சீனப் புரட்சியின் முக்கிய கட்டங்களும் முக்கிய இயல்புகளும்
கட்டுரைத் தொடரின் துவக்க பகுதிகளில் 1924 முதல் 1927 வரை, சீனப்புரட்சியின் உருவாக்க காலம் பற்றி ஏற்கனவே விவாதித் துள்ளோம்.
கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சன் யாட் சென் தலைமையிலான குவாமின்டாங் கின் ஒத்துழைப்பின் அடிப்படையில் இந்த கால கட்டம் வடிவமைக்கப்பட்டது; பிற்போக்கு யுத்தப் பிரபுக்களுக்கு எதிராக கூட்டு ஆயுதப் படையினர் நடத்திய ‘வடக்கு நோக்கிய பயணம்’ என்று அழைக்கப்பட்ட ராணுவ இயக்கத்தில் முக்கிய வெற்றியும் பெற்றது. விந்தை முரணாக, 1927ல், இந்த இயக்கம் ஷாங்கே ஷெக்கின் துரோகத்தில் முடிந்தது; கம்யூனிஸ்ட் - குவாமின்டாங் பகை என்ற கசப்பான அத்தியாயத்தை திறந்து வைத்தது.
1927 முதல் 1936 வரை நடந்த தீவிரமான உள்நாட்டுப் போர் மற்றும் அனைத்தும் தழுவிய விவசாயப் புரட்சிக்கான கட்டத்தை அது திறந்துவிட்டது.
அதைத் தொடர்ந்து 1936ல் இருந்து 1945 வரை ஜப்பானிய எதிர்ப்பு தேசியப் போர் நடந்தது.
சீனப் புரட்சியின் இறுதிக் கட்டம் 1945 முதல் 1949 வரையிலானது. இது சாரத்தில் தீர்மானிக்கிற உள்நாட்டுப் போராக மாறியது.
எனவே, சீனப் புரட்சியை நாம் நான்கு முக்கிய கட்டங்களாக அல்லது காலகட்டங்களாக, அவற்றின் தனித்துவமான இயல்புக்கேற்ப, பிரிக்கலாம். இன்னும் விவரங்கள் பார்க்க வேண்டுமென்றால் ஒவ்வொரு கட்டமும் பல்வேறு துணைக் கட்டங்களில் பிரிக்கப்படலாம்.
எல்லாப் புரட்சிகளையும் போலவே, சீனப் புரட்சியும் பரந்த அளவில் நிகழ்வுகள் நிறைந்ததாக, எண்ணிலடங்கா விவரங்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதாக இருந்தது. விவரங்களுக்குள் விரிவாகச் செல்வதற்கு பதிலாக, முக்கியமான இயல்புகள் மீது கவனம் செலுத்தலாம்.
1. சீனத்தில், வெள்ளை ஆதிக்கத்தால் சுற்றி வளைக்கப்பட்டு, சிவப்பு அதிகாரம் எழுந்ததும் தொடர்ந்ததும் உள்நாட்டுப் போரின்போது (1927 - 1936) சீனப் புரட்சியின் முக்கியமான கட்டமாக இருந்தது. அந்த நிகழ்வுப்போக்கு பின்வரும் காரணிகள் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது.
அ) உள்ளூர் விவசாயப் பொருளாதாரம் மற்றும் பிரித்தாளுகிற ஏகாதிபத்திய சக்திகளின் வெவ்வேறு தளத்திலான தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையிலான ஆளும் வர்க்கம் அல்லது பின்தங்கிய அரைக் காலனிய சீனத்தில் இருந்த வெள்ளை ஆதிக்கத்துக்குள்ளே இருந்த நீடித்த பிளவுகள் மற்றும் மோதல்கள். 1911ல் குடியரசு உருவானதில் இருந்து, இது அரை - காலனிய சீனத்தின் வகைமாதிரி இயல்பாக இருந்தது. பல்வேறு பழைய, புதிய யுத்தப் பிரபுக்கள் குழுக்கள், அந்நிய ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் உள்நாட்டு தரகு முதலாளித்துவம் மற்றும் நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் ஆதரவுடன் ஒன்றுக்கெதிராக மற்றொன்று தொடர் போர் நடத்திக் கொண்டிருந்தன.
ஆ) ஹுனன், குவான்துங், ஹுபே மற்றும் கியான்சி போன்ற, முதலில் சிவப்பு அரசியல் அதிகாரம் எழுந்த, நீடித்த மாகாணங்களில் தொழிலாளர்கள், விவசாயிகள், போர்வீரர்கள் என வெகுமக்கள், 1926 - 1927 முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் ஊடே, பெரும் எண்ணிக்கையில் எழுச்சியுற்றனர்.
நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளிகளுக்கு எதிராக, இந்த பிராந்தியத்தின் பல பகுதிகளில் தொழிற்சங்கங்களும் விவசாய அமைப்புகளும் அரசியல் போராட்டங்களும் தொழிலாளர்களால் விவசாயிகளால் நடத்தப்பட்டன. இந்த இயக்கப்போக்கில் கான்டன் நகரத்தில் மூன்று நாட்களுக்கு மக்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
கிழக்கு மற்றும் தெற்கு ஹுனானில் ஹய்பெங் மற்றும் லாபெங் பகுதிகளில் விவசாயிகளின் சுதந்திரமான ஆட்சி உருவானது. தற்போதைய செம்படை தேசிய புரட்சிகர படையில் இருந்து பிரிந்தது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர் வெகுமக்களின் செல்வாக்கில் ஜனநாயக அரசியல் பயிற்சி பெற்றது.
இ) மக்கள் சிவப்பு அரசியல் அதிகாரம் ஒரு சிறிய பகுதியில் நீண்ட காலத்துக்கு நீடிப்பதும், தேசிய அளவில் புரட்சிகர சூழல் தொடர்ந்து வளர்ந்தபோது, தொடர்ந்து விரிவடைவதும் சாத்தியமானது.
ஈ) போதுமான வலிமை கொண்டு ஒரு முறையான செம்படையின் இருத்தல், சிவப்பு அரசியல் அதிகாரத்தின் இருத்தலுக்கு மற்றொரு காரணமாகும். செம்படை இல்லாமல், செங்காவலர்கள் அல்லது ஆயுதந்தாங்கிய உள்ளூர் சக்திகள் வெள்ளைப் படையை சமாளிக்க முடியாது. சிவப்பு ஆயுதக் குழுக்கள் அதிகபட்சம் நிலப்பிரபுக்களின் தனிப்படையினரை எதிர்கொள்ள முடியும்.
உ) சரியான கொள்கையுடனான வலுவான கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு இருந்தது, சிவப்பு அரசியல் அதிகாரத்தின் இருத்தலுக்கு, வளர்ச்சிக்கு இன்னொரு முக்கிய காரணமாகும்.
2. சீனத்தின் புரட்சிகரப் போர் பின்வரும் இயல்புகளை கொண்டது.
அ) அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி கொண்ட ஒரு பெரிய அரை காலனிய நாட்டில் அது நடத்தப்பட்டது; அதுபோன்ற ஒரு நாடு ஒரு புரட்சியினூடே சென்றது.
ஆ) சீனப் புரட்சியின் எதிரி மிகப்பெரிய சக்தியாக, சக்தி வாய்ந்ததாக இருந்தது.
இ) சீனப் புரட்சியின் கருவியாக இருந்த செம்படை, எண்ணிக்கை, ஆயுதங்களின் தரம் மற்றும் ஆயுதங்களின் அளிப்பு என்ற விசயங்களில் சிறியதாக, பலவீனமானதாக இருந்தது.
ஈ) கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையும் விவசாயப் புரட்சியும் இருந்தன.
இந்த இயல்புகள், சாதகமான மற்றும் கடினமான காரணிகள் சேர்ந்து இருந்ததை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. சீனத்தின் புரட்சிகரப் போரையும் அதன் போர்த்தந்திர மற்றும் செயல்தந்திர கோட்பாடுகளையும் வழிநடத்துவதை தீர்மானித்தன.
இது பின்வரும் கோட்பாடுகளில் முடிவுக்கு வருவதற்கு உதவியது.
போர்த்தந்திர திசைவழியை சரியாக தீர்மானிக்க,
• தாக்குதல் நிலையில் இருக்கும்போது சாகசவாதத்தை எதிர்க்க வேண்டும்; தற்காப்பு நிலையில் இருக்கும்போது பழமைவாதத்தை எதிர்க்க வேண்டும்; ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு மாறும்போது விரைந்தோடும் போக்கை எதிர்க்க வேண்டும்.
• செம்படையில், அதன் கெரில்லா இயல்பை அங்கீகரிக்கும் அதேநேரம் கெரில் லாவாதத்தை எதிர்க்க வேண்டும்.
• நீடித்த பிரச்சாரம் மற்றும் துரித முடிவெடுக்கும் போர்த்தந்திரத்தை எதிர்க்க வேண்டும்; நீடித்த போர் என்ற போர்த் தந்திரத்தையும் துரித முடிவெடுக்கும் இயக்கத்தையும் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.
• ஒரே முடிவிலான போர் வழியை, நிலை கொண்ட போர் முறையை எதிர்க்க வேண்டும்; நெளிவுசுளிவான போர் வழி மற்றும் நகருகிற போர் முறையை கடை பிடிக்க வேண்டும்.
• எதிரியை வெறுமனே தோற்கடிப்பதற்காக மட்டுமே போரிடுவதை எதிர்க்க வேண்டும்; எதிரியை அழித்தொழிப்பதற்காக போரிடுவதை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.
• முழுமுற்றூடான மத்தியப்படுத்தப்பட்ட ஆணை அதிகாரத்தை எதிர்க்க வேண்டும்; ஒப்பீட்டு ரீதியில் மத்தியப்படுத்தப்பட்ட ஆணை அதிகாரத்தை கடைபிடிக்க வேண்டும்.
• தூய்மையான ராணுவ கண்ணோட்டத்தை, சுற்றியலைகிற கலகக்காரர்களின் முறைகளை எதிர்க்க வேண்டும்; சீனப் புரட்சியின் பிரச்சாரகராக, அமைப்பாளராக செம்படையை அங்கீகரிக்க வேண்டும்.
• கொள்ளையர்கள் அல்லது யுத்தப் பிரபுக்கள் வழிகளை எதிர்க்க வேண்டும்; முறையான எல்லைகளுக்குள்ளான ஜனநாயகத்துடன் இணைந்த அரசியல் ஒழுங்கை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.
• தனிமைப்படுத்தும் கொள்கையை எதிர்க்க வேண்டும்; சாத்தியமுள்ள அனைத்து கூட்டாளிகளையும் வென்றெடுக்கும் கொள்கையை உறுதிப்படுத்த வேண்டும்.
• செம்படையை அதன் பழைய கட்டத்தில் நிறுத்தவதை எதிர்க்க வேண்டும்; அதை உயர்ந்த கட்டத்திற்கு வளர்த்தெடுக்க பாடுபட வேண்டும்.
3. பின்வரும் முக்கியமான அம்சங்களுடன் கெரில்லா போர்த்தந்திரம் கடைபிடிக்கப்பட்டது.
அ) வெகுமக்களை எழுச்சியுறச் செய்ய நமது சக்திகளை பிரித்தனுப்ப வேண்டும்; எதிரியை எதிர்கொள்ள நமது சக்திகளை ஒன்று குவிக்க வேண்டும்.
ஆ) எதிரி முன்னேறும்போது நாம் பின்வாங்க வேண்டும்; எதிரி முகாம்களை நாம் துன்புறுத்த வேண்டும்; எதிரி களைப்படையும் போது நாம் தாக்க வேண்டும்; எதிரி பின்வாங் கும்போது நாம் தொடர வேண்டும்.
இ) ஸ்திரமான அடித்தளத்தை விரிவாக்க அலைஅலையாக முன்னேறும் கொள்கையை கடைபிடிக்க வேண்டும்; வலிமையான எதிரி பின்தொடரும்போது சுற்றிவளைக்கும் கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.
ஈ) சாத்தியப்பட்ட குறுகிய நேரத்தில், சாத்தியப்பட்ட சிறப்பான வழிகளில், பெருமளவு வெகுமக்களை எழுச்சியுறச் செய்ய வேண்டும்.
இந்த செயல்தந்திரங்கள் ஒரு வலையை விரிப்பது போன்றவை. எந்த நேரமும் அதை விரிப்பதற்கும் இழுப்பதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். வெகுமக்களை வென்றெடுக்க அதை நாம் பரந்த அளவில் விரிக்க வேண்டும்; எதிரியை எதிர்கொள்ளும்போது இழுத்துக்கொள்ள வேண்டும்.
‘நகரும் போர்முறையில் எதிரிகளை ஒன்றன்பின் ஒன்றாக அழிக்க, ‘எதிரியை ஆழமாகக் கவர்ந்து இழு’, மேலோங்கிய சக்திகள் மீது கவனம் குவி, ‘எதிரியின் பலவீனமான அம்சங்களை தேர்ந்தெடு, எதிரியின் ஒரு பகுதியையோ அல்லது பெரும் பகுதியையோ அழித்து விட முடியும் என்று நிச்சயமாய் கருதும்போது போரிடு
4. கம்யூனிஸ்ட் தலைமையிலான செம்படை மற்றும் அடித்தளங்களுக்கு எதிரான ‘சுற்றிவளைப்பது மற்றும் தாக்குவது’ இயக்கம், மற்றும் இந்த இயக்கத்துக்கு எதிரான இயக்கம் ஆகியவை சீன உள்நாட்டுப் போரின் பிரதான வடிவத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
இந்த வடிவம் பத்தாண்டுகளுக்கு (1927 - 1937) மாறவே இல்லை. மாறிமாறி தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆகியவற்றுடன் இணைந்து இயக்கம் மற்றும் எதிர்இயக்கம் என்னும் நிகழ்வுப் போக்கு மீண்டும் மீண்டும் நடந்தது. ஆனால், இயக்கத்தின், போரின் உள்ளடக்கம் என்ற பொருளில், ஒன்றையே மீண்டும் மீண்டும் செய்வதாக அல்லாமல் ஒவ்வொரு முறையும் வெவ்வேறாக இருந்தது. ஒவ்வொரு இயக்கம், எதிர்இயக்கத்தின்போதும் அதன் மட்டம் பெருமளவு அதிகரித்தது; சூழல் மேலும் சிக்கலானது; போர் இன்னும் தீவிரமடைந்தது.
மீண்டும் மீண்டும் நிகழ்ந்த இந்த ‘சுற்றி வளைப்பது மற்றும் தாக்குவது’ இயக்கத்தை எதிர்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சி ஒரு சாரமான போர்த்தந்திரத்தை கடைபிடித்தது.
பின்வரும் அணுகுமுறை அடிப்படையில் அது இருந்தது;
ஒரு புரட்சியோ அல்லது புரட்சிகர போரோ தாக்குதல்தன்மை கொண்டது எனும் கூற்று சரியே. ஒரு புரட்சி, ஒரு சிறிய சக்தியாக இருந்து பெரிய சக்தியாக, அரசியல் அதிகாரம் இன்மையில் இருந்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, செம்படை இல்லாததில் இருந்து செம்படையை உருவாக்கி, புரட்சிகர அடித்தளங்கள் இல்லாமையில் இருந்து அவற்றை நிறுவி, எழுச்சியுற்று வளர்ச்சியுறும்போது, தாக்குதல்தன்மை கொண்டதாகத்தான் இருக்கும்; பழமையானதாக இருக்காது.
ஆனால், ஒரு புரட்சியோ அல்லது புரட்சிகர போரோ தாக்குதல்தன்மை கொண்டது என்பதுடன் தற்காப்பு நிலை, பின்வாங்குதல் ஆகியவற்றையும் உள்ளடக்கியது எனும் கூற்றே முழுமையாக சரியாக இருக்கும். தாக்குவதற்காக தற்காப்பில் இறங்குவது, முன்னேறுவதற்காக பின்வாங்குவது, போர் முனைக்கு எதிராக நகர்வதற்காக பக்கவாட்டு பகுதிகளுக்கு எதிராக நகர்வது, நேராக செல்வதற்காக சுற்றி வளைத்துச் செல்வது - இது பல நிகழ்வுப்போக்குகளில் இயக்கப்போக்கில் தவிர்க்க முடியாதது.
இந்தப் போர்த்தந்திர அணுகுமுறை, செயலூக்கமிக்க மற்றும் செயலற்ற தற்காப்பு, மோதலுக்கு தயாராவது, போர்த்தந்திர பின்வாங்குதல் மற்றும் எதிர்த்தாக்குதல், படைத் துருப்புக்களை ஒன்றுகுவித்தல், நகரும் போர்முறை, துரித முடிவெடுக்கும் போர், அழித்தொழிப்பது ஆகியவற்றை கடைபிடிப்பது போன்ற குறிப்பான படிகளின் ஊடே செலுத்தப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டின் 1930களின் துவக்க காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக, செம்படையையும் அடித்தளங்களையும் நொறுக்க, அடுத்தடுத்து அய்ந்து சுற்றி வளைப்பது மற்றும் தாக்குவது இயக்கங்களை சியாங்கே ஷெக் நடத்தினார்.
அவற்றை அடுத்த இதழில் பார்க்கலாம்.