புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேசக்கரம் நீட்டுவோம்!
தானே புயல் ஒரு மினி சுனாமியாக கடலூர் விழுப்புரம் நாகை மாவட்டங்களைத் தாக்கியுள்ளது. மக்கள் மிகப்பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். அரசு அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது.
ஏஅய்சிசிடியு மாநில மாநாட்டுப் பணிகளில் ஈடுபடும் தோழர்கள், தானே புயல் தாக்கியவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் முயற்சிகள் எடுக்கின்றனர்.
10.01.2012 அன்று மாலை பிரிக்கால் தொழிற்சாலையின் இரு வாயில்களிலும் சுமார் 800 தொழிலாளர்களைச் சந்தித்து பணம் துணிமணிகள் போன்ற நிவாரணப் பொருட்கள் வழங்க ஏஅய்சிசிடியு தலைவர்கள் கோரியுள்ளனர். 11.01.2012 அன்று
எல்எம்டபுள்யு தோழர்களைச்
சந்திக்க
உள்ளனர்.
அடுத்த இரண்டு மூன்று தினங்களில் பகுதி மக்களைச் சந்தித்து நிவாரண உதவிகள் நாட உள்ளனர். சென்னையில் டைமண்ட் செயின் சங்கத்தையும், எம்ஆர்எஃப், கார்பரண்டம் தொழிலாளர் சங்கங்களையும் நாட ஏஅய்சிசிடியு திட்டமிட்டுள்ளது.
குமரி நெல்லை நாமக்கல் சேலம் காஞ்சி திருவள்ளூர் தஞ்சை திண்டுக்கல் கரூர் போன்ற பகுதிகளின் தோழர்களும் நிவாரண நிதி திரட்ட உள்ளனர்.