COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 30, 2013

3

டாஸ்மாக் கடைகளை அகற்று: ஆர்ஒய்ஏ

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் எல்எம்டபிள்யூ பிரிவு சாமையன் நகரில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை, கூடலூர் கவுண்டம்பாளையத்தில் விஜயலட்சுமி நகர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள டாஸ்மாக் கடை, பெரியநாயக்கன்பாளையம் இந்திரா காந்தி வணிக வளாகத்தில் உள்ள டாஸ்மாக் கடை ஆகியவை பகுதி மக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளன. குடியிருப்பு பகுதியில், பேருந்து நிறுத்தத்தில் இந்தக் கடைகள் அமைந்துள்ளதால் அதை கடந்து செல்லும் மாணவர்கள், பெண்கள் அன்றாடம் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

புரட்சிகர இளைஞர் கழகம் அந்தக் கடைகளை அகற்ற வலியுறுத்தி ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களிடம் கையெழுத்து பெற்று, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தது. மதுக்கடைகளை அகற்றாவிட்டால் போராட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்ற எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

Search