COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, January 28, 2012

2-10

களம்

ஏஅய்சிசிடியு செய்திகள்

நெல்லை: பீடி தொழிலாளர் பணி நிலைமைகள் சட்டம் பிரிவு 32அய் அமல்படுத்தாத அரசு தொழிலாளர் துறை அலட்சியத்தை கண்டித்து, ஏஅய்சிசிடியு தொடர் இயக்கம் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜனவரி 6 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஆலங்குளத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கமிட்டி உறுப்பினர் தோழர் கணேசன் தலைமை தாங்கினார். கட்சி மாவட்ட செயலாளர் தோழர் சங்கரபாண்டியன் சிறப்புரையாற்றினார்.

பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் கழக மாநில தலைவர் தோழர் தேன்மொழி தலைமை தாங்கினார். ஏஅய்சிசிடியு மாநில துணைத்தலைவர் தோழர் ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் டேனியல் கண்டன உரையாற்றினார்கள்.

நாங்குநேரி அருகில் உள்ள சிறுகுறுங்குடி நகர பஞ்சாயத்து மக்கள், டிவிஎஸ் முதலாளியால் பல விதங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் புரட்சிகர இளைஞர் கழகத்தில் இணைந்து போராட முன்வந்துள்ளனர்.

கோவை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கிகளில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாய் அத்து கூலிகளாக உள்ளனர். இவர்களுக்கு சங்க தேர்தலில் வாக்குரிமைக்காக ஏஅய்சிசிடியு போராடியது. தொடர்ந்து ஏஅய்சிசிடியு தலைமையில் பல மண்டலங்களில் இந்த தொழிலாளர்கள் போராடுகிறார்கள்.

பணிக்கொடை, பிஎஃப், பென்சன் இதுவரை யாரும் பெறவில்லை. காலமுறை ஊதியம், ஓய்வூதியம், கவுரவமான ஊதியம் கேட்டு கோவை மண்டல ஆணையரகம் அருகில் ஜனவரி 6 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. காவல்துறை வழக்கம் போல் அனுமதி மறுத்தது. பின் வேறுவழின்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கட்சி மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் தாமோதரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு மாநில பொதுச் செயலாளர் தோழர் என்.கே நடராஜன், நுகர்பொருள் வாணிப கழக கடை மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் தோழர் கே.கோவிந்தராஜ், கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாவட்ட தலைவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து பின்னர் அன்று இரவு விடுதலை செய்தனர்.

சென்னை: சென்னையில் தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் இரண்டாவது மாவட்ட மாநாடு ஜனவரி 8 அன்று நடந்தது. மாவட்ட தலைவர் தோழர் முனுசாமி தலைமை தாங்கினார். ஏஅய்சிசிடியு மாநில செயலாளர்கள் தோழர்கள் எஸ்.ஜவகர், கே.பழனிவேல், மாலெ கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.சேகர், கட்டுமான தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் தோழர் சொ.இரணியப்பன், மாநிலப் பொருளாளர் தோழர் ஆர்.குப்பாபாய், மாநில நிர்வாகிகள் தோழர்கள் எஸ் ராஜா, .சேகர் உழைப்போர் உரிமை இயக்க மாவட்டத் தலைவர் தோழர் ஆர்.மோகன் மற்றும் முன்னணிகள் பங்கேற்றனர். ஏஅய்சிசிடியு மாநில மாநாடு, பிப்ரவரி 28 பொதுவேலை நிறுத்தம், மாலெ கட்சியின் கோவை பேரணி ஆகியவற்றில் பெருந்திரள் கட்டுமான தொழிலாளர் பங்கேற்பதை உறுதி செய்ய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் மாவட்டத் தலைவராக தோழர் ஜி.முனுசாமி, செயலாளராக தோழர் .சேகர் உட்பட 13 பேர் மாவட்ட நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தஞ்சை: ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்க தஞ்சை மாவட்ட மாநாடு ஜனவரி 8 அன்று நடைபெற்றது. கட்டுமான தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர்கள் தோழர்கள் தேசிகன், முருகையன், மாலெ கட்சி மாநிலக்குழு உறுப் பினர் தோழர் எஸ்.இளங்கோவன் ஆகியோர் மாநாட்டில் உரையாற்றினர்.

தோழர் ராஜன் முன்வைத்த அறிக்கை மீது விவாதங்கள் நடத்தப்பட்டு அறிக்கை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 11 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. தோழர் ராஜன் மாவட்ட தலைவராக, தோழர் மணி பாரதி மாவட்ட செயலாளராக, தோழர் மாலதி மாவட்ட பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தொகுப்பு: எஸ்.சேகர்

Search