COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, January 1, 2012

9


இருளர் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை கண்டித்து
விழுப்புரம் மாவட்ட்ம், திருகோவிலூர் டிமண்டபம் காவல் நிலையத்தில் இருளர் பெண்கள் மீது நடந்த பாலியல் கொடுமையை கண்டித்து சென்னையில் டிசம்பர் 3 அன்று ஆர்பாட்டமும், சுவரொட்டி இயக்கமும் நடத்தப்பட்டது.
விழுப்புரத்தில் டிசம்பர் 5 அன்று கண்டன ஆர்ப்பாட்ட்ம் நடத்தப்பட்டது. மாலெ கட்சி மாநில செயலாளர் தோழர் பாலசுந்தரம், மாவட்ட செயலாளர் தோழர் வெங்கடேசன், பெண்கள் கழக மாவட்ட தலைவர்கள் தோழர் செண்பகவள்ளி, சுசீலா கண்டன உரையாற்றினர். டிசம்பர் 7 அன்று குமரி, கோளச்சலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் மோரிஸ்டெல்ல, சுசீலா கண்டன உரையாற்றினார்கள்.
டிசம்பர் 12 அன்று புதுக்கோட்டை, கரம்பக்கிடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கடிசி மாவட்ட செயலாளர் தோழர் ஆசைதம்பி கண்டன உரையாற்றினார்.
டிசம்பர் 20 அன்று குமாரபாளையத்தில் பெண்கள் கழக மாவட்ட தலைவர் தோழர் ஜாக்கிலின் மேரி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மானில தலைவர் தோழர் தேன்மொழி கண்டன உரையாற்றினார்.

Search