தேசத்தின் தலைநகரத்தில் உள்ள, உயர் கல்விக்கான இரண்டு முக்கிய மய்யங்களான, ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்திலும் டில்லி பல்கலை கழகத்திலும் செப்டம்பர் 13 அன்று ஒரே நேரத்தில் மாணவர் தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஜவஹர்லால் நேரு பல்கலை கழகம் மீண்டும் ஒரு முறை மிகப்பெரிய அளவில் அகில இந்திய மாணவர் கழகத்துக்கு வாக்களித்தது.
அதே அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விதத்தில் டில்லி பல்கலை கழக மாணவர்களும் அகில இந்திய மாணவர் கழகத்தின் பட்டியலுக்கு மிகப்பெரிய ஆதரவு தந்து, மரபுரீதியாக இருதுருவ நிலை கொண்ட டில்லி பல்கலை கழகத்தில் ஏபிவிபி மற்றும் என்எஸ்யுஅய் ஆகியவற்றுக்கு எதிராக ஒரு சக்திவாய்ந்த போட்டியாளராக அகில இந்திய மாணவர் கழகத்தை எழச் செய்தனர். இந்த இரண்டு வளாகங்களிலும் இது வரை அகில இந்திய மாணவர் கழகம் பெற்ற வாக்குகளில் இந்த முறை பெற்றதே அதிகம்.
மாணவர் மத்தியில், ஒரு சக்திவாய்ந்த முற்போக்கு மாணவர் இயக்கத்துக்கான அதிகரித்து வரும் விருப்பத்தை இது தெளிவாகக் காட்டுகிறது. ராகுல் காந்தி மற்றும் நரேந்திர மோடி என்ற ஆளும் மேட்டுக்குடியினரின் ‘முன்மாதிரி’ ‘இளைஞர் திருவுரு’ என்றழைக்கப்படுபவை பற்றிய ஊடகக் கூக்குரலை நிராகரித்து, ஆயிரக்கணக்கான மாணவர் கள் புரட்சிகர இடதுசாரி இயக்கத்தின் மாணவர் மேடையான, அகில இந்திய மாணவர் கழகத்தின் மீது தமது நம்பிக்கையை தெரிவித்துள்ளனர்.
இருபது ஆண்டுகளுக்கு முன், பாஜக மத வெறி ரத்த வெள்ளத்தில் நாட்டை மூழ்கடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தபோது, உலகம் முழுவதும் உள்ள முதலாளித்துவ கருத்தியலாளர்கள் சோவியத் யூனியன் வீழ்ச்சியில் மகிழ்வுற்றிருந்தபோது, அகில இந்திய மாணவர் கழகம், இந்திப் பகுதியில் இருந்த வளாகங்களில் தனது வருகையை அறிவித்தது. அகில இந்திய மாணவர் கழக செயல்வீரர்கள், தங்கள் அன்புக்குரிய தியாகி தோழர் சந்திரசேகரின் நிறைவேற்றப்படாத கனவுகளை நிறைவேற்ற அரசு நிர்வாகத்தின் பகை, மாஃபியா வன்முறை ஆகியவற்றை எதிர்கொண்டனர்.
இன்று நாடு ஓர் ஆழமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கும்போது, தற்போதைய அரசாங்கத்தின் வழி மரபு, ஊழல், அனைத்தும் தழுவிய செயலின்மை ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும்போது, சங் பரிவார் இந்தக் கட்டத்தை பயன்படுத்திக் கொண்டு தனது மதவெறி மற்றும் கார்ப்பரேட் - பாசிச நிகழ்ச்சிநிரலை முன்னகர்த்த மூர்க்கத்தனமாக முயற்சி செய்யும்போது, அகில இந்திய மாணவர் கழகம் நிகழ்த்தியிருக்கிற முன்னேற்றம், தீவிரமான மாணவர் இயக்கத்துக்கு மட்டுமின்றி, ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக மாற்றம் ஆகியவை பற்றி அக்கறை கொண்டுள்ளோருக்கும் ஒரு வெற்றியாகும்.
விவசாய நிலங்கள், கனிம வளங்கள், ஆறுகள், வனங்கள் ஆகியவற்றைப்போல், உயர்கல்வியும் இன்று பெரிய கார்ப்பரேட் - ஏகாதிபத்திய தாக்குதலை எதிர்கொள்கிறது. கண்மண் தெரியாமல் வர்த்தகமயம், கட்டண உயர்வு மற்றும் நான்காண்டுகால பட்டப் படிப்பு ஆகியவை டில்லி பல்கலை கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது திணிக்கப்பட்டது. கார்ப்பரேட் - ஏகாதிபத்திய நலன்களுக்கு ஏற்ப, உயர்கல்வியின் இயக்கப்போக்கையும் உள்ளடக்கத்தையும் சீர்குலைக்க கட்டமைக்கப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதேநேரம், பாடத் திட்டத்தை இறுக்கமாக கட்டுப்படுத்த, வளாக ஜனநாயகத்தை முடக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. கல்வியை ஜனநாயகப் படுத்துவது, கல்வியியல் சுதந்திரம் மற்றும் அதிசிறந்த நிலை ஆகியவற்றுக்காகவும், கார்ப்பரேட் மறுகட்டமைப்பு, காவிமய சீர்குலைவு மற்றும் இறுக்கமாகக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு எதிராகவும் அகில இந்திய மாணவர் கழகம் போராட்டக்களத்தில் முன்னணியில் நின்றது. அதன் விடாப்பிடியான போராட்டங்கள் இந்தத் தேர்தல் முடிவுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
உயர்கல்வி தளம் ஒரு தனித்த தீவல்ல; வளாக ஜனநாயகம் மற்றும் கல்வியியல் சுதந்திரம் ஆகியவற்றுக்கான போராட்டம், மக்கள் உரிமைகள் மற்றும் சமூக மாற்றத்துக்கான பெரிய போராட்டத்துடன் இணைந்து செல்ல வேண்டும். அகில இந்திய மாணவர் கழகம், இந்தியாவிலும், உலகின் மற்ற இடங்களிலும் உள்ள மாணவர் இயக்கத்தின் மிகச் சிறந்த வழிமரபில் வேர்கொண்டுள்ள இந்தக் கோட்பாட்டை உறுதியாக உயர்த்திப் பிடிக்கிறது; அதன் நிகழ்ச்சிநிரல் எப்போதும் பரந்த சமூக பிரச்சனைகள் பற்றி நன்கு அறிந்துள்ளது. சமீப காலங்களில், டில்லி, மக்கள் போராட்டங்களின் சக்திவாய்ந்த கோட்டையாக எழுந்துள்ளது; வெகுமக்கள் செயலூக்கத்தின் மிகவும் துடிப்பான, துணிச்சல்மிக்க, உறுதியான போராட்ட மேடையாக அகில இந்திய மாணவர் கழகம் இருந்துள்ளது.
கார்ப்பரேட் சூறையாடலாக இருந்தாலும், பெண்கள் மீதான தாக்குதலாக இருந்தாலும், எல்லா முக்கிய பிரச்சனைகளிலும் அகில இந்திய மாணவர் கழகம், சுதந்திரம், ஜனநாயகம், நீதி ஆகியவற்றுக்கான போராட்டத்தில் முன்னணியில் இருந்துவருகிறது. அகில இந்திய மாணவர் கழகத்துக்கான வாக்கு, மாணவர் இயக்கம் பரந்த மக்கள் இயக்கத்துடன் கொண்டுள்ள இணைப்புக்கு கிடைத்த வாக்கு.
செப்டம்பர் 13 தேர்தல்களில் அகில இந்திய மாணவர் கழகத்தின் செயல்பாடு, புரட்சிகர மாணவர் இயக்கத்தின் துடிப்பான எதிர்காலத்துக்கான உத்தர வாதத்தை கொண்டுள்ளது. அகில இந்திய மாணவர் கழகம் இந்த வேகத்தை தக்க வைக்க முடியுமானால், டில்லி பல்கலை கழகத்தில் ஏபிவிபி - என்எஸ்யுஅய் ஏகபோகத்துக்கு அது முடிவு கட்ட முடியும்; தற்போதைய முதலாளித்துவ அரசியல் பிடியில் இருந்து டில்லி பல்கலை கழக வளாகத்தில் உள்ள மாணவர்களின் விருப்பத்தையும் செயலூக்கத்தையும் விடுவிக்க முடியும். ஜவஹர்லால் நேரு பல்கலை கழகம் இடதுசாரி மாணவர் அரசியலின் கோட்டையாக மரபுரீதியாக கருதப்படுகிறது.
ஆனால், கார்ப்பரேட் ஆதரவு சீர்திருத்தங்கள், மதவெறி, மண்டல் எதிர்ப்பு வெறி, சோவியத்துக்குப் பிந்தைய முதலாளித்துவ வெற்றிவாதம் என்ற சகாப்தத்தில் வலதுசாரிகள் வளாகத்தில் எந்த வகையிலும் உள்நுழைவதை அகில இந்திய மாணவர் கழகம்தான் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியது.
அகில இந்திய மாணவர் கழகத்தின் சக்தி வாய்ந்த இருத்தலும் வளாகத்தில் ஜனநாயக மனநிலை அதிகரித்ததும், இககமாவின் மாணவர் அணியான எஸ்எஃப்அய்க்குள் கலகத்தையும் பிளவையும் உருவாக்கும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தின. 2012 தேர்தல்களில், ஜவஹர்லால் நேரு பல்கலை கழகம் எஸ்எஃப்அய்யில் கலகம் செய்து வெளியேறியவர்களுக்கு ஒரு வாய்ப்பு தந்தது. ஆனால், புதிய அமைப்பு மாணவர் இயக்கத்தின் தீவிர நிகழ்ச்சி நிரலை முன்னகர்த்தத் தவறிவிட்டது. இப்போது, தேசிய தலைநகரத்தில் அகில இந்திய மாணவர் கழகம், சர்ச்சைக்கிடமின்றி, இடதுசாரி மாணவர் இயக்கத்தின் தலைமை தாங்கும் பதாகையாக எழுந்துள்ளது; அந்தப் பாத்திரத்திற்கேற்ப இனி அது செயலாற்ற வேண்டும். டில்லியில் அகில இந்திய மாணவர் கழகம் வலுப்பெறுவது, வளாகத்துக்கு அப்பாலும் ஆர்வத்தைத் தூண்டும் சாத்தியப்பாடுகளுக்கான நம்பிக்கையை தோற்றுவிக்கிறது. ஊழல் எதிர்ப்பு இயக்கம் மற்றும் நிர்பயா மிருகத்தனமாக பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பின்னணியில் எழுந்த இளைஞர் எழுச்சி ஆகியவை, இந்த சாத்தியப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளன.
இந்தியாவின் பளபளப்பான தேசிய தலைநகரப் பகுதிக்குள் டில்லி விரிவடையும் கதை பிற்போக்கு மற்றும் ஒடுக்குமுறை அம்சங்களால் நிறைந்துள்ளது. இந்தப் பகுதி, மனம்போன போக்கிலான நிலப்பறி மற்றும் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றுதல், தனியார்மயம் மற்றும் தொழில்துறை ஜனநாயக மறுப்பு, காப்பஞ்சாயத்து மற்றும் கவுரவக் கொலைகள், மதவெறி வன்முறை மற்றும் சமூக ஒடுக்குமுறை, போலி மோதல் படுகொலைகள், வேட்டையாடுதல்கள் மற்றும் எதிர்ப்புக்களை நசுக்குதல் ஆகியவற்றால் குறிக்கப்படுகிறது.
இந்த அநீதிகளும் ஒடுக்குமுறைகளும் கேள்விக்குட்படுத்தப்படாமல் இல்லை. போராட்டத்தின் இந்த பரந்த தளத்தில், மாணவர் சக்தியின் துணிச்சலான அறுதியிடலை இந்தியா எதிர்நோக்குகிறது. இது மட்டுமே, இந்தியாவின் இறுதி இளைஞர் திருவுருவான பகத்சிங் வழிமரபுக்கும் ‘புரட்சி’ பற்றிய அவன் கனவுக்கும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.