COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, October 1, 2013

பார்வையற்ற மாணவர், பட்டதாரிகள் போராட்டத்திற்கு அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம் ஆதரவு

போராட்டத்தில் இருக்கிற பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளை 18.09.2013 அன்று அவர்கள் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்த நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் சந்தித்த புரட்சிகர இளைஞர் கழக தேசிய செயலாளர் தோழர் பாரதி, அகில இந்திய மாணவர் கழகம் மற்றும் புரட்சிகர இளைஞர் கழகத்தின் ஆதரவைத் தெரிவித்தார்.

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்க அலுவலகத்திற்கு சென்ற தோழர் பாரதி மற்றும் ஜனநாயக வழக்கறிஞர் சங்க தோழர் விஜய் பார்வையற்ற மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் திரு.நாகராஜனை சந்தித்து போராட்டம் குறித்து கலந்துரையாடினர்.

ஊடகத் தரப்பினர் திரு.நாகராஜனை தொடர்பு கொண்டு உங்களுடைய போராட்டத்திற்கு ஆதரவாக வேறு அமைப்புகள் உள்ளதா என்று கேள்வி எழுப்பியபோது, அவரது தரப்பில் அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம் தங்களுக்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தார். அய்சா, ஆர்ஒய்ஏ போராட்டத்துக்கு ஆதரவாக சுவரொட்டி பிரச்சாரம் மேற்கொண்டது.

Search