‘அது என் குற்றம்’ என்ற நான்கு நிமிடங்கள் மட்டுமே ஓடுகிற ஆங்கில குறும்படம் ஒன்று சமீபத்தில் இணையத்தில் லட்சக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டது. கல்கி என்ற இந்தித் திரைப்பட நடிகரும் தொலைக்காட்சித் தொகுப்பாளரும் இறுதிக் காட்சியில் ஒரு போலீஸ்காரரும் இடையில் சில கைகளும் கதாபாத்திரங்கள்.
பாலியல் வன்முறைக்கு காரணம் பாதிக்கப்பட்ட பெண்தான் என்று சொல்லப்படுவதைச் சாடும் இந்த குறும்படம், ‘பாலியல் வன்முறையால் சிறுமைப்படுத்தப்பட்டாயா? மேலும் சிறுமைப்படுத்தப்பட வேண்டுமா? காவல் நிலையத்துக்குச் செல்’. ‘பாலியல் வன்முறை.... அது என் குற்றம்’ என்று பாதிக்கப்பட்ட பெண் சொல்வதாக முடிகிறது.
குட்டைப் பாவாடை, செல்போன், நண்பர்களுடன் வெளியில் செல்வது ஆகியவற்றோடு பெண்கள் இருப்பதே பாலியல் வன்முறைக்கு காரணம் என்று எள்ளி நகையாடுகிறது. பாலியல் வன்முறை பற்றிய ஆணாதிக்கப் பார்வை மீது, மிகவும் குறிப்பாக காவல் துறையினர் மத்தியில் நிலவும் ஆணாதிக்கப் பார்வை மீது சாட்டை வீசுகிறது.
எதிர்ப்புக்கள் வலுத்துக்கொண்டே இருக்கும்போதும் ஆணாதிக்கக் கருத்துக்கள் ஆட்டம் போடப் பார்க்கின்றன. டில்லியில் சமீபத்தில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு புகார் செய்ய காவல் நிலையத்துக்குச் சென்ற பெண்ணிடம், எப்படி பாலியல் வன்முறை செய்தார்கள், செய்து காட்டு என்று ஒரு காவல்துறை அதிகாரி கேட்டார். காவல்துறை அதிகாரி இப்படி கேட்டதற்கு நான் பதில் சொல்ல முடியாது டில்லி காவல்துறையிடமும் லெப்டினன்ட் கவர்னரிடமும் கேளுங்கள் என்று ஷீலா திக்ஷித் சொல்லிவிட்டார்.
என் மகள் இப்படி நடந்து கொண்டிருந்தால் அவளை உயிருடன் எரித்துக் கொன்று போட்டிருப்பேன் என்று டில்லி பாலியல் வன்முறை குற்றவாளிகளுக்கு வாதாடி தோற்றுப்போன வழக்கறிஞர் சொன்னார். இந்தக் கருத்துக்கள் கடுமையான எதிர்ப்பையும் சந்தித்தன. இவர்களுக்கு இப்படி கொன்றுபோடும் அதிகாரத்தை யார் தந்தது?
பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்கு பெண்களே காரணம் என்ற கருத்துக்கள் வலம் வரும் போது, பெண்கள் மீது வேறு குற்றங்கள் நடந்தால் அவற்றுக்கும் பெண்களே காரணம் என்று சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்று சொல்கிறது.
1995ல், காங்கிரசைச் சேர்ந்த நயினா சாஹ்னி காங்கிரசைச் சேர்ந்த அவரது கணவரால் சுட்டுக்கொல்லப்பட்டு பிறகு வெட்டி துண்டுகளாக்கப்பட்டு பிறகு அவர் கணவர் நடத்தி வந்த உணவு விடுதியின் தந்தூர் அடுப்பில் எரிக்கப்பட்டார். விடுதியின் மேலாளர், சர்மாவுக்கு உதவி செய்தார்.
பாதிக்கப்பட்டவர், குற்றவாளி, உடந்தையாக இருந்தவர் அனைவருமே காங்கிரசைச் சேர்ந்தவர்கள். தந்தூர் கொலை வழக்கு என்று அழைக்கப்படுகிற இந்த வழக்கில் குற்றவாளியான சுஷில் சர்மாவுக்கு விசாரணை நீதிமன்றமும் டில்லி உயர்நீதிமன்றமும் வழங்கிய மரண தண்டனையை குறைத்து தீர்ப்பு வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். குற்றவாளி தனது எஞ்சியுள்ள வாழ்நாளை சிறையில் கழிக்க வேண்டும். தண்டனை குறைப்பு பெரிய பிரச்சனையில்லை. அதற்காக தீர்ப்பில் சொல்லப்பட்ட தர்க்கங்கள் பிரச்சனைக்குரியவை.
குற்றம் மிருகத்தனமானதுதான் என்றாலும் மிருகத்தனம் மட்டுமே மரண தண்டனை வழங்க காரணமாக அமைந்துவிட முடியாது என்றும் குற்றம் செய்யத் தூண்டிய சூழலை கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் தீர்ப்பு சொல்கிறது.
தன் மனைவி மீது சர்மா ஆழ்ந்த காதல் கொண்டிருந்தார் என்றும் தன் மனைவி தனக்கு மட்டும் சொந்தமானவராக இருக்க வேண்டும் அவர் விரும்பியதாகவும் அவர் மனைவி வேறொருவருடன் தொடர்பு கொண்டுள்ளதாக சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது என்றும் அதனால் கோபத்தில் கொன்றுவிட்டார் என்றும் இதற்கு மரண தண்டனை தரத் தேவையில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது. தீர்ப்பு சொன்ன நீதிபதி ஒரு பெண்.
நயினா சாஹ்னி சுஷில் சர்மாவின் சொத்து, அந்தத் தனிச்சொத்துரிமையை பாதுகாக்க சுஷில் சர்மா சொத்தையே அழித்து, தனிச்சொத்துரிமையை நிலைநாட்டிவிட்டார். இதற்காக மரண தண்டனையா என்று உச்சநீதிமன்றம் கேட்கிறது. தீர்ப்புப்படி நயினா சாஹ்னி தனது சந்தேகத்துக்குரிய நடத்தையால் சுஷீல் சர்மாவை குற்றம் செய்யத் தூண்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் நடத்தை பற்றி யாரும் கேள்வி எழுப்பக்கூடாது என்று மதுரா வழக்குக்குப் பின் எழுந்த போராட்டங்களிலும் நீதிபதி வர்மா பரிந்துரைகள் வரை வலியுறுத்தப்பட்டாலும், காவல் துறையினரோ, வழக்கறிஞரோ, நீதிபதியோ, பாதிக்கப்பட்ட பெண்ணின் நடத்தை பற்றி கேள்வி எழுப்புவார்கள் என்றால், அவர்கள் மீது கடுமையான நட வடிக்கைகள் பாயும் வரை, அவர்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்படும் வரை, தண்டனை பற்றிய அச்சத்தை அவர்கள் மத்தியில் உருவாக்கும் வரை இதுபோன்ற தீர்ப்புக்கள் தொடரும்.
குற்றம் செய்தவருக்கு மட்டுமின்றி அதை செய்யத் தூண்டியவருக்கும், துணை போனவ ருக்கும் தண்டனை உண்டு. பெண்கள் மீதான குற்றங்களில் அதிகாரத்தில் இருப்பவர்களின் இதுபோன்ற அலட்சியக் கூற்றுக்கள், ஆணாதிக்கக் கருத்துக்களே முக்கிய பங்காற்றுகின்றன. தண்டனை பற்றிய அச்சத்தை அவை போக்கி விடுகின்றன. பெண்கள் மீதான குற்றங்களை தூண்டுபவை உண்மையில் அதிகாரத்தில் இருப்பவர்களின் கூற்றுக்களே.
வினோதினி மீது அமிலம் வீசிய கயவனும் வினோதினி மீது இருந்த ஆழ்ந்த காதலில்தான், அந்தக் காதலை வினோதினி ஏற்றுக்கொள்ளாததால்தான் அப்படிச் செய்ததாகச் சொன்னான். இன்று வினோதினியின் தாய் தற்கொலை செய்து கொண்டுவிட்டார். வினோதினி வழக்கிலேயே குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுவிட்டது. வினோதினியின் தாய் தற்கொலை செய்துகொண்டதற்கும் காரணமான அந்தக் குற்றவாளிக்கு இன்னொரு முறை யாரும் தண்டனை தரப்போவதில்லை.
முதல் குற்றம் தடுக்கப்பட்டிருந்தால் இரண்டாவது குற்றம் நிகழ்ந்திருக்காது. தடுக்காதது அரசின் குற்றம். அரசுக்கு என்ன தண்டனை? (குடும்பப் பெருமை பேசுபவர்கள் கவனத்துக்கு: பெண் வாழ்க்கை, குடும்பத்தை மய்யமாகக் கொண்டது என்ற கருத்தும் சேர்ந்துதான் வினோதினியின் தாயை தற்கொலைக்குத் தள்ளியுள்ளது).
டில்லி பாலியல் வன்முறைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது தங்கள் போராட்டத்துக்கு நியாயம் வழங்கியுள்ளதாக போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பிரிவினர் கருதுகின்றனர். கடுமையான தண்டனை தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியவர்களைப் பொறுத்தவரை, மரண தண்டனை தீர்வாகாது என்றாலும், தண்டனை தரப்பட்டது நாடு தழுவிய போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியே. அந்த தண்டனை உறுதிசெய்யப்பட காத்திருக்கிறது.
இதுபோன்ற கடுமையான தண்டனை ஷோபியன் பள்ளத்தாக்கில் காஷ்மீரப் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகளுக்கு, மணிப்பூரில் தங்ஜம் மனோரமாவை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி படுகொலை செய்தவர்களுக்கு இன்னும் ஏன் தரப்படவில்லை என்ற கேள்வி வலுவாக எழுப்பப்படுகிறது.
இந்தச் சூழலில் நாட்டை உலுக்கிய தந்தூர் வழக்கில் குற்றவாளிக்கு ஆதரவாக வெளியாகியுள்ள தீர்ப்பும் அதற்காக சொல்லப்பட்டுள்ள தர்க்கங்களும் அடுத்தடுத்த ‘அதிகாரக்’ குற்றவாளிகளுக்கு அச்சம் தருவதற்கு மாறாக, தெம்பையும் துணிச்சலையுமே தரும். நம்மைப் பாதுகாக்க நாடே இருக்கிறது என்ற அவர்கள் நம்பிக்கைக்கு வலுவூட்டும்.
பாலியல் வன்முறைக் குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ‘அதிகாரக்’ குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நீதிபதி வர்மா ஆணைய பரிந்துரைகள் அமல் படுத்தப்பட வேண்டும் என்பது இன்றைய சூழலில் இன்னும் அவசியமாகிறது.