முல்லைப் பெரியாறு
முல்லைப்
பெரியாறு
அணைப் பிரச்சனை
மீண்டும்
எழுந்துள்ளது.
அணைப் பாதுகாப்பு
தொடர்பாக
இப்போது
எழுந்துள்ள
பிரச்சனையால்
இரு தரப்பிலும்
பதட்டமும்
மோதல் சூழலும்
உருவாகியுள்ளது.
இந்த பதட்டமான
சூழலை பயன்படுத்திக்
கொண்டு,
இரு மாநிலங்களிலும்
உள்ள ஏழை, எளிய, சாமானிய
மக்களிடம்
பிளவுகளையும்
மோதல்களையும்
திட்டமிட்டு
உருவாக்கும்
சக்திகளை
மாலெ கட்சி வன்மையாகக்
கண்டிக்கிறது.
தமிழ்நாட்டின்
5 மாவட்டங்களின்
விவசாயம்
கேள்விக்குறியாகும்
நிலையால்,
நீண்டகால
விவசாய
நெருக்கடியால்,
பாதிக்கப்பட்டுள்ள
விவசாய
சமூகம்
பல்லாயிரக்கணக்கில்
அணிதிரளுகிறது.
தமிழ்நாட்டின்
நீர்உரிமை
பாதிக்கப்படாமலும்
கேரள மக்களின்
அச்சத்தைப்
போக்கும்
விதத்திலும்
இணக்கமான
வழிவகைகளை
மேற்கொள்ளாமல்
வேடிக்கைப்
பார்த்துக்
கொண்டிருக்கும்
மன்மோகன்
ஆட்சியை
மாலெ கட்சி வன்மையாகக்
கண்டிக்கிறது.
தமிழ்நாட்டின்
நீர் உரிமையை
உச்சநீதிமன்றம்
ஏற்கனவே
உறுதி செய்துள்ளது.
அணைப்பாதுகாப்பு
உள்ளிட்ட
பிரச்சனைகளையும்
ஆராய்ந்து
வருகிறது.
இருதரப்பினரும்
பாதிக்கப்படாமல்
தீர்வு
காண்பதற்குரிய
சூழ்நிலைகளை
உச்சநீதிமன்றம்
விரைந்து
உருவாக்க
வேண்டும்
என மாலெ கட்சி
வலியுறுத்துகிறது.
மத்திய
அரசாங்கம்
விரைந்து
செயல்பட்டு
பிரச்சனைக்கு
தீர்வு
காண முயற்சி
செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில்
உள்ள கேரள மக்களுக்கும்
கேரளாவில்
உள்ள தமிழக மக்களுக்கும்
இரு மாநில அரசுகளும்
உரிய பாதுகாப்பு
வழங்க வேண்டுமென
மாலெ கட்சி வலியுறுத்துகிறது.
நீண்டகால
நல்லுறவைப்
பேணி வரும் தமிழக, கேரள மக்கள் எந்தவிதத்
தூண்டுதலுக்கும்
ஆளாகாமல்
அமைதியும்
பொறுமையும்
காக்க வேண்டும்
என மாலெ கட்சி
வேண்டுகோள்
விடுக்கிறது.
மாநிலக்
கமிட்டி,
தமிழ்நாடு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை