விவசாயத் தொழிலாளர் சங்கம்
ஆர்ப்பாட்டம்
வலுவான லோக்பால் சட்டம் வேண்டும்!
விவசாய தொழிலாளர்க்கு நாளொன்றுக்கு ரூ.300 கூலி,
குடும்பத்தில் இருவருக்கு வேலை வேண்டும்!
அனைத்திந்திய
விவசாயத்
தொழிலாளர்
சங்க 4ஆவது தேசிய மாநாடு பாட்னாவில்
2011 நவம்பர்
21 - 22 தேதிகளில்
நடைபெற்றது.
டிசம்பர்
15 அன்று ஊழலுக்கு
எதிராக,
வலுவான
லோக்பால்
சட்டம்
இயற்றிட
கோரி, நாள் ஒன்றுக்கு
ரூ32, ரூ26 என செலவழிப்பவரை
வறுமைக்
கோட்டுக்கு
மேல் வந்து விட்டதாக
சொல்லும்
மோசடியை
கண்டித்து,
விவசாயத்
தொழிலாளர்
உள்ளிட்ட
பிற அமைப்புசாரா
தொழிலாளர்களுக்கு
நாள் ஒன்றுக்கு
ரூ300 கூலி, குடும்பத்தில்
2 பேருக்கு
வேலை, கூடங்குளம்
அணு உலை மூடப்பட வேண்டும்
போன்ற கோரிக்கைகளுடன்
ஆர்ப்பாட்டம்
நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவின்படி
நடந்த ஆர்ப்பாட்டங்களில்
முல்லைப்பெரியாறு
பிரச்சனையில்
மத்திய
அரசின்
மெத்தனப்
போக்கைக்
கண்டித்து
முழக்கங்கள்
எழுப்பப்பட்டன.
திருவள்ளூர்:
ஆர்ப்பாட்டத்திற்கு
அவிதொச
ஒன்றிய
அமைப்பாளர்
தோழர் சீனிவாசன்
தலைமை தாங்கினார்.
மாநில பொதுச் செயலாளர்
தோழர் எஸ். ஜானகிராமன்,
மாலெ கட்சி மாநிலக்குழு
உறுப்பினர்
தோழர் எ.எஸ்.குமார், அவிதொச மாவட்ட தலைவர் தோழர் வண்ணை சந்திரன்,
ஏஅய்சிசிடியு
மாவட்ட
செயலாளர்
தோழர் ஜெயராஜ்,
முற்போக்கு
பெண்கள்
கழக மாவட்டத்
தலைவர்
தோழர் சாந்தி, மாணவர் கழக அமைப்பாளர்
தோழர் சீதா கண்டன உரையாற்றினர்.
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டையில்
அவிதொச
மாநில செயலாளர்
தோழர் ராஜாங்கம்
தலைமையில்
நடந்த ஆர்ப்பாட்டத்தில்
சிபிஅய்
எம்எல்
மாநில கமிட்டி
உறுப்பினர்
தோழர் ஆசைத்தம்பி
சிறப்புரையாற்றினார்.
குன்றாண்டார்
கோயிலில்
நடைபெற்ற
ஆர்பாட்டத்திற்கு
தோழர் சத்தியமூர்த்தி
தலைமை தாங்கினார்.
அவிதொச
மாநில துணைதலைவர்
தோழர் வளத்தான்
ஏஅய்சிசிடியு
மாநில செயலாளர்
தோழர் தேசிகன்
கட்டுமான
தொழிலாளர்
சங்க மாநில துணைத்தலைவர்
தோழர் முருகையன்
உரையாற்றினர்.
விழுப்புரம்:
மாவட்ட
செயலாளர்
தோழர் கலியமூர்த்தி
தலைமையில்
நடந்த ஆர்ப்பாட்டத்தில்
அவிதொச
நிர்வாகிகள்
தோழர்கள்
செண்பகவள்ளி,
கந்தசாமி,
சிபிஅய்எல்
மாவட்ட
செயலாளர்
தோழர் வெங்கடேசன்
உரையாற்றினர்.
பெருமளவில்
பெண்கள்
பங்கேற்றனர்.
செஞ்சியில்
தாசில்தார்
அலுவலகம்
எதிரில்
மறியல்
போராட்டத்திற்கு
முற்போக்கு
பெண்கள்
கழக மாவட்ட தலைவர் தோழர் சுசீலா தலைமை தாங்கினார்,
சாந்தி
பேபி ஜோதி உட்பட இந்த நிகழச்சியிலும்
பெண்கள்
90% பங்கேற்றனர்.
கோட்டக்குப்பத்தில்
நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு
அவிதொச
மாவட்ட
தலைவர்
தோழர் தட்சிணாமூர்த்தி
தலைமை தாங்கினார்.
திருக்கோவிலூரில்
நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு
மாவட்ட
நிர்வாகி
தோழர் சீனிவாசன்
தலைமை தாங்கினார்.
மாலெ கட்சி மாவட்ட செயலாளர்
தோழர் வெங்கடேசன்
சிறப்புரையாற்றினார்.
தஞ்சை: ஆர்ப்பாட்டத்திற்கு
அவிதொச
மாவட்ட
தலைவர்
மாசிலாமணி
தலைமை தாங்கினார்.
மாநில தலைவர் தோழர் டிகேஎஸ்
ஜனார்தனன்,
மாவட்ட
தலைவர்
தோழர் கண்ணையன்,
மாலெ கட்சி மாநிலக்குழு
உறுப்பினர்
தோழர் இளங்கோவன்
கட்சி மாவட்ட கமிட்டி
உறுப்பினர்
தோழர் குருசாமி,
மாணவர்
கழக தலைவர் தோழர் பிரசாத்
உரையாற்றினர்.
கடலூர்: ஆர்ப்பாட்டத்தில்
அவிதொச
மாநில செயலாளர்
தோழர் அம்மையப்பன்
சிறப்புரையாற்றினார்.
விருதுநகர்:
நடந்த ஆர்ப்பாட்டத்தில்
அவிதொச
மாநில செயற்குழு
உறுப்பினர்
தோழர் ஆவுடையப்பன்
சிறப்புரையாற்றினார்.
தூத்துக்குடி:
ஆர்ப்பாட்டத்தில்
அவிதொச
மாநில செயற்குழு
உறுப்பினர்
தோழர் பொன்ராஜ்
சிறப்புரையாற்றினார்.
மதுரை: ஆர்ப்பாட்டத்தில்
அவிதொச
மாநில செயற்குழு
உறுப்பினர்கள்
தோழர்கள்
முருகேசன்,
முத்தம்மாள்
சிறப்புரையாற்றினர்.
வலுவான
லோக்பால்
சட்டம்
வேண்டும்!
விவசாய
தொழிலாளர்க்கு
நாளொன்றுக்கு
ரூ.300 கூலி, குடும்பத்தில்
இருவருக்கு
வேலை வேண்டும்!
தொகுப்பு:
எஸ்.சேகர்