COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, October 15, 2013

புதிய அடிப்படையில் திருபெரும்புதூர் வேலைகள்

•    ஆகஸ்ட் 9 அன்று “கொள்ளையர்களை விரட்டுவோம்” கருத்தரங்கம் நடத்த திட்ட மிடப்பட்டது. புரட்சிகர இளைஞர் கழக அலுவலகத்தில் வெவ்வேறு தொழிற் சாலைத் தோழர்கள் வாராவாரம் கூடி, ஓர் ஆய்வு நடத்த முடிவு செய்தனர். 400 பேர் மத்தியில் நடந்த ஆய்வு, இளம் உழைப்பு சுரண்டல் மீது வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஆய்வு முடிவுகள் கருத்தரங்கில் வெளியிடப்பட்டன.

•    ஆகஸ்ட் 11 ஏசியன் பெயிண்ட்ஸ் தொழிலாளர்கள் சிஅய்டியு இணைப்பிலிருந்து வெளியேறி ஏஅய்சிசிடியுவிற்கு வந்தனர். வேலை நிறுத்த அறிவிப்பு தந்து, தீவிரமான போராட்டத் தயாரிப்புக்கள் மேற்கொண்டு, 75க்கும் மேலான ஒழுங்கு நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.

•    ஆகஸ்ட் 9 கருத்தரங்கில், டென்னெகோ, ஏசியன் பெயிண்ட்ஸ், சிஅண்ட்எஃப், சிஅண்ட்எச், ஹ÷ண்டாய் சேர்ந்த 70 இளம் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

•    கருத்தரங்கம் தந்த உற்சாகத்தில் நம்பிக்கையில், சிஅண்ட்எஃப் தொழிலாளர்கள் புரட்சிகர இளைஞர் கழக வழிகாட்டுதலுடன் ஒரு நாள் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்தனர். பயிற்சியாளர் நிரந்தரம், ஒப்பந்தத் தொழிலாளர் ஊதிய உயர்வு என்ற கோரிக்கை களை நிரந்தரத் தொழிலாளர்கள் எழுப்பி, ஒப்பந்தத் தொழிலாளர் நாள் கூலியில் ரூ.33 உயர்வு பெற்றனர்.

•    24.08.2013 அன்று திருபெரும்புதூரில் ஏஅய்சிசிடியு சங்கக் கொடி ஏசியன் பெயிண்ட்சில் ஏற்றப்பட்டது.

•    ஏசியன் பெயிண்ட்சின் தோழர் ராஜேஷ், தோழர் செந்தில், தோழர் ராஜகுரு, தோழர்கள் பாரதி, பழனிவேல் மற்றும் சில முன்னணிகள் கூடி, செப்டம்பர் 27 பகத்சிங் பிறந்த நாளை உறுதி ஏற்பு நாளாக அனுசரிக்க முடிவு செய்தனர்.

•    தொழிற்சங்க அங்கீகாரச் சட்டத் திருத்தம், பயிற்சியாளர் நலன் காக்கும் திருத்த மசோதா 47/2008 நிறைவேற்றுதல், குறைந்த பட்சக் கூலி மாதம் ரூ.15000, சம வேலைக்குச் சம ஊதியம், ஒப்பந்த முறை ஒழிப்பு  ஆகியவற்றுக்காகப் போராட உறுதியேற்பு நிகழ்ச்சி என முடிவானது.

•    டென்னெகோ, மியுன்வா, சிஅண்ட்எஃப், பிரைட் ஆட்டோபிளாஸ்ட் தோழர்கள் மற்றும் ஏசியன் பெயிண்ட்சின் ஒரு சிறிய பட்டாளமே செப்டம்பர் 2 முதலே வேலைகளை முடுக்கி விட்டனர்.

•    டுவான் ஆட்டோமோட்டிவ், சிஅண்ட் எஃப் ஆட்டோமோட்டிவ், சிகோ கோமோஸ், இந்துஜா பவுண்டரீஸ், சான்மினா, ஃபாக்ஸ் கான், நோக்கியா, கபாரோ, ஜே.கே பென்னர், என்விஎச், ஹ÷ண்டாய், ஹீவாசின், ஜி ஸ்டாம் பிங் ஹைடெக், சாரதா மோட்டார்ஸ், பிரைட் ஆட்டோபிளாஸ்ட், சாம்சங் உள்ளிட்ட பல ஆலைத் தொழிலாளர்களிடம் செப்டம்பர் 27 பேரணி பிரசுரம் தரப்பட்டு கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

•    இடையில் யுபி டெக்சில் ஒரு தொழிலாளிக்கு நேர்ந்த விபத்து, ஒரகடம் சிப்காட்டின் டுவான் ஆட்டோமோட்டிவ்  ஒப்பந்தத் தொழிலாளர் போராட்டம், தலித் மாணவர்கள் உயர்கல்வித் தொகையை அரசாணை 92படி வழங்கக் கோரி சென்னையில் நடைபெற்ற போராட்டம் போன்றவற்றிலும் பகுதி முன்னணிகள் தலையீடு செய்தனர்; பங்களித்தனர்.

•    சாம்சங், சிஅண்ட்எஃப், ஆலை வாயில்களில் பிரசுரம் வழங்க, மனித வளத்துறையினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். தோழர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை.

•    பகுதி பொது மக்களிடமும் நிதி வசூல், பிரசுரம் வழங்குதல் திட்டமிடப்பட்டு நடந்தது. ஷிப்ட் முடிந்து, நள்ளிரவு வரையிலும், விடிய விடியவும் சுவரொட்டி ஒட்டுதல், பதாகைகள் நிறுவுதல், பிரச்சார அட்டைகள் தயாரித்தல் என பணிகள் நடைபெற்றன.

•    செப்டம்பர் 27 வந்தது. பகத்சிங்கின் வாரிசுகள், 300 பேர் கலந்து கொண்ட வண்ண மயமான பேரணியை இடி ஓசை முழக்கங்களுடன் நடத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்ட இகக(மாலெ) செயலர் தோழர் இரணியப்பன் பேரணியைத் துவக்கி வைக்க, புரட்சிகர இளைஞர் கழகத்தின் கடலூர் தோழர் தன வேல், தஞ்சை தோழர் ஆனந்த், திருவள்ளூர் தோழர் அன்பு முன்னிலை வகிக்க, திருபெரும்புதூரின் கவனத்தை ஈர்க்கும் விதம் பேரணி எழுச்சி நடை போட்டது.

•    பேரணியைக் கண்ட, பகத்சிங் படத்தைப் பார்த்த பஞ்சாபிய இளைஞர்கள் இருவர் கூட்டத்தில் மேடையேறி மொழிகள் தாண்டி முழக்கங்களில் இணைந்தனர்.

•    எழுச்சி முழக்கமிடுதல், இறுதி வரை கொடி பிடித்து நிற்றல், படை வரிசையாய் செயல்படுதலில், ஏசியன் பெயிண்ட்ஸ் இளைஞர்கள் முன்னணிப் பங்காற்றினர். செங்கொடி பிடிக்க, சமூகத்தை மாற்ற இளைஞர் படை தயாராவதற்கு, செப்டம்பர் 27 நிகழ்ச்சி கட்டியம் கூறியது.
  
•    மேடையில் ஏசியன் பெயிண்ட்ஸ் குணசேகர் முதலாளித்துவத்தை வேரறுக்க கவிதை படித்தார். அகில இந்திய மாணவர் கழக தோழர் சீதா தம் உரை மூலம் ஊராரைக் கூட்டி நிற்க வைத்து கேட்க வைத்தார். தோழர்கள் ராஜேஷ், பழனிவேல், குமாரசாமி உறுதியேற்பு செய்தி சொன்னார்கள். தோழர் பாரதி பகத்சிங் இளம் அரசியல் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தின் சில பகுதிகளை (தீப்பொறியில் பிரசுரமானது) படித்துக் காட்டி கவனம் ஈர்த்தார். தோழர் ராஜகுரு தலைமை தாங்கினார்.

•    புதிய அலை அடிக்கத் துவங்கி உள்ளது. புதுக் காற்று வீசத் துவங்கி உள்ளது.

•    செப்டம்பர் 27க்குப் பிறகு புரட்சிகர இளைஞர் கழக தோழர்கள் இந்துஜா பவுண் டரியில் தொழிலாளர்களின் போராட்டத்தில் பங்கேற்று ஒருமைப்பாடு தெரிவித்தனர்.

•    ஒருவருக்காக அனைவரும், அனைவருக்காக ஒவ்வொருவரும் என்ற பாட்டாளி வர்க்க உணர்வும் கலாச்சாரமும் வேரூன்றும் நம்பிக்கை தெரிகிறது.

•    அக்டோபர் 2 அன்று 130 பேர் வரை கலந்துகொண்ட தொழிலாளர் வர்க்க இயக்கம்: சவால்களும் கடமைகளும் கல்வி வகுப்பு நடைபெற்றது.

•    புதிய அடிப்படைகளில் வேலை துவங்கி விட்டது. பகத்சிங், புரட்சிகரப் போராட்டங் கள் அவனோடு துவங்கவுமில்லை, அவனோடு முடியப்போவதும் இல்லை என்றான். திருபெரும்புதூரின் இளம் தோழர்கள் பகத்சிங்கின் கனவை நெஞ்சில் ஏந்தி உள்ளனர்.

•    குருட்சேத்திரத்தில் பாண்டவர் கவுரவர் போர் நடந்ததாக புராணக் கதைகள் சொல்கின்றன. கவிஞன் கெட்ட போரிடும் உலகினை வேரோடு சாய்க்க வேண்டும் என்றான். கம்யூனிஸ்ட்டுகள் எல்லா அநீதியான போர்களுக்கும் முடிவுகட்ட வர்க்கப் போரைத் தீவிரப்படுத்தச் சொல்கிறார்கள்.

•    உலக முதலாளித்துவம் இந்திய முதலாளித்துவம் போல் திருபெரும்புதூர் முதலாளித்துவம் இறுதி ஆராய்ச்சியில் பலவீனமானது. ஏனெனில், அவர்களிடம் பண பலம் அதிகார பலம் அடியாள் பலம் இருந்தாலும், நிச்சயம் நியாயம் மட்டும் இல்லை.

•    கூலி உழைப்பிற்கும் மூலதனத்திற்கும் இடையிலான தீராத பகைமை, முதலாளித் துவத்தை ஒழித்துக்கட்டுவதன் மூலம்தான் ஓயும். இறுதிப் போரில் வெற்றி ஒரு நாள் இல்லை ஒரு நாள், மக்கள் பெரும்பான்மைக்குக் கிடைக்கும். அதுவரை பல சண்டைகளில் தோற்கலாம், வெற்றி பெறலாம். ஆனால் போராட்டப் பாதை மட்டும் எப்படியும் தொடரும்.

•    மூலதனம் குவிந்துள்ள திருபெரும்புதூரில் பணியாற்றும் பாட்டாளிகள் மத்தியில் இருந்தே, ஒரு பெரிய போர்ப்படையினரும் தளபதிகளும் வருவார்கள்.

Search