சென்னையில் சில போராட்டங்கள்
டிசம்பர் 10 அன்று சென்னையில் கூடங்குளம் அணு உலையை
உடனே மூட வலியுறுத்தி கூடங்குளம் போராட்ட குழுவின் பட்டினிப்
போராட்டம் நடத்தப்பட்டது. மாலெ கட்சி மாநிலக்குழு உறுப்பினர்
தோழர் எ.எஸ்.குமார், முற்போக்கு பெண்கள் கழகத்தின் மாநில தலைவர்
தோழர் தேன்மொழி, அகில இந்திய மாணவர் கழக மாநில தலைவர்
தோழர் பாரதி பங்கேற்று ஒருமைப்பாடு தெரிவித்தனர். தோழர்
எ.எஸ்.குமார் கண்டன உரையாற்றினார்.
டிசம்பர் 3 அன்று சென்னையில் சிறு வணிகத்தில் அன்னிய மூலதன
வருகையை கண்டித்து அகில இந்திய மாணவர் கழகத்தின் ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது. மாலெ கட்சி மாநில செயலாளர் தோழர் பாலசுந்தரம், முற்போக்கு பெண்கள் கழக மாநில தலைவர் தோழர் தேன்மொழி, அகில இந்திய மாணவர் கழகத்தின் மாநில தலைவர் தோழர் பாரதி
உரையாற்றினர். புரட்சிகர இளைஞர் கழக பொறுப்பாளர் தோழர்
எஸ்.சுஜாதா தலைமை ஏற்றார்.
சென்னையில் டிசம்பர் 18 அன்று தோழர் விஎம் நினைவகம்
அம்பத்தூர் குடியிருப்பு பகுதியில் இயங்கி வந்த அலுவலகம் மீண்டும்
திறக்கப்பட்டது. கொடியேற்று நிகழ்சியுடன் டிசம்பர் 18 அறைகூவல்
படித்து விவாதிக்கப்பட்டது. தீப்பொறி சந்தா 1000 சேர்ப்பது பற்றி
விவாதிக்கப்பட்டது. டிசம்பர் 25 வெண்மணி நாள் அன்று அம்பத்தூர்
அலுவலகத்தில் சென்னை மாவட்ட கட்சி ஊழியர் கூட்டம் நடந்தது. கட்சி மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் ராதாகிருஷ்ணன், பாரதி, மாவட்ட செயலாளர் எஸ்.சேகர் உட்பட 30 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உள்ளூர் கமிட்டி மாநாடுகள், புதிய உறுப்பினர் சேர்ப்பு, தீப்பொறி சந்தா சேர்ப்பு பற்றி விவாதிக்கப்பட்டது.