீதிபதிகள்
பதவி
விலகுமாறு
செய்யப்பட
வேண்டும். பால யல்
வன்முறையில்
பிழைத்தோர்க்கு
ஆதரவு:
பாலியல் வல்லுறவில்
பிழைத்தோர்க்கு
அரசு செலவில் சமூக,
மருத்துவ,
சட்டப்பூர்வ,
உளவியல்,
பொருளாதார
ஆதரவு தரப்பட
வேண்டும்.
தடுப்பு மற்றும் கல்வி: களத்தில் உள்ள பெண்கள் இயக்க செயல்வீரர்களுடன் தேசிய அளவில் கலந்து பேசி உருவாக்கப்படும் பாடத் திட்டத்தில் சாரமான பகுதியாக பால் சமத்துவம் இருக்க வேண்டும். நோக்கம், போர்க்கால அடிப்படையில், பெண்களை வெறுப்பது, ஆணாதிக்க அணுகுமுறைகள், பெண்கள் சுதந்திரம் உரிமைகள் மீது பகைமை, ஆகியவற்றிற்குச் சவால் விடுவதாக இருக்க வேண்டும்