COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, January 22, 2012

2-1

கல்வி

என்ன செய்ய வேண்டும்?’

லெனின்

சமூக ஜனநாயகவாதத் தொழிலாளி, புரட்சிகரமான தொழிலாளி (இப்படிப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது) தொட்டறியதக்க விளைவுகளை அளிக்கக்கூடிய கோரிக்கைகள் முதலானவற்றைப் பற்றிய பேச்சுக்களைச் சீற்றத்துடன் நிராகரிப்பான்; காரணம், இது ரூபிளுடன் கூட ஒரு கோபெக்கு சம்பாதிப்பது பற்றிய பழைய பாட்டைச் சற்று மாற்றிப் பாடுவது தவிர வேறில்லை என்று புரிந்து கொள்வான். ரபோச்சயா மிஸ்ல் ரபோச்சியே தேலோபாற்பட்ட அறிவுரையாளர்களிடம் அவன் சொல்வான்; நல்லபடியாக நாங்களே சமாளிக்கக்கூடிய காரியத்தில் மட்டுமீறிய ஆர்வத்துடன் குறுக்கிடுவதின் வழியாக நீங்கள் வீணாக சிரமம் எடுத்துக் கொள்கிறீர்கள். உங்களுக்குரிய முறையான கடமைகளைச் செய்யாமல் தட்டிக் கழிக்கிறீர்கள். பொருளாதாரப் போராட்டத்துக்கே அரசியல் தன்மை கொடுப்பதுதான் சமூக ஜனநாயகவாதிகளின் பணி என்று நீங்கள் அடித்துப் பேசுவதில் கெட்டிக்காரத்தனம் ஒன்றுமில்லை; அது வெறுமே ஒரு தொடக்கந்தான். அது சமூக ஜனநாயகவாதிகளின் முதன்மையான பணி அல்ல. ஏனெனில் ருஷ்யா உள்ளிட்டு உலகம் முழுவதிலும் பொருளாதாரப் போராட்டத்துக்கு அரசியல் தன்மை கொடுப்பதில் அடிக்கடி போலீஸ்காரர்களே முன்கை எடுக்கிறார்கள். அரசாங்கம் யாரை ஆதரிக்கிறது என்று தொழிலாளர்கள் தாங்களாகவே புரிந்துகொள்ளக் கற்றுக்கொள்கிறார்கள். ஒரு புதிய அமெரிக்காவை கண்டுபிடித்துவிட்டவர்கள் போல்முதலாளிகளுக்கும் அரசாங்கத்துக்கும் எதிரான தொழிலாளிகளின் பொருளாதாரப் போராட்டம் பற்றி இவ்வளவு ஆரவாரம் செய்கிறீர்களே, இந்தப் போராட்டத்தைத் தாங்களாகவே தொழிலாளர்கள் ருஷ்யாவின் எல்லாப் பகுதிகளிலும், மிகத் தொலைவிலுள்ள பகுதிகளிலும் நடத்தி வருகிறார்கள். அவர்கள் வேலை நிறுத்தங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார்கள் என்றாலும் சோசலிசத்தைப் பற்றி அநேகமாக ஒன்றும் கேள்விப்பட்டதில்லை. தொட்டறியத்தக்க விளைவுகளை அளிக்கக் கூடியதாயுள்ள ஸ்தூலமான கோரிக்கைகளை முன்வைப்பதின் மூலம் தொழிலாளர்களாகிய எங்களிடையே நீங்கள் தூண்டிவிட விரும்பும் நடவடிக்கையை நாங்கள் ஏற்கெனவே செயலில் காட்டி வருகிறோம். மிக அடிக்கடி அறிவுஜீவிகளின் எந்த உதவியும் இல்லாமலே எங்களுடைய அன்றாட, வரம்புகளுக்குள் உள்ள தொழிற்சங்க வேலையில் இந்த ஸ்தூலமான கோரிக்கைகளை முன் வைக்கிறோம். ஆனால் இப்படிப்பட்ட நடவடிக்கை எங்களுக்குப் போதாது. பொருளாதார வகைப்பட்ட அரசியல் எனும் நீர்த்துப்போன கஞ்சி மட்டும் ஊட்டப்பெறுவதற்கு நாங்கள் குழந்தைகள் அல்ல; மற்றவர்கள் தெரிந்து கொண்டுள்ள அனைத்தும் நாங்கள் அறிய விரும்புகிறோம்; அரசியல் வாழக்கையின் எல்லா அம்சங்களின் விபரங்களையும் நாங்கள் அறிய விரும்புகிறோம். ஒவ்வொரு அரசியல் நிகழ்ச்சியிலும் தீவிரமாகக் கலந்து கொள்ள விரும்புகிறோம். இதை நாங்கள் செய்வதற்கு அறிவுஜீவிகள் எங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருப்பதைப் பற்றிப் பேசுவதைக் குறைத்துக்கொண்டு எங்களுக்கு இன்னமும் தெரியாமலே இருக்கும் எங்கள் தொழிற்சங்க அனுபவத்தில் இருந்தோ, ‘பொருளாதார வகைப்பட்ட அனுபவத்தில் இருந்தோ நாங்கள் என்றைக்கும் தெரிந்து கொள்ள முடியாததாக இருக்கும் விஷயத்தைப்பற்றி, அதாவது அரசியல் அறிவு பற்றி, எங்களிடம் அதிகமாகப் பேச வேண்டும். அறிவுஜீவிகளாகிய நீங்கள் இவ்வறிவைப்பெற முடியும்; இதுவரை செய்ததை விட நூறு மடங்காக, ஆயிரம் மடங்காக அவ்வறிவை எங்களிடம் கொணர்வது உங்கள் கடமையாகும். விவாதங்கள், குறுநூல்கள், கட்டுரைகள் (அவை மிக அடிக்கடி சலிப்பூட்டுவதாயுள்ளன. உடைத்துச் சொன்னதற்கு மன்னித்து விடுங்கள்) வடிவத்தில் அதை எங்களுக்குக்கொணர்வது மட்டுமின்றி நமது அரசாங்கமும், நமது ஆளும் வர்க்கங்களும் இந்த வினாடியில் எல்லா வாழ்க்கைத் துறைகளிலும் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பது பற்றிய எடுப்பான அம்பலப்படுத்தல்கள் வடிவத்திலேதான் கொண்டுவர வேண்டும். இக்கடமையைச் செய்வதில் மேலும் ஆர்வம் காட்டுங்கள். உழைக்கும் மக்களின் நடவடிக்கையைத் தட்டியெழுப்புவது பற்றிய பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நினைக்கிறதைவிட எவ்வளவோ துடிப்புடன் செயலாற்றி வருகிறோம். ‘தொட்டறியத்தக்க விளைவுகள் எதையும் அளிக்கிறதாயில்லாத கோரிக்கைகளையுங்கூட பகிரங்கமான தெருப்போர் மூலமாக நாங்கள் ஆதரிக்க முடியும். எங்கள் நடவடிக்கையைத்தட்டியெழுப்பும் தகுதி உங்களுக்கு இல்லை. ஏனெனில், நடவடிக்கை எனும் விஷயந்தான் உங்களிடம் பூஜ்ஜியமாயிருக்கிறது. கனவான்களே, தன்னியல்புக்கு அடிபணிவதைத் குறைத்துக் கொள்ளுங்கள், உங்கள் சொந்த நடவடிக்கையைத் தட்டியெழுப்புவது பற்றி மேலும் சிந்தியுங்கள்

.......தொடரும்

Search