இணையதள
உலகமும்
அறிவுசார்
பொருளாதாரமும்
ஏற்றத்தாழ்வுகளைப்
போக்கிடுமா?
கோவை சந்திரன்
தாமஸ் ஃபிரீட்மன், உலகம் தட்டையானது, அங்கு உச்சங்களும் அதலபாதாளங்களும் இல்லை, சமதளமான ஆட்டக்களத்தில் உள்ளே நுழைய வெளியேற அனைவருக்கும் போதுமான வாய்ப்புக்கள்
உள்ளன என்றார். அவர் அறிவுசார் பொருளாதாரத்தின் எழுச்சி, இணையதள உலகத்தின் பாய்ச்சல் ஆகியவை ஏற்றத்தாழ்வுகளை அகற்றிவிடும் என நம்பிக்கை
தெரிவித்தார். உண்மையில் என்ன நடந்துள்ளது?
இந்திய மக்கள்தொகையில் இன்று 10% பேர்
இணையதள உறவு கொண்டுள்ளனர். 2007 முதல் 2010 வரை, இணையதளத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, ஒவ்வோர் ஆண்டும் 43% உயர்கிறது. 2011 ஆகஸ்ட்டில் மட்டும் உலகெங்கும் சுமார் 100 கோடி
பேர் இணையதளத்தில் ‘தேடல்’ நடத்தியுள்ளனர்.
இளைய தலைமுறையினர், சமூக ஏணியில் மேல்நோக்கி படியேறுபவர்கள் இணையதளத்தை பயன்படுத்துவது பெருமளவுக்கு அதிகரித்துள்ளது. டுனிஷியா, எகிப்து, இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா என
அனைத்து நாடுகளிலும் ஜனநாயகம் நாடுவோரும்
இணையதளத்தைப் பயன்படுத்துகின்றனர். எதையும்
பேச முடியும் எதையும் படிக்க முடியும், சமதளம், சமவாய்ப்பு உள்ளது, ஆகவே ஏற்றத்தாழ்வுகள்
இல்லை என வாதாடப்படுகிறது.
யாருடைய பிடியில், இணையதள உலகம் அறிவுசார் பொருளாதாரம்?
ஆப்பிள், கூகுள், அமேசான், பேஸ்புக், ஈபே, மைக்ரோசாப்ட், இண்டெல், சிஸ்கோ எல்லாமே அமெரிக்க
நிறுவனங்கள். சர்ச் இன்ஜின் ‘தேடல்’ 70% தேடல்களை கூகுள் தன் கட்டுப் பாட்டுக்குள் வைத்துள்ளது. அமெரிக்காவுக்கு வெளியில் இருந்து தேடுவோர்களின் 80% பேர் கூகுளையே பயன்படுத்துகின்றனர். அய் டியூன்கள் மூலம், டிஜிட்டல் இசை பதிவிறக்கங்கள்
சந்தையில் 87%, எம்பி3 பிளேயர் சந்தையில் 70% ஆப்பிளின் கட்டுப்பாட்டில் உள்ளன.
வருவாய், சொத்து விவரங்கள் ஏகபோகம் பற்றிய உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
நிறுவனத்தின்
பெயர்
|
2010ல் வருவாய்
|
2011ல் மதிப்பு
|
ஆப்பிள்
|
76283 மில்லியன்
டாலர்கள்
|
373 பில்லியன்
டாலர்கள்
|
கூகுள்
|
29321 மில்லியன்
டாலர்கள்
|
177 பில்லியன்
டாலர்கள்
|
அமெசான்
|
34204 மில்லியன்
டாலர்கள்
|
108 மில்லியன்
டாலர்கள்
|
ஈபே
|
9186 மில்லியன்
டாலர்கள்
|
42 பில்லியன்
டாலர்கள்
|
பேஸ்புக்
|
77 பில்லியன்
டாலர்கள்
|
2011ல் ஆப்பிள், கூகுள், அமேசான், பேஸ்புக், ஈபே ஆகியவற்றின் சந்தை மதிப்பு மட்டும் 777 பில்லியன் டாலர்கள். 1 பில்லியன் டாலர் என்பது இன்றைய
மதிப்பில் ரூ.5200 கோடி எனக் கணக்கிட்டால், இன்று
இந்த அய்ந்து ஏகபோகங்களின் சந்தை மதிப்பு மட்டும்
ரூ,40,40,400
கோடிகளாகும். உச்சங்கள் உண்டு, அதலபாதாளங்கள் இல்லை என்ற வகையில், இவர்களளவில் உலகம் தட்டையானதுதான்.
முதலாளித்துவம் தனிநபர் சுதந்திரம் பற்றித் தம்பட்டம் அடிக்கும். ஃபியூர்பாக் கிறிஸ்துவத்தின் சாரம்
நூலில், ‘இந்த சகாப்தம், பொருளுக்குப் பதிலாக அதன்
பிம்பத்திற்கும், அசலுக்குப் பதிலாக நகலுக்கும், எதார்த்தத்திற்குப் பதிலாக பிரதிநிதித்துவத்திற்கும், இருத்தலுக்குப் பதிலாக தோற்றத்திற்கும்’, முன்னுரிமை தருவதாக அங்கலாய்த்துக் கொண்டார். அறிவுசார் பொருளாதாரம் மேலும் மேலும் வளரும் இன்றைய உலகிலோ, அதிகம் விற்பனையாகும் புத்தகமே
படிக்கப்படும்; அதிகம் பதிவிறக்கம் செய்யப்படும்
இசையே கேட்கப்படும் என்பதுதான் எதார்த்தம். கருத்துலகம் அறிவுலகம் சந்தைமுன் கைகட்டி நிற்கும்.
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமிக்காத காலம் ஒன்று இருந்தது. அப்போது அமெரிக்காவில், கனடாவில், நியுசிலாந்தில் காணும் இடமெல்லாம்
நிலங்கள் இருந்தன. குடியேறிய மனிதர்கள் பிழைத்திருக்க சொந்தமாய்ச் சாகுபடி செய்தனர். கூலியுழைப்பிற்கு ஆள் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டது. பொறுத்துக் கொள்ளுமா முதலாளித்துவம்? செயற்கையாக நிலத்தின் மதிப்பை பெருமளவிற்கு உயர்த்தியது. கூலியுழைப்பிற்கு, வெகுமக்களுக்கு, எட்டாத தூரத்தில் நிலத்தை விலக்கி வைத்தது. நிலத்துடன் நேரடி
தொடர்பில்லாத நிலப்பிரபுத்துவத்தை ஊக்கப்படுத்தியது.
இப்போது அறிவுசார் பொருளாதாரத்தில் இணையதள உலகத்தில் சில குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட
எல்லைகளுக்குள் மட்டும் ஆகக் கூடுதலான போக்குவரத்தும் வர்த்தகமும் இருக்கும் நிலை உருவாக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. டிஜிட்டல் முதலாளித்துவம்
செயற்கையான பற்றாக்குறையை உருவாக்குவதன்
மூலம் தனது சேவைகளுக்கு கூடுதல் பரிவர்த்தனை
மதிப்பு வருமாறு பார்த்துக் கொள்கிறது.
இணையதளமும் அறிவுசார் பொருளாதாரமும்
வர்க்க சமூகத்திற்கு அப்பாற்பட்டவையல்ல.