புதுக்கோட்டை
மாலெ கட்சியின் நான்காவது மாவட்ட மாநாடு
ஆசைத்தம்பி
புதுக்கோட்டை மாலெ கட்சியின் நான்காவது மாவட்ட மாநாடு டிசம்பர் 31 அன்று கீழ்வெண்மணி தியாகிகள் அரங்கில் நடைபெற்றது.
45 கிளைகளில் 214 பெண்கள் உட்பட 616 கட்சி உறுப்பினர்கள் அமைப்பாக்கப்பட்டுள்ளனர். மாநாட்டில் 104 தீப்பொறி சந்தாக்கள் தரப்பட்டன. 50 ஒருமைப்பாடு
இதழ்கள் விநியோகிக்கப்படுகின்றன.
கட்சியின் மூத்த தோழர், தோழர் மூக்கையன் கட்சிக் கொடி ஏற்றி வைத்தார். தோழர்கள் ராசாங்கம், முருகையன், சரோஜா, வனிதா, திருமேனி ஆகியோர் கொண்ட தலைமைக் குழு மாநாட்டை வழிநடத்தியது. 20 பெண்கள்
உட்பட
75 பிரதிநிதிகள்
மாநாட்டில் கலந்துகொண்டனர்.
கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்.
தோழர் ஆசைத்தம்பி மாநாட்டு நகல் அறிக்கையை முன்வைத்தார். அறிக்கையின் மீதான விவாதங்களுக்குப் பிறகு அறிக்கை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
4 பெண்கள் உட்பட 27 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. தோழர் ஆசைத்தம்பி மாவட்டச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அடுத்த மாவட்ட மாநாட்டுக்குள் கட்சி உறுப்பினர் எண்ணிக்கையை 1000 என உயர்த்துவது, வெகுமக்கள் உறுப்பினர் எண்ணிக் கையை 50000 என உயர்த்துவது, தீப்பொறி சந்தாதாரர் எண்ணிக்கையை 500 என உயர்த்துவது, நிலம், வீட்டுமனை பிரச்சனைகளில் கட்சி முன்முயற்சி எடுத்து போராட்டங்கள் கட்டமைப்பது, மாவட்டத்துக்கு சொந்த அலுவலகம் உருவாக்குவது, உள்ளூர் கமிட்டிகளை உறுதிப்படுத்துவது, கந்தர்வகோட்டையை விவசாயப் போராட்ட பகுதியாக மாற்றுவது என இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன.
மாநாட்டு பார்வையாளரான மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.இளங்கோவன் நிறைவுரையாற்றினார்.
விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட வேண்டும், வேலை உறுதித் திட்டத்தில் 200 நாட்கள் வேலை, ரூ.300 கூலி, குடும்பத்தில் இருவருக்கு வேலை வேண்டும், கூடன்குளம் அணு உலை மூடப்பட வேண்டும், கால்ஸ் சாராய ஆலை அகற்றப்பட வேண்டும், பரமக்குடி காவல்துறை தாக்குதலில் முறையான விசாரணை வேண்டும், மாவட்டத்தில் உள்ள தரிசு நிலம், அரசு புறம்போக்கு நிலம், கோயில் மற்றும் மட நிலங்கள் மற்றும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை அடையாளங்கண்டு வறிய மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பிரச்சனைகள் மீது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.