COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, October 15, 2013

மலையம்பாளையம் மக்கள் நல்வாழ்விற்கான போராட்டத்தில் அவிதொச

நாமக்கல் மாவட்டம்,  ராசிபுரம் தாலுக்கா, மலையம்பாளையம் கிராமத்தில் அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் செயல்பட்டுவருகிறது. 200க்கும் மேற்பட்டோர்  உறுப்பினர்களாக  உள்ளனர். 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலி குறைப்பிற்கு எதிராக நடைபெற்ற  வேலை  நிறுத்தப் போராட்டத்தில்  கடந்த ஆண்டில் 15 நாட்கள் பங்கேற்றனர்.

    தலித் மக்கள் குடியிருக்கிற உட்கிடை கிராமமான மலையம்பாளையத்திற்கு அடிப்படை வசதிகளோ, மருத்துவ வசதிகளோ எதுவும் கிடையாது. எனவே மக்கள் சுகாதார சீர்கேடு காரணமாக விஷக் காய்ச்சலுக்கு உள்ளானார்கள். 8 கி.மீ. பயணம் செய்து அத்தனூர் ஆரம்ப சுகாதார நிலையம் அடைவதற்கு சரியான பஸ் வசதியும் கிடையாது.

செப்டம்பர் 29 அன்று அயாலா சங்க மாவட்ட அமைப்பாளர் பா.கணேசன் தலைமையில் போராட திட்டமிடப்பட்டது. தொலைக் காட்சிகளும் மக்களுடைய பரிதாப நிலைமையையும், அரசாங்கத்தின் அலட்சிய போக்கையும் அம்பலப்படுத்தின. சங்க நிர்வாகிகள் சங்கீதா, சித்ரா, சுமதி ஆகியோர் உடனடியாக மருத்துவ முகாம் அமைக்கவில்லையென்றால் அத்தனூர் மருத்துவ மனைக்கு பூட்டு போடுவோம் என எச்சரித்தனர். நிர்வாகம் பணிந்தது. அடுத்த நாளே ஆரம்பகட்ட சிகிச்சைகளிலும், பரிசோதனையிலும் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் என ஒரு வார காலத்திற்கு மருத்துவர்கள் வந்து சிகிச்சையை மேற்கொண்டனர். பஞ்சாயத்து நிர்வாகம் கிராமத்தை சுத்தம் செய்ததோடு, துப்புரவு தொழிலாளர்களைக் கொண்டு சுகாதாரச் சீர்கேடுகளை போக்குவதில் ஈடுபட்டுள்ளது.

மலையம்பாளையம் கிராமத்தில் தற்போது ஜி.யசோதாவை பொறுப்பாளராக கொண்டு கட்சி செயல்வீரர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்சியை அறிமுகப்படுத்தி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் மோகனசுந்தரம் பேசிய கூட்டத்தில் 26 பேர் மாலெ கட்சியில் உறுப்பினராக சேர்ந்துள்ளனர்.

Search