COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, January 1, 2012

4

தலைப்பில்லாமல் ஒரு கட்டுரை

டி.பி.பக்ஷி

கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை 28 தியாகிகள் தினத்தன்று நடந்த ஒரு மாநில ஊழியர் கூட்டத்தில், வாராவாரம் வெளியான தமிழ் எம்எல் அப்டேட்டுடன், எப்போதுமே முறையாக வெளிவராத தீப்பொறி வெளியிடுவதற்கு பதிலாக, தீப்பொறியை மட்டும் கட்சி ஏடாக ஒரே மாத இதழாக வெளியிடுவது என, தமிழ்நாடு வேலைகளின் பொறுப்பாளர் என்ற முறையில் நான் முன்வைத்தேன். ஓரளவு அச்சத்துடனும் ஒரு குறிப்பிட்ட அளவு வேறுபாடுகளுடனும் எனது முன்வைப்பை ஊழியர் கூட்டம் இறுதியில் ஒப்புக்கொண்டது. ஆனால் கடந்த 9 ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட நாளில் தொடர்ந்து தீப்பொறி வெளியாவது நிஜவாழ்க்கையில் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது. தீப்பொறி ஒரு ஜனரஞ்சக இதழாக வளர்ந்துள்ளதோடு, இடதுசாரி வட்டத்திலாவது ஓரளவு அதிகரித்த வாசகர்களைக் கொண்டுள்ளது. இந்த முறை தீப்பொறி, இருவார இதழ் என்ற மற்றுமொரு துணிச்சலான முன்முயற்சியுடன், பத்தாவது ஆண்டில் நுழைகிறது. அதனுடைய முதல் இருவார இதழ் ஜனவரி 1 2012 அன்று 2045 ஆண்டு சந்தாதாரர்களுடன் துவங்கும் என்பது இன்னும் முக்கியமானது.

இந்தத் தனித்துவமான சாதனைக்காக பொதுவாக தமிழ்நாட்டின் மாநிலக் கமிட்டிக்கும், குறிப்பாக தீப்பொறி ஆசிரியர் குழுவுக்கும், நான் எனது நெஞ்சார்ந்த புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால், அனைத்துக்கும் பிறகு, இந்த வெற்றி, தமிழ்நாட்டின் கட்சி வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை வளர்ந்து வருவதைக் காட்டுகிறது.

இருவார இதழாகும் தீப்பொறியின் முதல் வெளியீட்டுக்கு நான் எழுத வேண்டும் என தீப்பொறி ஆசிரியர், திடீரென கேட்டுக் கொண்டார். வெளிப் படையாகச் சொல்ல வேண்டுமானால், தமிழ்நாட்டின் யதார்த்தத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில் இந்தப் பணியை மேற்கொள்ள நான் தயாராகவே இல்லை. ஆயினும் நான் எழுதுகிறேன். நான் எழுதுவது தமிழ்நாட்டுடன் கொண்டுள்ள உணர்வுமயமான பிடிப்பின் அடிப்படையில் எனது இதயம் சொல்வது தானே தவிர, இயங்கியல் பகுப்பாய்வுடன் அறிவு சொல்வது அல்ல. ஒரு குறிப்பிட்ட காலத்தின் குறுகிய அனுபவங்கள் பற்றிய அனுபவவாத கூற்றுக்களாக அது இருக்க எல்லா வாய்ப்பும் இருக்கிறது.

தமிழ்நாட்டில் சில வகைமாதிரி முரண்களை நாம் எதிர்கொள்கிறோம். தொழிலாளர் வர்க்கம் மத்தியில் பல்வேறு விதமான பிரிவினரிடையே நமக்கு கணிசமான வெகுமக்கள் செல்வாக்கு உள்ளது. ஆனால் அது அரசியல் போராட்டத்தில், எந்த தரத்திலும் பொருளுள்ள விதத்தில் பிரதிபலிக்கவே இல்லை. தொழிலாளர்களை அரசியல்படுத்துவது அல்லது தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தில் அரசியல் பரிமாணத்தை சேர்ப்பது ஆகியவை பற்றி நாம் அக்கறை காட்டவில்லை என்று சொல்ல முடியாது. தொழிற்சங்க நடவ டிக்கைகளுடன் இணைத்து பகுதி மட்ட வேலைகளையும் நாம் துவங்கிவிட்டோம். அப்படியானால் எங்கே தவறு நடந்திருக்கிறது?தற்போதைய கட்டம் இப்படித்தான் இருக்கும் என்று எடுத்துக்கொள்வதா?

தமிழ்நாட்டில் நகர்மயமாக்கம் அதிகரித்து வருகிற பின்னணியில்(நம்பத்தகுந்த ஆய்வின்படி 48% பேர் நகர்ப்புறத்தினர்), தொழிலாளர் வர்க்கம் மத்தியிலான நமது மேலோங்கிய நடைமுறை இயல்பானதே. புரிந்துகொள்ளக் கூடியதே. ஆயினும், சமீபகாலங்களில், ஒரு துடிப்பான கிராமப்புற போராட்ட பகுதியை வளர்த்தெடுப்பதில் நாம் தோல்வி காண்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? வெறும் புறநிலைக் காரணிகள் கொண்டு இதை விளக்கிவிட முடியுமா? கிராமப்புற தமிழ்நாட்டில் உண்மையில் நமக்கு இடமே இல்லையா? ஆளும் வர்க்கம் முன்செலுத்துகிற கிராமப்புற சீர்திருத்தம் என்ற இயக்கப்போக்கில், மிகச்சரியாக தலையிடுவதில் நாம் காணும் தோல்வியா? அல்லது பொருளாதாரவாதம் அல்லது சீர்திருத்தவாதம் அடிப்படையிலான நமது பிழையான பதில்வினையால் இது நேர்கிறதா? நமது கிராமப்புற இயக்கத்தில் வெகுமக்கள் கிளர்ச்சி என்பதில் நமக்கு போதாமை உள்ளது என்றால் அதன் வேர் எங்குள்ளது? கிராமப்புற வறியவர் மத்தியில் இருந்து, சிறு விவசாயிகள் மத்தியில் இருந்து கிராமப்புற செயல்வீரர்களை வளர்த்தெடுக்க கடுமையான பணி என்ற பொருளில் நமது நடைமுறை நமக்கு திருப்தி தருகிறதா? விவசாய தொழிலாளர்கள் மற்றும் பரந்துபட்ட கிராமப்புற வறியவர்களுடன் பின்னிப்பிணைந்துள்ள விவசாயம் சாராத கிராமப்புற தொழிலாளர்கள் போன்ற புதிதாக எழுந்துவருகிற சமூக சக்திகள் நோக்கி நமது கிராமப்புற வேலை விரிவடைகிறதா?

தமிழ்நாடு கட்சியில் தற்போதுள்ள போக்குகளின் சமநிலை தனித்தன்மையுடன் ஸ்திரத்தன்மை நோக்கியே உள்ளது என்பதில் அய்யமில்லை. ஆனால் அது முழுமுற்றூடானதாக இருக்க முடியாது. ஸ்திர மின்மை நோக்கிய உள்ளாற்றல் கொண்ட கூறுகள் பற்றி நாம் விழிப்புடன் இருக்கிறோமா? விழிப்புடன் இருக்கிறோம் என்றால், அதை தனிநபர் பிரச்சனை என்றல்லாமல், அது போன்ற போக்குகளின் புறநிலை ரீதியான விளைநிலத்துக்கு எதிராக வருமுன் காக்கும் உணர்வுடன் போராடுகிறோமா?நிகழ்காலத்தை கடந்த காலம் ஆட்டிப்படைக்க அனுமதிக்க மாட்டோம் என் பதில் நாம் முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளோமா? நிகழ்காலத்தில் இருந்து எதிர்காலத்தைக் கைப்பற்ற உறுதியுடன் உள்ளோமா?

ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், வாய்ச்சவடால் மற்றும் தனிமைப்படுதலுக்கு எதிராக நமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, மாநில அளவிலான அரசியல் தலையீடு என்ற பெயரில் மேலிருந்து சம்பிரதாய, அடையாள முன்முயற்சிகளுக்கு பதிலாக, குறிப்பாக தொழிலாளர் வர்க்கம் மற்றும் கிராமப்புற வறியவர் மத்தியில் கடுமையான வெகுமக்கள் வேலைக்கு அழுத்தம் தருவது என்றும் பிராந்திய மட்ட அல்லது துறைமட்ட அரசியல் முன்முயற்சிகள் மற்றும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அளவிலான நிகழ்ச்சிகளை இணைப்பது என்றும் முடிவு செய்தோம். ஆனால், அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட வளர்ச்சியின்போது, குறிப்பாக, வேர்க்கால் மட்டங்களில் வெகுமக்கள் வேலைகளில் ஓரளவு வெற்றி கண்ட பிறகு, நமது அழுத்தத்தை மறுகட்டமைப்பு செய்ய முடிந்ததா? நமது நடைமுறையின் தற்போதைய கட்டம், நிலவுகிற மாநில அரசியல் இயக்கப் போக்கில் மேலிருந்து கூடுதல் அரசியல் முன்முயற்சியை கோருகிறதா?

இந்தக் கேள்விகளுக்கு தமிழகக் கட்சியிடம் ஒப்பீட்டுரீதியில் விடைகள் இருக்கும். அவையே கட்சியின் தற்போதைய நடைமுறையின் இயங்காற்றலாகவும் இருக்கும். ஆனால், அறிவு வளர்வதன் இயங்கியல் இயக்கப்போக்கின்படி, இந்த விடைகளே இறுதிச் சொற்களாக இருக்க முடியாது. நடைமுறையில் எழுந்த கேள்விகளுக்கு பதில்வினையாக உருவான கருத்துக்களை, இயங்கியல்ரீதியாக மறுதலிக்கும் இயக்கப்போக்கின் ஊடாக, செழுமைப்படுத்துவது நோக்கி, அடுத்த கட்ட நடைமுறை மூலம் பரிசீலிக்கப்பட வேண்டும்.

இப்போது, தீப்பொறி ஒரு தொடர்ச்சியான கட்சி ஏடாக, கருத்துப் பரிமாற்றம் மற்றும் நடைமுறையை பரிசீலிப்பதன் மூலம், இந்த செழுமைப்படுத்தும் இயக்கப்போக்கில் கருவியாக இருக்கலாம். ஆனால், கருத்தியல்ரீதியான கல்வி, அரசியல் விமர்சனம், நமது நடைமுறையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய பரிசீலனை ஆகியவை பற்றிய உள்ளடக்கத்தில் ஒரு புதிய சமநிலையை உருவாக்குவதன் மூலம், அது இந்தப் பாத்திரத்தை பொருளுள்ள விதத்தில் முன் செலுத்த முடியும். பத்திரிகையின் களச் செய்திப் பிரிவு கூட விவரங்களை தொகுப்பது என்ற எல்லைகளைத் தாண்டி, விவரங்களை கட்டுப்படுத்தும் சில படிப்பினைகள் மற்றும் விதிகளை கண்டறிவது நோக்கிச் செல்ல வேண்டும். இதற்கு பகுப்பாய்வு மற்றும் ஒன்றிணைப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் தேவை.

சிறு எண்ணிக்கையிலான எழுத்தாளர்கள் மற்றும் குறைந்த அளவிலான கருத்துக்கள் ஆகியவை தீப்பொறியில் மிகவும் பளிச்செனத் தெரிகிற இடை வெளிகள். இருவார இதழாக வரவுள்ள தீப்பொறி இந்த இடைவெளியை கவனிக்காமல் விடக்கூடாது. இந்த புதிய முயற்சி பண்புரீதியான முன்னோக்கிய பாய்ச்சலைக் கோருகிறது. இன்னும் கூடுதலான புதுமையான பார்வையும் அத்துடன் இன்னும் பெரிய எழுத்தாளர்கள் குழுவை உருவாக்குவது இதற்கு திறவுகோல் தன்மை வாய்ந்தது.

தமிழ்நாடு கட்சி, தீப்பொறியை இருவார இதழாக தொழில்நுட்ப பொருளில் வெளியிடுவது மட்டுமின்றி, பண்புரீதியாகவும் புதிய உயரங்களை எட்டுவதன் மூலம், சூழலுக்கு ஏற்ப எழுவதற்கான ஏராளமான உள்ளாற்றல் கொண்டது என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது.

மூன்றுமந்திரங்களைஉயர்த்திப் பிடிப்போம். பகுப்பாய்வு மற்றும் ஒன்றிணைப்பு என்ற வழிமுறையுடன் முன்னோக்கிய பார்வை மற்றும் புதுமையான முயற்சி

எழுதுகோலை ஆயுதமாகக் கொண்ட ஒரு புதிய எழுத்தாளர் குழுவை விடாப்பிடியாக முன்னேற்றுவது

செயலூக்கமிக்க ஈடுபாடு மற்றும் கருத்துக்களுடன் வாசகர்களை எழுச்சியுறச் செய்வது

 

 

Search